search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eden Hazard"

    கால்பந்து லீக் கோப்பை தொடரில் ஈடன் ஹசார்டின் அபார கோலால் லிவர்பூல் அணியை 2-1 என வீழ்த்தியது செல்சி. #LiverPool #Chelsea
    கால்பந்து லீக் கோப்பை 3-வது சுற்றில் லிவர்பூல் - செல்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் இரு அணிகளும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

    ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் கோல் அடித்தார். 79-வது நிமிடத்தில் செல்சி அணியின் எமர்சன் பால்மியெரி கோல் அடிக்க 1-1 ஸ்கோர் சமநிலைப் பெற்றது. ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் ஈடன் ஹசார்டு கோல் அடிக்க செல்சி 2-1 என வெற்றி வெற்றி பெற்றது.
    செல்சியை அணியை விட்டு வெளியேற மாட்டேன் என்று அட்டக்கிங் மிட்பீல்டர் ஈடன் ஹசார்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். #Chelsea
    பெல்ஜியம் கால்பந்து அணியின் கேப்டன் ஈடன் ஹசார்டு. அட்டக்கிங் மிட்பீல்டர் ஆன இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். 2018 சீசனோடு ரியல் மாட்ரிட் அணியில் இருந்து கிரிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறியுள்ளார்.

    இதனால் தரமான வீரரை களம் இறக்க வேண்டும் என்று ரியல் மாட்ரிட் விரும்பியது. இதனால் ஈடன் ஹசார்டை இழுக்க முயற்சி செய்தது. செல்சி இவரை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. என்றாலும் பேச்சுவார்த்தை நீடித்துக் கொண்டே சென்றது. ஆனால் இங்கிலாந்து பிரீமியர் தொடருக்கான வீரர்கள் மாற்றம் டெட் லைன் தேதி முடிவடைந்தது.



    இதனால் செப்டம்பர் மாதம் டிரான்ஸ்பர் நேரத்தின்போது ஈடன் ஹசார்டு ரியல் மாட்ரிட் அணிக்குச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2018-19 சீசன் முழுவதும் செல்சிக்காகத்தான் விளையாடுவேன் என்று ஹசார்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேவேளையில் நீண்ட காலமாக செல்சியில் இருப்பேன் என்பதை உறுதியாக கூற இயலாது என்று தெரிவித்தார்.

    வாரத்திற்கு 3 லட்சம் பவுண்டிற்கு புதிய ஒப்பந்தத்துடன் செல்சி அவரை தக்கவைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
    பெல்ஜியம் கேப்டனும், செல்சி வீரரும் ஆன ஈடன் ஹசார்டை 1527 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ய இறுதி கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது ரியல் மாட்ரிட். #RealMadrid #RMFC
    பெல்ஜியம் கால்பந்து அணி கேப்டன் ஈடன் ஹசார்டு. அட்டக்கிங் மிட்பீல்டரான இவர் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். 208 போட்டிகளில் விளையாடி 69 கோல் அடித்துள்ளார். 27 வயதாகும் ஹசார்டு பெல்ஜியம் அணிக்காக 2008-ல் இருந்து விளையாடி வருகிறது. 92 ஆட்டங்களில் 25 கோல் அடித்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது யுவுான்டஸ் அணிக்கு டிரான்ஸ்பர் ஆகியுள்ளார். மேலும் சில வீரர்களை வெளியேற்ற ரியல் மாட்ரிட் முடிவு செய்துள்ளது.



    இதனால் ஈடன் ஹசார்டை வாங்க ரியல் மாட்ரிட் விருப்பம் தெரிவித்தது. இதுகுறித்து செல்சியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 170 மில்லியன் பவுண்டுக்கு (1527 கோடி ரூபாய்) வாங்க ரியல் மாட்ரிட் தயாராக இருப்பதாக தெரிவித்தது.

    மேலும் வருடத்திற்கு 13 மில்லியன் பவுண்டு (117 கோடி ரூபாய்) சம்பளம் கொடுக்கவும் தயார் என்று கூறியது. இதனால் ஈடன் ஹசார்டு ரியல் மாட்ரிட் அணிக்கு மாறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. #RealMadrid #chelsea #EdenHazard #ரியல்மாட்ரிட் #செல்சி #ஈடன்ஹசார்டு
    ரொனால்டோ வெளியேறியதால் ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்க ரியல் மாட்ரிட் தயாராகி வருகிறது. #Realmadrid #Hazard
    போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ (வயது 33) உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 9 ஆண்டுகளாக லா லிகா ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது சம்பள பிரச்சனை காரணமாக ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி, இத்தாலியின் யுவான்டஸ் அணியில் இணைந்துள்ளார். ரியல் மாட்ரிட் அணியின் நம்பிக்கை தூணாக இருந்த ரொனால்டோ வெளியேறியதால், அதற்குப் பதிலாக மாற்று வீரரை ரியல் மாட்ரிட் தேடிவருகிறது.

    இந்நிலையில் பெல்ஜியம் அணி கேப்டனான ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டு (1353 கோடி ரூபாய்) கொடுத்து வாங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.



    27 வயதாகும் ஈடன் ஹசார்டு தலைசிறந்த அட்டக்கிங் மிட்பீல்டர் ஆவார். மேலும் வேகமாக ஓடுவதில் வல்லவர். அத்துடன் பந்தை பாஸ் செய்வதில் வல்லவர். இவரை சூப்பர் பாஸ்ஸர் (Super Passer)  என்றும் அழைப்பதுண்டு.

    கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக 208 போட்டிகளில் விளையாடி 69 கோல் அடித்துள்ளார். பெல்ஜியம் அணிக்காக 91 போட்டிகளில் விளையாடி 24 கோல்கள் அடித்துள்ளார்.
    ×