search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "education apps"

    ஸ்மார்ட்போனில் செயலிகள் பயன்படுத்தப்படும் விதம் பற்றி மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் இந்தியர்கள் இந்த மாதிரி செயலிகளுக்கு செலவழிக்க அதிகம் விரும்புவது தெரியவந்துள்ளது. #Apps



    கிரே மேட்டர்ஸ் கேபிட்டல் நிறுவனம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் சுமார் 89 சதவிகித இந்தியர்கள் கல்வி சார்ந்த செயலிகளை கட்டணம் செலுத்தி பயன்படுத்த விரும்புவது தெரியவந்துள்ளது.

    மேலும் இந்தியர்கள் 25 எம்.பி.க்கும் அதிக மெமரி கொண்ட செயலிகளை டவுன்லோடு செய்ய விரும்புவதில்லை. 18 முதல் 25 வயதில் இருக்கும் இந்திய மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு அதிகளவு தயாராகி வருவதாகவும், இதற்கென அவர்கள் போட்டி தேர்வு மற்றும் வகுப்பறை பயிற்சி சார்ந்த செயலிகளை அதிகம் இன்ஸ்டால் செய்கின்றனர்.

    இவர்களில் சுமார் 85 சதவிகிதம் பேர் மாதம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.250 வரை செயலிகளுக்கு கட்டணமாக செலுத்த தயாராக இருக்கின்றனர். ஆய்வில் பங்கேற்ற பெற்றோர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் தங்களது குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் செயலிகளுக்கு மாதம் ரூ.250க்கும் அதிகமாக செலவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.



    மீதமிருக்கும் 50 சதவிகிதம் பெற்றோர்கள் தங்களால் மாதம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.250 வரை செலவிட முடியும் என தெரிவித்துள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் செயலிகளின் தரவுகள் தங்களது உள்ளூர் மொழியில் இருப்பதை அதிகம் விரும்புவதாக தெரிவித்தனர்.

    இளம் குழந்தைகளின் கல்வியறிவு, குறிப்பாக அவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் வழிகளில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றனர். 

    இத்துடன் ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் எளிதில் பணியில் சேர்ந்துவிட முடியும் என்பதை தாண்டி, அதனை பணியிடங்களில் எவ்வாறு சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என அறிந்து கொள்வதே பலரின் முக்கிய குறிக்கோளாக மாறியிருக்கிறது.
    ×