search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egmore hospital"

    • 300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் ஒரு குழந்தையுடன் குறைந்தது 4 பேர் வருகிறார்கள்.
    • குப்பை தொட்டிகள் வைத்தாலும் அதை பயன்படுத்துவதில்லை என்று துப்புரவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் சிகிச்சை பெற வருகிறார்கள். தினமும் 100 குழந்தைகள் குறையாமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அவர்களுடன் உறவினர்களும் வருவதால் மருத்துவமனை வார்டுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கூட்டமாக உள்ளது.

    300 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் ஒரு குழந்தையுடன் குறைந்தது 4 பேர் வருகிறார்கள். அவர்கள் பகலில் அங்குள்ள மரத்தடியில் தங்குகிறார்கள். இரவில் அங்குள்ள பார்வையாளர்கள் கேலரியில் தூங்குகிறார்கள். சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.

    இதனால் மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக துப்புரவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையுடன் வரும் உறவினர்கள் வராண்டாவிலேயே சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டதும் வாழை இலைகளை சுருட்டி அந்த பகுதியிலேயே வீசி விடுகிறார்கள்.

    குப்பை தொட்டிகள் வைத்தாலும் அதை பயன்படுத்துவதில்லை என்று துப்புரவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முன்பு டோக்கன் முறை இருந்தது. ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்து தற்போது கூட்டத்தை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. கட்டிடம் தயாரானதும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

    • 300 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் ஒரு குழந்தையுடன் குறைந்தது 4 பேர் வருகிறார்கள்.
    • குழந்தையுடன் வரும் உறவினர்கள் வராண்டாவிலேயே சாப்பிடுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் சிகிச்சை பெற வருகிறார்கள். தினமும் 100 குழந்தைகள் குறையாமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அவர்களுடன் உறவினர்களும் வருவதால் மருத்துவமனை வார்டுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கூட்டமாக உள்ளது.

    300 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் ஒரு குழந்தையுடன் குறைந்தது 4 பேர் வருகிறார்கள். அவர்கள் பகலில் அங்குள்ள மரத்தடியில் தங்குகிறார்கள். இரவில் அங்குள்ள பார்வையாளர்கள் கேலரியில் தூங்குகிறார்கள். சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.

    இதனால் மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக துப்புரவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையுடன் வரும் உறவினர்கள் வராண்டாவிலேயே சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டதும் வாழை இலைகளை சுருட்டி அந்த பகுதியிலேயே வீசி விடுகிறார்கள்.

    குப்பை தொட்டிகள் வைத்தாலும் அதை பயன்படுத்துவதில்லை என்று துப்புரவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முன்பு டோக்கன் முறை இருந்தது. ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்து தற்போது கூட்டத்தை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. கட்டிடம் தயாரானதும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வழக்கம்போல் பணிக்கு வந்த ராஜன் மருந்து வழங்கும் அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • சக ஊழியர்கள் எழும்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனர் ராஜன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    வழக்கம்போல் பணிக்கு வந்த திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த ராஜன் மருந்து வழங்கும் அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சக ஊழியர்கள் எழும்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எழும்பூர் ஆஸ்பத்திரியில் 625 கிராம் எடையில் பிறந்த சிறிய குழந்தைக்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சையால் 2 கிலோ எடை அதிகரித்துள்ளது.
    சென்னை:

    காரைக்குடியை சேர்ந்த சந்தானலட்சுமி-சிவக்குமார் தம்பதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

    பேறு காலத்தில் சந்தான லட்சுமிக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 7 மாதத்தில் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால் 625 கிராம் எடை மட்டுமே இருந்தது.

    மேலும் குழந்தையின் உள் உறுப்புகளும் சரிவர வளர்ச்சி அடையவில்லை. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அந்த குழந்தையை பெற்றோர் சேர்த்தனர். குழந்தைக்கு சுவாசக்கோளாறு பிரச்சினை இருந்ததால் செயற்கை சுவாச கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் உயர் சிகிச்சை காரணமாக தற்போது அந்த குழந்தையின் எடை 2 கிலோவாக உயர்ந்துள்ளது. குழந்தை ஆரோக்கியமாக இருந்து வருவதாக பச்சிளம் குழந்தைகள் பிரிவு தலைவர் டாக்டர் கமலரத்தினம் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    பொதுவாக பிறந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எடை குறைந்த இந்த குழந்தைக்கும் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பக்க விளைவுகள், நோய் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் நுரையீரல், கருவிழி உள்பட பல்வேறு உறுப்புகள் பாதிக்கக்கூடும்.

    மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தையை பல்வேறு சிக்கல்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் போராடி மருத்துவர் குழு காப்பாற்றியுள்ளது. இதனால் குழந்தையின் எடை 2 கிலோ எடை அதிகரித்துள்ளது.

    எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வரலாற்றிலேயே இவ்வளவு குறைவான எடை கொண்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்தது இதுவே முதன்முறையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது குழந்தையை தாய் சந்தானலட்சுமி கவனமாக பார்த்து கொள்கிறார். குழந்தையின் எடை படிப்படியாக உயரும் வரை குழந்தையின் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

    ×