search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ekta kapoor"

    • இந்தி திரையுலகின் முன்னணி பெண் தயாரிப்பாளராக இருப்பவர் ஏக்தா கபூர்.
    • இவருக்கு 2020-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.

    இந்தி திரையுலகின் முன்னணி பெண் தயாரிப்பாளராக இருப்பவர் ஏக்தா கபூர். இவர் பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திரா, ஷோபா கபூர் ஆகியோரின் மகள் ஆவார். ஏக்தா கபூர் இந்தி படங்கள் மட்டுமன்றி வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களும் தயாரித்து இருக்கிறார்.

    இவருக்கு 2020-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் தயாரிப்பில் காந்தி பாட்டி என்ற நிகழ்ச்சி ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அதில் மைனர் நடிகையின் ஆபாச காட்சிகள் இடம் பெற்று இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் தயாரிப்பாளர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து இருப்பது பரபரப்பாகி உள்ளது.

    • தயாரிப்பாளர் ஏக்தா கபூர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். என்ற வெப் தொடரை தயாரித்தார்.
    • முன்னாள் ராணுவ வீரரின் புகார் மனு அடிப்படையில் ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஏராளமான டெலிவிஷன் தொடர் மற்றும் திரைப்படங்கள் தயாரித்துள்ளார். இவர் சொந்தமாக பாலாஜி டெலி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் அவரது தாயார் ஷோபா கபூரும் பங்குதாரராக இருக்கிறார். 


    ஏக்தா கபூர்

    நடிகை ஏக்தா கபூர் தயாரித்த எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். என்ற வெப் தொடர் சீசன் இரண்டில்  ராணுவ வீரரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து இருப்பதாகக் கூறி பீகாரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஷாம்பு குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதில், இந்த வெப் தொடரின் இரண்டாவது சீசனில் ராணுவ வீரரின் மனைவிக்கு எதிராக பல ஆட்சேபகரமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், இது ராணுவ வீரர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இம்மனுவில் ஏக்தா கபூர் மட்டுமல்லாது அவரது தாயார் ஷோபா கபூரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.


    ஷோபா கபூர் - ஏக்தா கபூர்

    இம்மனு இதற்கு முன்பு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி இருவருக்கும் பீகார் மாநிலம் பெகுசராய் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் கோர்ட்டில் ஆஜராகாத காரணத்தால் அவர்கள் இருவருக்கும் கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

    ×