search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election of Administrators"

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
    • மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

    கரூர்,

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, க.பரமத்தி வட்டார கிளை தேர்தல், தாதம்பாளையம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. அதில், வட்டார தலைவராக வாசு தேவன், துணைத்தலைவர்கள் சிவக்குமார், ஹேமாவதி, அய்யாதுரை, செயலாளர் சாமிநாதன், துணை செயலாளர்கள் ரமாமணி, செந்தில்குமார், இளங்கோவன், பொருளாளர் குமார் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.பின், மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் பார்வையா ளராக மாவட்ட தலைவர் பொன்னம் பலம், தான்தோன்றிமலை வட்டார செயலாளர் செந்தில், தேர்தல் ஆணையராகவும், பொதுக்குழு உ உறுப்பினர் பாண்டியன், துணை தேர்தல் ஆணையராகவும் செயல்பட்டனர்.








    • நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த குத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன் (வயது 55). இவர் அழிவிடை தாங்கி அரசினர் மேல்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று பணி முடிந்து மாலை வீட்டுக்கு ஜம்போடை வெம்பாக்கம் சாலை எடப்பாளையம் அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் ‌ அங்கு சிகிச்சை பலனின்றி நாகப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகப்பன் தம்பி காண்டீபன் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்ட தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
    • முதியவர்களுக்கு அரிசி, மாணவர்களின் புத்தகங்கள் வழங்கினர்

    செங்கம்:

    செங்கத்தில் புதிய லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா செங்கம் அடுத்த குயிலம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. செங்கம் டவுன் லயன்ஸ் கிளப் நடத்திய நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் கோவிந்தராஜ், தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் ராஜேந்திரன், அனைவரையும் வரவேற்றார் இதில் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து லயன்ஸ் கிளப் ஆளுநர் மதியழகன் அனைவருக்கும் பதவி செய்து உரையாற்றினார்.

    இதில் லயன்ஸ் சங்க புதிய தலைவராக ரமேஷ், செயலாளராக சேகர், பொருளாளராக செல்வம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இதில் அன்பரசு| நரசிம்மன், அரவிந்த்குமார், ஆகியோர்சேவை திட்டங்களை குறித்து விளக்கினர். ஆர்.சி. அருனைஆனந்தன், வாழ்த்துரை வழங்கினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் முதியவர்களுக்கு அரிசி வழங்கியும் ஏழை பள்ளி மாணவர்களின் வீட்டு புத்தகங்கள் வழங்கினார்கள் மற்றும் பக்கிரி பாளையம் நடுநிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மிஷின் வழங்கினார்கள். இதில் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ×