என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "election officials"
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் (இடைத்தேர்தல்) நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 20,271 பேர்கள் தேர்தல் பணி அலுவலர்களாக தெரிவுசெய்து அவர்களுக்கு தேர்தல் பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அவர்களது பணி நியமனம் குறித்து குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது.
இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் 24.3.2019 (ஞாயிற்றுக்கிழமை), 7.4.2019 (ஞாயிற்றுக்கிழமை), 14.04.2019 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 17.4.2019 (புதன்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது. தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிற்சி நடைபெறும் வகுப்புகளுக்கு மேற்கூறிய நாட்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் அனைவருக்கும் அவர்களது விவரங்கள் அடங்கிய தகவல் குறிப்பு படிவம் வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து விடுபட்ட விவரங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். இந்தப் படிவங்கள் 24.3.2019 அன்று பயிற்சி மையங்களிலேயே வழங்கப்படும்.
புகைப்படம் ஒட்டத்தவறிய அலுவலர்களுக்கு உதவிடும் வகையில் அந்தந்தப் பயிற்சி மையங்களில் வெப்கேமரா மூலம் புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பயிற்சி கையேடுகள் இவ்வகுப்புகளில் வழங்கப்படும். அலுவலர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் நகலினை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் அலுவலர்களுக்கு உதவிடும் வகையில் 16 மருத்துவக் குழுக்கள் அந்தந்தப் பயிற்சி மையங்களில் பணியாற்றவுள்ளனர்.
பயிற்சியில் கலந்து கொள்ளத் தவறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால் மட்டுமே இறுதி ஆணை பிறப்பிக்க இயலும். இதுதொடர்பாக அவர்களது பணிப்பதிவேடுகளிலும் பதிவு மேற்கொள்ளப்படும். எனவே, அனைவரும் மேற்கண்ட பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LSPolls
பெரம்பலூர்:
பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
ஆலோசனை கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) மற்றும் பெரம்பலூர் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் முன்னேற்பாடுகள், நகர்புறங்களிலும், கிராமபுறங்களிலும் பொது மற்றும் தனியார் சுவர்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் தற்போது செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், கொடி கம்பங்கள் உள்ளிட்ட வற்றை அகற்றுதல், தேர்தல் விதிமுறைகள் கண் காணித்திடும் பொருட்டும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.
மேலும் கலெக்டர் சாந்தா பதற்றமான மற்றும் நெருக்கடியான வாக்குச்சாவடி மையங்களின் விபரம், அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் அமைக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள், வாக்குச் சாவடி மையங்களில், மைய எண்ணை குறியிடுதல், அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியலை சமர்ப்பித்தல், தேர்தல் தொடர்பான மண்டல அளவிலான அலுவலர்களை நியமித்தல் மற்றும் தேர்தல் நாளில் வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்படும் அலுவலர்களை நியமித்தல், அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல் காப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு எந்திரங்களின் விபரம் குறித்தும் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதிவியாளர் (பொது) ராஜராஜன், அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்