என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » election rally
நீங்கள் தேடியது "election rally"
பாராளுமன்ற தேர்தலையொட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறி வைத்து பிரதமர் மோடி இன்று முதல் இரண்டு நாள்களுக்கு பிரசாரம் செய்ய உள்ளார். #BJP #Modi
லக்னோ:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. இதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா மாநிலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மோடியும் மக்களிடம் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 2014-ம் ஆண்டு தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக கூட்டங்களில் பங்கேற்று மோடி பேசினார்.
அதுபோல், இந்த தடவையும் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்ய உள்ளார். முதல் கட்டமாக வாரணாசி, அசம்கர், மிர்சாபூர் பகுதிகளில் நடைபெற கூட்டங்களில் மோடி பிரசாரம் செய்ய இருக்கிறார்.
முதலில் தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அசம்கர் செல்லும் மோடி அங்கு புரவஞ்சல் விரைவு நெடுஞ்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் அங்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதைத்தொடர்ந்து, வாரணாசி திரும்பும் மோடி அங்கிருந்து கச்னார் கிராமத்தில் நடைபெறவுள்ள கட்சி கூட்டத்தில் பேசுகிறார். நாளை மிர்சாபூரில் நடைபெறும்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை பா.ஜ.க. அரசு செய்துவருகிறது. #BJP #Modi
தேர்தல் பிரசார கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியத் கோழைத்தனமான செயல் என ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் ம்நான்காவா தெரிவித்துள்ளார். #Zimbabwepresidenrally
ஹராரே:
ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. பிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் எம்மர்சன் ம்நான்காவா பேசினார். அவரது பேச்சை கேட்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
பேச்சை முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கியபோது எம்மர்சன் ம்நான்காவாவை நோக்கி ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு அதிபரின் மீது படாத வகையில் பாதுகாவலர்கள் அவரை ஒருபக்கமாக இழுத்து தள்ளி, எம்மர்சன் ம்நான்காவாவின் உயிரை காப்பாற்றினர். இந்த தாக்குதலில் துணை அதிபர்களில் ஒருவரும், மற்ற கட்சியினர் சிலரும் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசார கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியத் கோழைத்தனமான செயல் என ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் ம்நான்காவா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் கூறுகையில், தேர்தல் பிரசார கூட்டம் மிகவும் அமைதியான முறையில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இன்றி நடைபெற்றது. தேர்தல் பிரசார கூட்டத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்துவது மிகவும் கோழைத்தனமான செயல். இதுபோன்ற செயலை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பதிவிட்டுள்ளார். #Zimbabwepresidenrally #EmmersonMnangagwa #Mnangagwanothurt
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X