என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Electric fence"
- வயலில் காட்டுப்பன்றிகள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
- மின்வேலியை கவனிக்காமல் சென்ற சந்திரசேகரன் அதில் சிக்கினார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் பந்தளம் கூரம்பாலை பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரசேகரன், கோபாலன். இவர்கள் இருவரும் இன்று காலை தோட்டுக்கரை பாலம் பகுதியில் வயல்வெளி வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு வயலில் காட்டுப்பன்றிகள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
அதனை கவனிக்காமல் சென்ற சந்திரசேகரன் மின்வேலியில் சிக்கினார். மின்சாரம் தாக்கி துடிதுடித்த அவரை, கோபாலன் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. மின்வேலியில் சிக்கி இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்வேலிகளில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
- மின்வேலியில் யானைகள் கால் வைத்ததும், தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்படும்.
ஓசூர், தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பதைத் தடுக்க தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மின்வேலியில் யானைகள் கால் வைத்ததும், தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்படும் எனவும் அது சம்பந்தமான நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் நடைமுறைகள் மட்டும் நிலுவையில் உள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இதனையடுத்து, "மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும் பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும்" என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
- பேச்சிமுத்து, பேரின்பராஜ் 2 பேரும் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து(வயது 55). விவசாயி. இவரது மகன் பேரின்பராஜ். சம்பவத்தன்று 2 பேரும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார். உயிரிழந்த பேச்சிமுத்து தி.மு.க. முன்னாள் கிளை செயலாளர் ஆவார். இதனால் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினரை முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், அம்பை ஒன்றிய செயலாளர் பரணி சேகர், தெற்கு பாப்பாங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆறுமுகம், வைராவிகுளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாபநாசம், மாவட்ட கவுன்சிலர் அருண் தவசுபாண்டியன், அயன் சிங்கம்பட்டி ஊராட்சி செயலாளர் பூதபாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நெல்லை:
நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் தியாகராஜநகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டு பொது மக்கள் அளித்த மனுக்கள் மற்றும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நெல்லை கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திர சேகரன் பேசியதாவது:-
நெல்லை கோட்டத்தில் விவசாய நிலங்களில் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து போலீஸ் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அனைத்து மின் பொறியாளர்களும் விழிப்புடன் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் தடங்கல் ஏற்பட்டால் பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமை யாக கடைபிடித்து மின் வினியோகம் வழங்க ேவண்டும்.
நெல்லை கிராமப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க ேவண்டும்.
பொதுமக்கள் குறைந்த மின்னழுத்தம் சம்பந்தமாக ஏதேனும் புகார் அளித்தால் உடனடியாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து தேவைப்படும் பட்சத்தில் புதிய மின்மாற்றி அமைப்பதற்கு மதிப்பீடு தயார் செய்து உடனடியாக பணிகளை மேற்கொண்டு சீரான மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயநிதி அடிப்படையில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்து உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.
மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனி வுடன் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முதியவர் கைது
- 7 பேர் கொண்ட குழுவினர் நிலங்களில் சோதனையில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வன சரக பகுதியில் சில இடங்களில் வன விலங்குகளை வேட்டையாட மின்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனகாப்பாளர்கள் சிரஞ்சீவி, முகமது சுல்தான், பாலாஜி, மறுவரசன், மணிவேலன், சங்கீதா ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கவுத்தி மலை, காப்புக்காடு, திருவண்ணாமலை - காஞ்சி சாலை காப்பு காட்டு ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புனல்காடு கிராமம் காப்பு காட்டை ஒட்டி சண்முகம் (வயது 69) என்பவர் அவரது பட்டா நிலத்தில் வனவிலங்கு வேட்டைக்காக மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சோதனையில் மின்வேலியில் சிக்கி 2 ஆண் புள்ளிமான் மற்றும் ஒரு நாய் இறந்தது கிடந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து வனத்துறையினர் மின்வேலி அமைத்த சண்முகத்தை கைது செய்து விசாரணை செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- ராமதாஸ் (வயது 55). விவசாயியான இவர் இன்று அதிகாலை தனது நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார்
- இந்த மின்வேலியில் எதிர்பாராத விதமாக சிக்கிய ராமதாஸ் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கள்ளிப்பட்டு அருகே சின்னமடம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 55). விவசாயியான இவர் இன்று அதிகாலை தனது நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினராக பிரபுவின் நிலத்தை கடந்து தான் ராமதாசின் நிலத்திற்கு செல்லவேண்டும் இந்த பகுதியில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால், பிரபு தனது நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார். இந்த மின்வேலியில் எதிர்பாராத விதமாக சிக்கிய ராமதாஸ் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த பிரபு, ராமதாஸ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ராமதாசின் உடலை அவரது நிலத்திற்கு கொண்டு சென்று போட்டுள்ளார். பின்னர் ஊருக்குள் வந்து ராமதாஸ் நிலத்தில் இறந்து கிடப்பதாக கூறினார்.
உடனடியாக அங்கு விரைந்த கிராம மக்கள் ராமதாஸ் மின்வேலியில் சிக்கி இறந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து வளவனூர் போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளவனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ராமதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ம் இது தொடர்பான புகாரின் பேரில் பிரபுவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விளை நிலங்களில் மின் வேலி அமைக்க கூடாது என்றும். அவ்வாறு இருந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் கலெக்டர் பழனி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.Electric fence
- காப்பு காடுகள் மற்றும் காப்பு நிலங்கள் மற்றும் அதனை சுற்றி யுள்ள நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைப்பதால் வன வில ங்குகள், மனித உயிரிழப்பு ஏற்படுகிறது.
- இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:விழுப்புரம் மாவட்ட த்தில், காப்பு காடுகள் மற்றும் காப்பு நிலங்கள் மற்றும் அதனை சுற்றி யுள்ள நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைப்பதால் வன வில ங்குகள், மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் தங்களின் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்பதற்காக சமீப காலங்களில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் யானைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. மின்வேலி அமைத்தல் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் தமிழ்நாடு மின்சார சட்டம் 2003 பிரிவு 138 ன்படி மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது என கடுமையாக எச்சரிக்கப்ப டுகி றார்கள். இந்த எச்சரிக்கை யை மீறி மின்வேலி அமைத்தால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் சம்மந்தப்பட்ட நபரே பொறுப்பேற்க நேரிடும். மேலும், மின்வாரிய மற்றும் வன அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது மின்வேலி அமைத்திருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள்மீது சட்டப்படி கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே விவசாயிகள் மின்வேலி அமைப்பதை தவிர்த்து மற்ற உயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தற்காக சமீப காலங்களில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
- தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காப்பு காடுகள் மற்றும் காப்பு நிலங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைப்பதால் வன விலங்குகள், மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு விவசாயிகள் தங்களின் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்ப தற்காக சமீப காலங்க ளில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் யானைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு மின்வேலி அமைத்தல் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் தமிழ்நாடு மின்சார சட்டம் 2003 பிரிவு 138-ன்படி மிகக் கடுமையான தண்ட னைக்குரிய குற்றமாகும்.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது என கடுமையாக எச்சரி க்கப்படு கிறார்கள். இந்த எச்சரிக்கையை மீறி மின்வேலி அமைத்தால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவு களுக்கும் சம்மந்தப்பட்ட நபரே பொறுப்பேற்க நேரிடும். மேலும் மின்வாரிய மற்றும் வன அதிகாரி கள் ஆய்வு மேற்கொள்ளும் போது மின்வேலி அமைத்தி ருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள்மீது சட்டப்படி கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் மின்வேலி அமைப்பதை தவிர்த்து மற்ற உயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின்வேலியில் சிக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்தன.
- போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள வி கரிசல்குளம் கருப்பசாமி கோவில் அருகில் மின்வேலியில் சிக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் துணை மின் பொறியாளர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பூமி என்பவர் தனது வயல்காட்டில் உள்ள நெற்பயிர்களை காப்பதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் பூமி மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
அதில் மின்சாரம் தாக்கி இறந்த ஜல்லிக்கட்டு காளைகள் 2 நாட்களுக்கு முன்பு ஆவியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாயமான ஜெய்ஹிந்த்புரம் மாணிக்கம் மற்றும் அவனியாபுரம் கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான காளைகள் என்பது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். இந்த நிலத்தில் மணிலா அறுவடை பணிக்காகதனலட்சுமி (வயது 65) இன்று காலை சென்றார்.
- காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிரை காட்டு பன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்க மின்வேலி அமைத்திருந்தார் இந்த நிலத்தில் மணிலா அறுவடை பணிக்காக பக்கத்து கிராமமான மணம் தவழ்ந்தபுத்தூர் காலணி சேர்ந்த சேட்டு என்பவரது மனைவி தனலட்சுமி (வயது 65) இன்று காலை சென்றார்
அப்போது காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி உயிர் இழந்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அரசிடம் அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்த விவசாயி சுப்புராயனை போலீசார் தேடி வருகின்றனர்.
- ப்பிரமணியன் (வயது 57). விவசாயக் கூலி தொழிலாளர். இவர் விளைநிலத்தை சுற்றி வரும் போது நிலை தடுமாறி மின்வேலியில் சிக்கினார்
- மின்சாரம் தாக்கி துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேேய இறந்து போனார்,
கடலூர்:
காட்டுமன்னார்கோயில் அருகே கொண்ட சமுத்திரம் வீராகுடி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 57). விவசாயக் கூலி தொழிலாளர். இவர் பணிசெய்யும் விளை நிலத்திற்கு இன்று காலை சென்றார். அங்கு விளைநிலத்தைச் சுற்றி மின்வேலி அமைக்கப் பட்டிருந்தது. இவர் விளைநிலத்தை சுற்றி வரும் போது நிலை தடுமாறி மின்வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேேய இறந்து கிடந்தார்.
அவ்வழியே சென்ற விவசாயிகள் இதனை பார்த்து நில உரிமையாளருக்கும் சோழவரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மின்வேலிக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு சுப்பிரமணி யனின் உடலை கைப்பற்றி னர். பிரேத பரிசோ தனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க நில உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து வருகின்றனர்.
- மின் வேலி அமைக்கும் விவசாய நிலங்களில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை:
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மின்வேலி
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத் துவதை தவிர்க்கவும், தங்கள் நிலங்களில் பிறர் அத்துமீறி நுழைவதை தடுக்கும் நோக்கத்தில் நில உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து வருகின்றனர்.
இதனால் விலங்குகளும், மனிதர்களும் மின் வேலியில் சிக்கி உயிரிழக்கும் நிலை உருவாகி உள்ளது. மேலும் மின்வேலி அமைப்பது இந்திய மின்சார சட்டம் 2003 படி தண்டணைக்குரிய குற்றமாகும். எனவே அவ்வாறு மின் வேலி அமைக்கும் விவசாய நிலங்களில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்படு வதுடன் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் இணைப்பு துண்டிப்பு
கடந்த 3-ந் தேதி விரகேரளம்புதூர் அருகே உள்ள கீலக்கலங்கல் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஒரு விவசாயி பரிதாபமான உயிரிழந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் மின் வேலி அமைத்தவர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் கடந்த ஆண்டு மாயமான்குறிச்சி, ராசிகபேரி, வண்ணந்துறை, தெற்குப்பட்டி, சித்தார் சத்திரம் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலிகளால் விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரி ழந்துள்ளனர்.
இந்த வழக்குகளிலும் மின் இணைப்பு துண்டிக்க பட்டதுடன் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே விவசாய நிலத்தில் மின் வேலி அமைப்பதை நில உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்