என் மலர்
நீங்கள் தேடியது "Electric Shock"
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
- சம்பவம் குறித்து முத்தையால் பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடக்கும் என்றும் இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களி அதி கனமழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மிதமான மழை நேரம் செல்ல கனமழையாக தற்போது வரை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும் தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்குகிறது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முத்தையால் பேட்டையில் உள்ள ஏமிஎம்-மில் பணம் எடுக்க சென்ற வடமாநில வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற உத்தரபிரதே மாநிலத்தை சேர்ந்த சந்தன் என்ற வாலிபர் இரும்பு கம்பியை பிடித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து முத்தையால் பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சத்தம் கேட்டு ஓடி வந்த மிதுன் மாட்டை காப்பாற்ற தண்ணீரில் இறங்கினார்.
- மிதுனின் கூச்சல் கேட்டு, தோட்டத்து குடிசையில் தங்கியிருந்த அவரது தந்தை ஓடிவந்தார்.
ஜல்பைகுரி:
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ளது தகிரிமாரி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த மிதுன் (வயது 30) என்பவர் வயலில் நேற்று தனது பசுவை மேய விட்டிருந்தார். அப்போது அருகில் தேங்கியிருந்த தண்ணீரில் மாடு இறங்கியது. அதில் மின்கம்பி அறுந்து கிடந்ததாக தெரிகிறது.
மின்சாரம் தாக்கியதால் மாடு அலறி கதறியது. சத்தம் கேட்டு ஓடி வந்த மிதுன் மாட்டை காப்பாற்ற தண்ணீரில் இறங்கினார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பலியானார்.
மிதுனின் கூச்சல் கேட்டு, தோட்டத்து குடிசையில் தங்கியிருந்த அவரது தந்தை பரேஷ் தாஸ்(60) ஓடிவந்தார். அவசரமாக அவரும் தண்ணீரில் இறங்கியதால் அவரும் மின்சாரம் தாக்கி இறந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி தீபாலி(55), மிதுனின் 2 வயது குழந்தை சுமனை கையில் தூக்கியபடி அவர்களை காப்பாற்ற சென்றார். அவரும் மின்சாரம் தாக்கி பலியானார்.
இந்த சோகம் நிகழ்ந்தபோது, மிதுனின் மனைவி மட்டும் வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
- தண்ணீர் சூடான பிறகு மின்சார ஸ்விட்ச் ஆப் செய்தனர்.
- சிறுமி சுபிக்ஷா வாட்டர் ஹீட்டரை கையில் எடுத்தார்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவாயம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி பார்வதி. இவர்களது குழந்தைகள் தருண்(வயது 12 ), நித்திஷ்(8), சுபிக்ஷா(6). ரங்கசாமியும், பார்வதியும் கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வாழ்ந்து வருகின்றனர்.
சுபிக்ஷா 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள குளியலறையில் குளிப்பதற்காக வாட்டர்ஹூட்டரை பக்கெட்டில் வைத்து தண்ணீரை சுட வைத்துள்ளனர்.
தண்ணீர் சூடான பிறகு மின்சார ஸ்விட்ச் ஆப் செய்தனர். இந்நிலையில் சிறுமி சுபிக்ஷா வாட்டர் ஹீட்டரை கையில் எடுத்தார். அப்போது வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதில் சுபிக்ஷா குளியலறையிலேயே மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை வெளியே எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
சோதனை செய்த மருத்துவர் சுபிக்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலை குளித்தலை காவல் நிலையத்திற்கு தெரிவித்து குளித்தலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி இறந்து போனதாக தெரிவித்தனர்.
- கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (22). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். ரஞ்சித்குமார் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினியை (18) 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் பிரியதர்ஷினி குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று ஹீட்டரை போட முயன்றார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார். இதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி இறந்து போனதாக தெரிவித்தனர். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளிப்பதற்காக ஹீட்டர் போடும்போது மின்சாரம் தாக்கி திருமணமான 15 நாளில் புதுப்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அண்ணாமலையார் திருத்தேர் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
- தேரோட்டாத்தை காண ஆயிரம் கணக்கான பக்தர்கள் கோவிலை சூழ்ந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மகா ரதம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் திருத்தேர் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
தேரோட்டாத்தை காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையை சூழ்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் சிலர் காயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறைவான மின்சாரம் பாய்ந்ததால் பக்தர்கள் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
கூட்டத்தில் ஒரு பகுதியில் இருந்த பக்தர்கள் மீது மாட வீதியில் இருந்த கடை ஒன்றில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதை அறிந்த காவல்துறையினர் மின்சாரம் நிறுத்தப்பட்டு பக்தர்களை மீட்டனர்.
- டீ போடுவதற்காக பிரிட்ஜில் இருந்து பால்பாக்கெட்டை எடுத்துள்ளார்.
- எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து வாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வரகுணராமபுரம் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்ட நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரகுணராமபுரத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாரிமுத்துவின் வீட்டில் அவரது மனைவி வாணி வழக்கம்போல் காலையில் எழுந்தார்.
பின்னர் டீ போடுவதற்காக பிரிட்ஜில் இருந்து பால்பாக்கெட்டை எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து வாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக கணவர் மாரிமுத்து மற்றும் உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தபோது வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மானூர் அருகே உள்ள மறக்குடி ரஸ்தா கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு மகேஸ்வரி (வயது 34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
- இன்று காலை 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்காக அவர்களை குளிப்பாட்ட மகேஸ்வரி ஹீட்டர் மூலமாக வாளியில் வெந்நீர் வைத்துள்ளார். அந்த வெந்நீர் சூடாகி விட்டதா என்பதை பார்ப்பதற்காக ஹீட்டரை அணைக்காமல் நீரில் கையை விட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
மானூர் அருகே உள்ள மறக்குடி ரஸ்தா கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு மகேஸ்வரி (வயது 34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்காக அவர்களை குளிப்பாட்ட மகேஸ்வரி ஹீட்டர் மூலமாக வாளியில் வெந்நீர் வைத்துள்ளார். அந்த வெந்நீர் சூடாகி விட்டதா என்பதை பார்ப்பதற்காக ஹீட்டரை அணைக்காமல் நீரில் கையை விட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக மகேஸ்வரி உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் சரிந்து விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்துவிட்டனர்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
- தீயை அணைக்க முயன்றனர்
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பெரிய மாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைவாணி (வயது 38). இவரது கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். தீ மளமளவென பரவியதால் அணைக்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்த னர்.
இதேபோல் தியாகதுருகம் அருகே பீளமேடு காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (45) மற்றும் திம்மலை கிராமத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (47) ஆகி யோரது கூரை வீடுகளும் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து சென்று தீயை அணைத்த னர். பெரியமாம்பட்டு, பீள மேடு காட்டுக்கொட்டாய், திம்மலை ஆகிய 3 தீ விபத்துகளும் மின்கசிவின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றதால் அதிக சேதம் ஏற்படுவதற்குள் தீயை அணைத்தனர். தீ விபத்தால் 3 வீடுகளின் சேதம் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
- சுமார் 6 வேன்களில் 400-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு இருந்தன.
- இதில் 2 சிலிண்டர்கள் வெடித்து மினி வேன் முழுவதும் எரிந்தது.
விழுப்புரம்:
செஞ்சி -திண்டிவனம் சாலையில் ஊரணித்தாங்கல் கிராம எல்லையில் தனியார் கியாஸ் குடோன் உள்ளது. தீபாவளி சீசன் என்பதால் இன்று அதிகாலையில் சிலிண்டர்களை சப்ளை செய்வதற்காக நேற்று இரவு ஊழியர்கள் அவர்கள் கொண்டு செல்லும் டாட்டா ஏ.சி. மற்றும் மினி வேன் ஆகியவைகளில் சிலிண்டர்களை ஏற்றிவிட்டு ஓய்வெடுக்க சென்று விட்டனர் .சுமார் 6 வேன்களில் 400-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு இருந்தன.
இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சிலிண்டர் ஏற்றி வைக்கப்பட்ட மினி வேனில் இருந்து சிலிண்டர் வெடித்ததால் திடீரென வேன் தீப்பிடித்தது. இது மிக உயரத்தில் தெரிந்ததால் இது குறித்து அங்கு இரவு காவலில் இருந்த பரசுராமன் ஓடிச் சென்று அருகில் இருந்த டீக்கடைக்காரர் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த டீக்கடைக்காரர் விரைந்து வந்து இது குறித்து உடனடியாக செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
விபத்து ஏற்பட்ட சுமார் 10 நிமிடங்களில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் சி2 லிண்டர்கள் வெடித்து மினி வேன் முழுவதும் எரிந்தது. மேலும் அருகில் இருந்த ஒரு மினி வேன் பகுதியாக எரிந்தது. உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்ததால் வேன்களில் இருந்த 400 சிலிண்டர்கள் மற்றும் குடோனில் இருந்த சுமார் 100 சிலிண்டர்கள் மீட்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேனில்இருந்த பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு 2 சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் சதீஷ் என்ற கபாலி (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் புறாக்களை வளர்த்து வருகிறார்.
இவரது வீட்டையொட்டி பொன்னுசாமி வீதி உள்ளது. இதன் அருகே மின் டிரான்ஸ்பார்மரும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் வளர்க்கும் புறா ஒன்று பொன்னுசாமி வீதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் உட்கார்ந்து இருந்தது. எங்கே மின்சாரம் தாக்கி இறந்து விடுமோ என்ற பயத்தில் புறாவை காப்பாற்ற சதீஷ் முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் கைபட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னா் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தையடுத்து கடந்த 30-ம் தேதி பொன்னுசாமி வீதியில் பாதாள சாக்கடை நீர் சுத்திகரிப்பு நீரூற்று நிலையத்தால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், மின் டிரான்ஸ்பார்மர் அடிக்கடி வெடித்து வருதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி இதனை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்த பிரிட்ஜை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.
- ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
என்.ஜி.ஓ.காலனி:
சுசீந்திரம் அருகே சி.டி.எம்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 64). மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.
இவரது மனைவி சாந்தி (57). இவர்களது மகன் அஜித் நிவாஸ் (34). நேற்று இரவு ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்த பிரிட்ஜை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.
இதில் ராமகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ராமகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.
- மின்சாரம் தாக்கிய பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
- போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை கே.கே. நகர் ராணி அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வசந்தி (47). இவர் நேற்று மாலை வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொாண்டிருந்தார்.
அப்போது மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சுவிட்ச் ஆப் செய்ய சென்ற வசந்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தூக்கி வீசப்பட்டார். மின்சாரம் தாக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதை தொடர்ந்து கே.கே. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராதாகிருஷ்ணன்-வசந்தி தம்பதிக்கு யுவஸ்ரீ(20) என்ற மகளும், விக்னேஷ் (18) என்ற மகனும் உள்ளனர்.