என் மலர்
நீங்கள் தேடியது "Electrician"
- ஒரு அறையில் விக்னேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்ைச புளியம்பட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (35). இவரது மனைவி வானதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
விக்னேஷ்குமார் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் விக்னேஷ்குமாரை வேலையில் இருந்து நீக்கியது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை தனது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட சென்ற விக்னேஷ் குமார் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி வானதி செங்குந்தபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.
அங்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் விக்னேஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வேலை பறிபோன விரக்தியில் விக்னேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தனலட்சுமி தனது கணவன் சரியான முறையில் வேலைக்கு சென்று சம்பாதிக்காமல் குடித்துவிட்டு ஊதாரித்தனம் செய்து வந்திருக்கிறார்.
- மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டிற்கு வர மறுத்ததாக தெரிய வருகிறது.
விழுப்புரம்:
சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது35)இவர் சென்னையில் எலெக்ட்ரிசியன் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவரது மனைவி தனலட்சுமி தனது கணவன் யசரியான முறையில் வேலைக்கு சென்று சம்பாதிக்காமல் குடித்துவிட்டு ஊதாரித்தனம் செய்து வந்த நிலையில் ,தனது குழந்தைகள் சிவசங்கர் (14) முகேஷ்(14) சின்னா (9)ஆகியோருடன் தன் தாய் வீடான பாஞ்சாலத்தில் உள்ள ஆரோக்கியம் என்பரது வீட்டில் கடந்த 6 மாதங்களாக வந்து தங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனலட்சுமி இவரது குழந்தைகளையும் திண்டிவனம் பகுதியில் படிக்க வைத்து வருகின்றார்.
நேற்று முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மனைவி மற்றும் பிள்ளைகளை சென்னைக்கு அழைத்த போது அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வர மறுத்ததாக தெரிய வருகிறது. இதனால்மனம் உடைந்த முருகன் அங்குள்ள கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் இறந்து கிடந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசுபொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரோஷனை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்கள்.
- தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் பெரியநாயகம். எலக்ட்ரீசியன்.
- மர்ம கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் (வயது60). எலக்ட்ரீசியன்.
எலக்ட்ரீசியன் கொலை
இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் மர்ம கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதில் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடையில் மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் இறந்துள்ளார். அந்த கடைக்கு பெரியநாயகம் வயரிங் வேலை செய்ததாக கூறப்படுகிறது.
தனிப்படை விசாரணை
எனவே அவர் சரியாக வயரிங் செய்யாததால் அவரது அலட்சியத்தால் வாலிபர் பலியானதாக கருதிய அவர்கள் பெரியநாயகத்தை பழிக்குப்பழியாக கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த லாரி ஒன்று மோகன் மீது மோதியது
- விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள ரெட்டிவலசு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் மோகன் (வயது25) ,எலக்ட்ரீசியன். மோகன் நேற்று இரவு திருச்சி- கோவை ரோட்டில் வெள்ளகோவிலில் மூலனூர் ரோடு பிரிவு அருகே மோட்டர் சைக்கிளில் சென்றார்.
அப்போது கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த லாரி ஒன்று மோகன் மீது மோதியது. உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நெட்டப்பாக்கம் அருகே வாலிபர்களை தாக்கியதை தட்டிக்கேட்ட எலக்ட்ரீஷியனை கத்தியால் கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
- இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வம் மற்றும் மதிவாணனை கையாலும், மட்டையாளும் தாக்கினர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே வாலிபர்களை தாக்கியதை தட்டிக்கேட்ட எலக்ட்ரீஷியனை கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெட்டப்பாக்கம் அருகே காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது32). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவரும், இவரது நண்பரான மதிவானன் என்பவரும் இயற்கை உபாதைக்காக அங்குள்ள மூகாம்பிகை நகர் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா, ராமு மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களுடன் சேர்ந்து அந்த வழியாக வந்து கொண்டிருந்த அய்யப்பன் மற்றும் வடிவேல் ஆகிய இருவரையும் வழிமறித்து தாக்கினர்.
இதனை கண்ட செல்வமும், மதிவாணனும் அந்த கும்பலிடம் தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வம் மற்றும் மதிவாணனை கையாலும், மட்டையாளும் தாக்கினர்.
அதோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வத்தை குத்தினர். மேலும் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வம் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.
- ஜேடர் பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கி எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
- இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம், குரும்பலமகாதேவி அருகே உள்ள எலந்தகுட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கோபிநாத் (வயது 29) எலக்ட்ரீசியன். இவர் தனது நண்பர் செல்வராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளையம் சென்றார்.
அப்போது ஜேடர் பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கி எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது செல்வராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வராஜ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை வேலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
- துடியலூர் போலீசார் தலைமறைவாக இருந்த ஆல்பர்டை கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜசிம்மா (வயது 46). இவர் அந்த பகுதியில் பாத்திர கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் தனது கம்பெனியை மூடும் போது ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கல்லா பெட்டியில் வைத்து விட்டு சென்றார். மறுநாள் கம்பெனிக்கு சென்றார். அப்போது கல்லா பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து ராஜசிம்மா துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே கம்பெனியில் கடந்த 4 ஆண்டுகளாக எலக்ட்ரிசீயனாக வேலை பார்த்து வந்த கணபதியை சேர்ந்த ஆல்பர்ட் (29) என்பவர் திருடிச் சென்றது தெரிய வந்தது. அவர் கம்பெனியை மூடும் போது உள்ளே யாருக்கும் தெரியாமல் மறைந்து கொண்டார். பின்னர் கல்லா பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து பைப் வழியாக தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து துடியலூர் போலீசார் தலைமறைவாக இருந்த ஆல்பர்டை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- ராஜன், கீழச்சுரண்டை சேர்ந்தவர் தங்கசாமி இவர்கள் இருவரும் ஆலங்குளம் சென்று விட்டு நேற்றிரவு சுரண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
- முத்துகிருஷ்ண பேரி அருகே சென்றபோது சுரண்டையில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி இவர்களது மோட்டடார் சைக்கிள் மீது மோதியது.
ஆலங்குளம்:
சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 45). எலக்ட்ரீசியன். கீழச்சுரண்டை சேர்ந்தவர் தங்கசாமி (59). தொழிலாளி. இவர்கள் இருவரும் ஆலங்குளம் சென்று விட்டு நேற்றிரவு சுரண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
ஆலங்குளத்தை அடுத்துள்ள முத்துகிருஷ்ண பேரி அருகே சென்றபோது சுரண்டையில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி இவர்களது மோட்டடார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ராஜன் முகத்தில் அடிபட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கசாமிக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது .
இச்சம்பவம் குறித்து அறிந்த வீரகேரளம்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கசாமியை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- நாராயண பெருமாள் மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
- கடந்த 2 நாட்களாக நாராயண பெருமாள் வீடு திறக்கப்படாமல் இருந்தது.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச் சந்தையை சேர்ந்தவர் நாராயண பெருமாள் (வயது25). எக்ட்ரீசியன். இவர் நெல்லை மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2 நாட்களாக இவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேக மடைந்த அக்கம் பக்கத்தினர் மேலப்பா ளையம் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது நாராயண பெருமாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் இறந்ததால் அஜித் சோகமாக இருந்து வந்துள்ளார்.
- நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தனியாக இருந்த இவர் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை வீரமாமுனிவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் அஜித் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் குத்துக்கல்வலசையில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் இறந்ததால் அஜித் சோகமாக இருந்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தனியாக இருந்த இவர் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார்.
நேற்று மதியம் அருகில் இருந்த மற்றவர்கள் வீடு பூட்டி இருந்ததை சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அஜித் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று அஜித் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அவரது தற்கொ லைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சென்னையை சேர்ந்த சோலைராஜ் மயிலாடுதுறையில் வேைல பார்த்து வந்தார்.
- மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சென்னை அயனாவரம் சோலை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன்.
இவரது மகன் சோலைராஜ் (வயது 32). பெயிண்டர்.
இவர் தற்போது மயிலாடுதுறை காந்திஜி சாலையில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வெளிச்சத்திற்காக ஒரு மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.
அப்போது மின்விளக்கை சற்று நகர்த்தியதில் எதிர்பாராத விதமாக சோலைராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட சோலைராஜ் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சோலைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கட்டமரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி எலக்ட்ரீசியன் தற்பொழுது சாமியானா பந்தல் அமைக்கும் பணி செய்துவருகிறார்.
- குப்புச்சிபாளையத்தை சேர்ந்த மோகன்( 40) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கட்டமரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (64). எலக்ட்ரீசியன் தற்பொழுது சாமியானா பந்தல் அமைக்கும் பணி செய்துவருகிறார். இந்நிலையில் சுப்பிரமணி தனது மோட்டார் சைக்கிள் மோகனூர்- பரமத்தி வேலூர் சாலையில் இரவு சுமார் 7.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பொய்யேரி அருகே உள்ள திருமணிமுத்து ஆறு பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் சாலையில் காமாட்சி நகர் செல்வதற்காக குப்புச்சிபாளையத்தை சேர்ந்த மோகன்( 40) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. கார் டிரைவர் மோகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சுப்பிரமணி நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைபார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். அங்கு சுப்பி ரமணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்பிர மணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி
வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மோகன் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மோகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.