search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity saving"

    • ஒவ்வொரு நாட்டிலும், மின்சாரம் மிக அத்தியா வசியமான ஒன்றாகும்.
    • பேரணி மந்தவெளியில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் நிலையை வந்ததடைந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மந்தவெளியில் தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது,

    ஒவ்வொரு நாட்டிலும், மின்சாரம் மிக அத்தியா வசியமான ஒன்றாகும். எனவே மின் பயன்பாடு மற்றும் மின் பாதுகாப்பு தொடர்பாக அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி மந்தவெளியில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் நிலையை வந்ததடைந்தது. இதில் மின்சாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு மின் சிக்கனம் தேவை இக்கனம், வீட்டுக்கு சரியான நில இணைப்பு அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும், மின்கம்பத்தின் மீது கயிறை கட்டி துணி காயவைப்பதை தவிர்க்க வேண்டும், மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் மின் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலசங்கம் நிறுவனர் நாகலிங்கம், கள்ளக்குறிச்சி நகர்மன்றத் தலைவர் சுப்ராயலு, கல்லைத் தமிழ்ச்சங்க அருட்பேராசிரியர் புகழேந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில சங்க காப்பாளர் இராமாநுசன், மாநில செயல் தலைவர் சேக்கிழார், மாநில இணை செயலாளர் தயாநிதி, மாநில பொரு ளாளர் அன்புக்குமார், மின்னனு தொழிலாளர் சங்கம் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் பெஞ்சமின் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×