என் மலர்
நீங்கள் தேடியது "elephants"
- துளசி தோப்பு பகுதியில் தென்னை, மாமரங்கள், கிழங்கு வகைகளை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
- இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு தென்னைமரங்களை முறித்து சேதப்படுத்தி வருகின்றன.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள திரவியநகருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது துளசி தோப்பு.
காட்டுயானை அட்டகாசம்
இப்பகுதியில் விவசாயிகள் தென்னை, மாமரங்கள், கிழங்கு வகைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக துளசி தோப்பு பகுதியை சுற்றி அமைந்துள்ள விவசாய நிலங்களில் இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு தென்னைமரங்கள் உள்ளிட்டவற்றை முறித்து சேதப்படுத்தி வருகின்றன.இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை
முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்த அழகன் என்ற விவசாயிக்கு சொந்தமான விளை நிலத்தில் தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி யதை அந்த விவசாயி நேரில் பார்த்ததாக கூறியுள்ளார்.
ஏற்கனவே பெத்தான் பிள்ளை குடியிருப்பில் காட்டில் இருந்து இறங்கிய கரடி ஒன்று நேற்று 3 பேரை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
எனவே துளசிதோப்பு பகுதியில் உள்ள விலை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் இறங்காத வாறு மின்வேலிகளை அமைக்கவும், வெளியில் வரும் காட்டு யானைகளை மீண்டும் காட்டுப் பகுதிக்கு விரட்ட, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராஜபாளையம் அருகே தென்னந்தோப்பில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்கின்றன.
- யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியையொட்டி செல்ல பிள்ளை ஊரணி அருகே ராமகிருஷ்ண ராஜா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்புக்குள் நேற்றிரவு காட்டு யானைகள் புகுந்தன.
அவை அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை அடியோடு பிடுங்கி சேதப்படுத்தியது. அதே போல் அந்த பகுதியில் இருந்த பனை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது.இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-
காய்ப்பு பருவத்திற்கு வந்த பாதி மரங்களும், 2 வருடங்கள் வளர்த்த தென்னங்கன்று களும் யானைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தென்னந்தோப்பில் முகாமிட்டுள்ள யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வடகிழக்கு பருவமழைக்கு பின்பு வனப்பகுதி பசுமைக்கு மாறி உள்ளது.
- அடிவாரப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதால் வனப்பகுதிக்குள் திரும்பி செல்வதற்கு நாட்டம் காட்டுவதில்லை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு, கருமந்தி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகள் பூர்த்தி செய்து தருகிறது.
இந்த சூழலில் வடகிழக்கு பருவமழைக்கு பின்பு வனப்பகுதி பசுமைக்கு மாறி உள்ளது. இதனால் அங்கு கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. அதன் தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்வதற்காக யானை, மான், காட்டெருமை, கருமந்தி, சிங்கவால் குரங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அமராவதி அணையை நோக்கி வந்த வண்ணம் உள்ளன.
அடிவாரப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதால் வனப்பகுதிக்குள் திரும்பி செல்வதற்கு நாட்டம் காட்டுவதில்லை. மேலும் உடுமலை-மூணாறு சாலையில் உலா வருகின்றன.
அப்போது அந்த வழியாக வருகின்ற வாகனங்களை யானைகள் வழிமறித்தும் வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தும் வருகின்றனர். எனவே உடுமலை-மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையைக் கடக்கும் வரையில் பொறுமை காத்து செல்ல வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்துவதோ அவை மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ உள்ளிட்ட செயல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபடக்கூடாதென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
- தேயிலை தோட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் யானை, கரடி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் இங்கு சுற்றி திரிகின்றன.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும் இந்த தேயிலை தோட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் யானை, கரடி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது இங்கு சுற்றி திரிகின்றன.
இந்த நிலையில் குட்டியுடன் கூடிய சுமார் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக மாஞ்சோலை, ஊத்து எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் சுற்றி திரிந்துள்ளன. இதனை அந்த வழியாக சென்றவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- மீண்டும் வனத்திற்குள் சொல்ல வழி தெரியாமல் தவித்து வருவது வாடிக்கையாக உள்ளது.
- சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
வடவள்ளி,
கோவை வனச்சரகம் அட்டுக்கல் வனப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை 4 யானைகள் ஒரு குட்டியுடன் கெம்பனூர் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்தது.
அதிகாலை 6 மணிக்கு தோட்ட வேலைக்கு சென்றவர்கள் யானை இருப்பதை கண்டு வனத்து றையினருக்கு தகவல் கொடுத்தனர். நீண்ட நேரம் ஆகியும் வனத்துறையினர் வரவில்லை. கதிரேசன் என்பவரது விளைநிலங்களில் நீண்ட நேரம் முகாமிட்டு இருந்த யானைக்கூட்டத்தை ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால் யானைகள் வனத்தை நோக்கி செல்லாமல் போக்கு காட்டி நின்றது. ஒரு வழியாக 3 மணி நேரம் கழித்து சுமார் 9 மணி அளவில் யானை அட்டுக்கல் வனத்தை நோக்கி நகர்ந்து சென்றது. கடந்து இரு வாரங்களுக்கு முன்பு அருகில் உள்ள தாளியூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்த யானைக்கூ ட்டம் வனத்திற்குள் செல்லாமல் இருந்தது குறிப்பிட தக்கது. தொடர்ந்து வனப்பகு தியை விட்டு வெளியே வரும் யானைக்கூ ட்டம், மீண்டும் வனத்திற்குள் சொல்ல வழி தெரியாமல் தவித்து வருவது வாடிக்கை யாக உள்ளது.
கெம்பனூர், தாளியூர் , ஓணாப்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து உள்ளது. மதில் சுவர்கள் கட்டி யானை வழித்தடத்தை சிலர் மறித்து இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரி வித்து உள்ளனர். எனவே யானையின் வழித்தடத்தை மீட்டு எடுக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வ லர்களின் கோரிக்கையாக உள்ளது.
- வனப்பகுதியில் இருந்து யானைகள் தண்ணீரை தேடி வெளியேறி கூட்டமாக பவானிசாகர் அணைக்கு வந்தது.
- இந்த யானைகள் கூட்டமாக வந்ததை கண்ட அந்த பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், பண்ணாரி மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் யானைகள் உள்பட பல வன விலங்குகள் உள்ளன.
இந்த வனப்பகுதிகளில் இருந்து யானைகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக வெளியேறி அடிக்கடி கூட்டமாக ரோட்டில் உலாவி வருகிறது. மேலும் அருகே உள்ள கிராம பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.
இதே போல் பவானி சாகருக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் யானைகள் பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு தண்ணீரை தேடி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த யானைகள் கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட யானைகள் தண்ணீரை தேடி வெளியேறி கூட்டமாக பவானிசாகர் அணைக்கு வந்தது. அந்த யானைகள் அணை பகுதி யில் சிறுது நேரம் உலாவி கொண்டே இருந்தது.
இந்த யானைகள் கூட்ட மாக வந்ததை கண்ட அந்த பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அருகே உள்ள பூங்கார் கிராம குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுமோ என ஒரு வித அச்சத்துடன் இருந்தனர்.
யானைகள் ஊருக்குள் புகாதவாறு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யானைகளை பவானிசாகர் வனப்பகுதிக்கு விரட்டுமாறு பவானிசாகர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது.
- வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,
ஊட்டி,
கூடலூர், முதுமலை, மசினகுடி சுற்று வட்டார பகுதிகளில் வறட்சியான காலநிலை தொடங்கியுள்ளது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது
கூடலூர் வட்டத்திற்கு உட்பட்ட தேன் வயல் பழங்குடி கிராம மக்கள் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதிக்கு வந்த யானைகள் பாகற்காய் தோட்டம் மற்றும் வாழைதோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. யானைகள் இரவு முழுவதும் அங்கு நடமாடியதால் விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்
எனவே வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும், யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை காலம் தொடங்கி விட்டதால் காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருகிறது.இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றனர்.
- பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் சுமார் 7 யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக புகுந்தது.
- வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
7 யானைகள்
இவை அவ்வப்போது மலையையொட்டி அமைந்துள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் குட்டிகளுடன் சுமார் 7 யானைகள் கூட்டமாக புகுந்தது. அங்கு மனோஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 80 தென்னை மரங்களையும், அவரது தோட்டத்தின் அருகே மற்றொரு தோட்டத்தில் 7 தென்னை மரங்களையும் பிடுங்கி எறிந்தது. தகவல் அறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையி னர் வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இது தொடர்பாக வனத்துறை யினர் கூறுகை யில், யானைகள் தோட்டத்தை சேதப்படுத்து வதை அறிந்து 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து யானைகளை காட்டுக்கள் விரட்டி உள்ளோம்.
வன விலங்குகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க சோலார் மின் வேலியை பராமரித்து அப்பகுதியில் உள்ள அகழியை தூர்வார தேவை யான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறோம் என்றனர்.
இந்நிலையில் திரவியம் நகர், பெத்தான் பிள்ளை குடியிருப்பு, மேல ஆம்பூர் பகுதிகளில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பண்ணாரி அருகே குட்டிகளுடன் வந்த யானைகள் பஸ்சை வழி மறித்து நின்றது.
- இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் அருகே தாள வாடி, ஆசனூர், பண்ணாரி வனப்பகுதி உள்ளது. மேலும் இந்த பகுதியில் புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, மான் மற்றும் கரடிகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகி றது.
இந்த வனப் பகுதி வழியாக திண்டுக்கல்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் தினமும் பஸ், கார், இரு சக்கர வாக னங்கள், லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் கர்நாடகாவுக்கும், அங்கு இருந்து தமிழகத்துக்கும் வந்து சென்றது.
இந்த பகுதிகளில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் உள்பட வன வன விலங்குகள் அடி க்கடி வெளியேறி ரோட்டில் உலா வந்து கடந்து செல்கி றது.
அப்படி வெளியேறும் யானைகள் அந்த வழியாக வரும் லாரிகளை வழி மறித்து அதில் இருந்து கரும்புகளை பறித்து திண்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் உணவுக்காக யானைகள் அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. அதே போல் அந்த வழியாக செல்லும் பஸ்களின் கண்ணாடிகளை யானைகள் ஒரு சில நேரங்களில் உடை த்தும் வருகிறது.
இந்த நிலையில் சத்திய மங்கலம் அடுத்த பண்ணாரி கோவில் அருகே உணவு தேடி யானைகள் குட்டி களுடன் கூட்டமாக வனப்பகு தியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து உலாவி கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ் பண்ணாரி அருகே வந்த போது திடீரென குட்டிகளுடன் வந்த யானைகள் அந்த பஸ்சை வழி மறித்து நின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். மேலும் பஸ்சில் வந்தவர்கள் அதிர்ச்சியில் செய்வது அறியாமல் யானைகளை விரட்ட சத்தம் போட்டனர். ஆனால் யானைகள் செல்லாமல் அங்கேயே நின்றது.
இதை யடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் ரோட்டோரம் நிறுத்த ப்பட்டன. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
இதை தொடர்ந்து சிறிது நேரம் அங்கே சுற்றி திரிந்த யானைகள் அதன் பிறகு தானாகவே வனப்பகுதி க்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை நிலவியது.
தாளவாடி, மற்றும் பண்ணாரி வனப்பகுதி களில் இருந்து யானைகள் அடி க்கடி வெளியேறி வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் ஜாக்கிரதையு டனும், எச்சரி க்கையுடனும் செல்ல வேண்டும் என வனத்துறை யினர் கேட்டு கொண்டனர்.
- இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளன.
- 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வனத்துறை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியதாவது:
இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மொத்தம் 2 ஆயிரத்து 761 யானைகள் உள்ளன.
கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் மொத்தம் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
- உடுமலை அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்கு உள்ளன.
- சாலையோரங்களில் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளன.
உடுமலை :
உடுமலை அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை, கரடி, மான், காட்டுமாடு, சிறுத்தை மற்றும் உடும்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்கு உள்ளன .தற்போது மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த வனப் பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் போதுமான அளவு கிடைத்து வருகிறது.
வெப்பநிலை மாற்றம் காரணமாக உடுமலை வனப் பகுதிகளில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி உள்ளது. இதனால் யானை போன்ற பெரிய விலங்குகள் அவ்வப்போது பசுந்தலைகளை ஒடித்து உடலின் பாகங்களில் வருடியபடி உலா வருகின்றன. உடுமலை மூணார்சாலையில் செக்போஸ்ட், ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதன் காரணமாக அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சாலையோரங்களில் முகாமிட்டு பசியாறுவதோடு இளைப்பாறியும் வருகின்றன.குறிப்பாக உடுமலை சின்னார் செக் போஸ்ட் வழித்தடங்களில் பகல் நேரங்களிலேயே யானைகள் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விழிப்புடன் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும். காட்டு யானைகளை மிரள வைக்கும்படி ஒலி எழுப்பக் கூடாது. மேலும் அதன் அருகே சென்று செல்பி எடுக்கக் கூடாது என சோதனை சாவடிகளில் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
- சின்னாறு சோதனைச்சாவடி வரையுள்ள 20 கி.மீ., ரோடு, தமிழக வனப்பகுதி யின் நடுவே நீள்கிறது.
- யானை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி துரத்தும் நிலை ஏற்படுகிறது.
உடுமலை :
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்ச ரகத்தில் உடுமலை மற்றும் மூணாறு இடையிலான சாலை அமைந்துள்ளது.அதில் ஏழுமலையான் கோவில் பிரிவில் இருந்து எல்லைப்பகுதியான சின்னாறு சோதனை ச்சா வடி வரையுள்ள 20 கி.மீ., ரோடு, தமிழக வனப்பகுதி யின் நடுவே நீள்கிறது.வனவிலங்குகள் பாது காப்புக்கருதி வாகன ஓட்டு னர்களை அறி வுறுத்தும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.அதில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையக்கூடாது, சமைத்தல் கூடாது, மது அருந்துதல் கூடாது, பிளாஸ்டிக் மற்றும் உணவுக்கழிவுகள் வீசக்கூ டாது என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்று ள்ளன.தற்போது வனப்ப குதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீ ருக்காக யானைகள் அவ்வ ப்போது ரோட்டை கடந்து அணை நோக்கி செல்கி ன்றன. அச்சமயத்தில் அவ்வழி த்தடத்தில் வாகனங்களில் செல்வோர் யானைகளை போட்டோ எடுக்க முற்படுகி ன்றனர். இதனால் வனத்துறை யினர், வாகன ஓட்டுன ர்களை எச்சரிக்கை செய்தும் வருகின்றனர்.வன விலங்குகளை காண நேரிட்டால் போட்டோ எடுக்க முயற்சிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து வனத்துறை யினர் கூறியதாவது:- வனவிலங்குகளை மையப்படுத்தி செல்பி புகைப்படம் எடுக்கவும் முற்படுகின்றனர். இதனால் யானை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி துரத்தும் நிலை ஏற்படுகிறது.வன விலங்குகளின் அருகே சுற்றுலா பயணிகள் செல்ல க்கூடாது. மொபைல் போனில் செல்பி எடுப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.ரோந்துப்ப ணியில் இத்தகைய செயலில் எவரேனும் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.