search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Emmerson Mnangagwa"

    • முகாபே-யை ஆட்சியில் இருந்து அகற்றி அதிபரானார் நங்கக்வா
    • சேவை பணியாளர்களை தேவையற்ற விசாரணைகளில் ஈடுபடுத்துகின்றனர் என்கிறது அமெரிக்கா

    2017ல், ஜிம்பாப்வே நாட்டில், 1980 முதல் 1987 வரை பிரதமராகவும், 1987 முதல் 2017 வரை அதிபராகவும் இருந்தவர் ராபர்ட் முகாபே (Robert Mugabe).

    அமெரிக்க உதவி மூலம், ராணுவ புரட்சி செய்து ஆட்சியிலிருந்த அதிபர் ராபர்ட் முகாபே-யை பதவியில் இருந்து அகற்றி, அந்நாட்டில் அதிபராக பதவியேற்றவர், எம்மர்சன் நங்கக்வா (Emmerson Mnangagwa).

    ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயக வழியில் ஆட்சியை நடத்துவதாக நங்கக்வா, அமெரிக்க அரசிடம் உறுதி அளித்திருந்தார்.

    ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முகாபே செய்திருந்த அனைத்து தவறுகளையும் நங்கக்வா செய்து வருவதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி வந்தது. இரு நாடுகளுக்கு இடையே இரு தசாப்தங்களுக்கும் மேலாக நல்லுறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்நாட்டில் ஜனநாயகம் தழைப்பதை உறுதி செய்யவும், வறுமையில் வாடும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யவும், சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க மையம் (US Agency for International Development) எனும் அமெரிக்க அமைப்பு, அங்கு சேவை புரிந்து வந்தது.


    இந்நிலையில், இப்பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை, ஜிம்பாப்வே அரசு அச்சுறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றுவதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது.

    "ஜிம்பாப்வே நாட்டில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க சேவை பணியாளர்களை, ஜிம்பாப்வே அதிகாரிகள் திடீரென தடுத்து நிறுத்தி, அவர்களை முரட்டுத்தனமாக கையாண்டு, தேவையற்ற பல நீண்ட விசாரணைகளில் ஈடுபடுத்தி, இரவு முழுவதும் பயணங்களில் ஈடுபடுத்தி, பிறகு காரணமின்றி அமெரிக்காவிற்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்" என அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.

    மேலும், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, ஜிம்பாப்வேயின் அதிபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது குற்றம் சாட்டியது.

    தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக ஜிம்பாப்வே, அமெரிக்கா மீது குற்றம் சாட்டி உள்ளது.

    தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக எம்மர்சன் ம்நங்காக்வா இன்று மீண்டும் பதவி ஏற்று கொண்டார். #ZimConCourt #EmmersonMnangagwa
    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சியின் மூலம் அதிபர் ராபர்ட் முகாபே(94) பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இடைக்கால அதிபராக எம்மெர்சன் ம்நாங்காவா பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை பதவியில் அமர்த்துவது தொடர்பாக தெற்காப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் ஜிம்பாப்வே தற்காலிக அதிபர் எம்மெர்சன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

    இதனையடுத்து, ஜிம்பாப்வே அதிபர் பதவிக்கு கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி நடைபெற்ற தேர்தலில்
    தற்காலிக அதிபராக இருந்த எம்மர்சன் ம்நங்காக்வா-வை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசா போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 50 சதவீதம் வாக்குகளை பெற்ற எம்மர்சன் ம்நங்காக்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தல் முடிவை எதிர்த்து அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். வன்முறையாக மாறிய இந்த போராட்டத்தை அதிபர் எம்மர்சன் ம்நங்காக்வா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வெடித்த மோதலில் கடந்த முதல் தேதி 6 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையில், எம்மர்சன் ம்நங்காக்வா வெற்றி பெற்றதாக வெளியான அறிவிப்பை எதிர்த்து அந்நாட்டு அரசியலமைப்பு சட்ட நீதிமன்றத்தில் நெல்சன் சாமிசா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்மர்சன் ம்நங்காக்வா வெற்றியை உறுதிப்படுத்தி கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.


    இந்நிலையில், தலைநகர் ஹராரே நகரில் உள்ள தேசிய விளையாட்டு திடலில் ஜிம்பாப்வே அதிபராக எம்மர்சன் ம்நங்காக்வா இன்று மீண்டும் பதவி ஏற்றார். அந்நாட்டு உச்சநீதி மன்ற நீதிபதி லுக்கே மலாபா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், எம்மர்சனின் ஆதரவாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். #ZimConCourt #EmmersonMnangagwa
    தேர்தல் பிரசார கூட்டத்தின்போது ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் ம்நான்காவா மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். #Zimbabwepresidenrally
    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. பிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் எம்மர்சன் ம்நான்காவா பேசினார். அவரது பேச்சை கேட்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

    பேச்சை முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கியபோது எம்மர்சன் ம்நான்காவாவை நோக்கி ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு அதிபரின் மீது படாத வகையில் அவரது பாதுகாவலர்களை அவரை ஒருபக்கமாக இழுத்து தள்ளி, எம்மர்சன் ம்நான்காவாவின் உயிரை காப்பாற்றியதாகவும் இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாகவும் தலைநகர் ஹராரேவில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. #Zimbabwepresidenrally  #EmmersonMnangagwa  #Mnangagwanothurt
    ×