search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employees complain"

    • ஊழியர்கள் புகார்
    • மீதமுள்ள 30 சதவீதத்தில் வீட்டில் யாரும் இருப்பதில்லை, சிலர் சாதி பெயரை கூறுவ தில்லை என தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வந்தது.

     இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தி, தேர்தலை நடத்த உத்தரவிட்டது. கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சசிதரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்த ஆணையம் நகரம், கிராமப்புறங்களில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வர்களின் எண்ணிக்கையை கண்டறிய திட்டமிட்டது.

    நகராட்சிகள், கிராம பஞ்சாயத்து பகுதிகளில் தொகுதி வாரியாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினை சேர்ந்த வாக்காளர்கள் குறித்து அங்கன்வாடி ஊழியர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வில்லியனூர் கொம்யூனுக்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தலில், இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு கணக்கிடும் பணி தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் முன்னிலை வகித்தார்.

    ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதபதி சசிதரன் உத்தரவின் பேரில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன் தலைமையில் கூட்டம் நடந்தது.

    இதில் அங்கன்வாடி ஊழியர்கள், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களால் நடத்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கான இட ஒதுக்கீடு கணக்கீடு தொடர்பான ஆய்வு அறிக்கை சமர்பிக்க ப்பட்டது.

    இதுகுறித்து விரிவாக விவாதிக்க ப்பட்டது. கூட்டத்தில், ஊழியர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சினைகள், நடைமுறை சிக்கல்கள் குறித்து எடுத்து கூறினர். 70 சதவீத பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள 30 சதவீதத்தில் வீட்டில் யாரும் இருப்பதில்லை, சிலர் சாதி பெயரை கூறுவ தில்லை என தெரிவித்தனர்.

    ஊழியர்கள் கள ஆய்வுக்கு காலை, மாலை நேரங்களில் செல்ல வேண்டும். அங்கு என்ன சூழ்நிலை உள்ளதோ அதனை குறித்துக்கொள்ள வேண்டும்.

    காலதாமதம் ஏற்பட்டால், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, ஆலோசனை பெற்று, அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

    கூட்டத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒரு ங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி பாலாஜி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமேஸ்வரி, கணவருடன் தனியார் பஸ்சில் கச்சிரா யபாளையம் புறப்பட்டார்.
    • பஸ்சிலியே கைப்பையை தவறவிட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையத்தில் உள்ள குளத்துமேட்டு வீதி யில் வசிப்பவர் பரமேஸ்வரி (வயது 26). இவருக்கும் பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த விவேக்பாபு (31) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 20 நாட்களுக்கு முன்பாக குழந்தை பிறந்தது. இவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.தனது பெற்றோருடன் சில நாட்கள் தங்க முடி வெடுத்த பரமேஸ்வரி, கணவருடன் நேற்று இரவு தனியார் பஸ்சில் கச்சிரா யபாளையம் புறப்பட்டார். பஸ் பயணத்தின் போது நகை அணிந்து செல்வது பாதுகாப்பில்லை என்ப தற்காக, முருக்கு செயின், மோதிரம், தோடு, கொலுசு, ரூ.3 ஆயிரம் பணம் ஆகிய வற்றை கைப்பையில் வைத்துக் கொண்டு வந்துள்ளார்.

    கச்சிராயப்பாளை யத்தில் குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் பஸ் சென்றது. பரமேஸ்வரியும் அவரது கணவரும் கூச்சலிடவே, சிறிது தூரம் தள்ளி பஸ் நிறுத்தப்பட்டது. இதில் 20 நாள் கைக்குழந்தையும், விவேக்பாபுவும் பஸ் கம்பியில் மோதினர். இதனால் குழந்தை அழுதது. பஸ்சினை விட்டு வேகமாக இறங்கி குழந்தையின் தலையை தேய்த்துவிட்டுபடி தாய் வீட்டிற்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது கைப்பை யை காணவில்லை. குழந்தை அழுத பதட்டத்தில் பஸ்சிலியே கைப்பையை தவறவிட்டிருக்கலாம் என்ற சந்தேகமடைந்த பரமேஸ்வரி நேற்றிரவே அந்த தனியார் பஸ்சினை தனது கணவருடன் தேடிச் சென்றார். அருகிலிருந்த பெட்ரோல் பங்கில் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்த டிரைவர், கண்டக்டரிடம் விசாரித்த போது அவர்கள் முன்னுக் குப்பின் முரணாக பதில் கூறினர்.

    மேலும், பஸ்சில் சி.சி.டி.வி. ஏன் வைக்க வில்லை என்ற கேள்விக்கு, நீ என்ன ஆர்.டி.ஓ.-விலா பணி செய்கிறாய் என்று பஸ் ஊழியர்கள் பரமேஸ்வரி யிடம் பதில் கூறியுள்ளனர். எனவே, உடனடியாக கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் விரைந்து வந்த பரமேஸ்வரி, நடந்த அனைத்து விஷயங்களை யும் எழுத்துப் பூர்வமாக புகாராக அளித்தார். மேலும், பஸ் ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும், தனது நகையை கண்டு பிடித்து தருமாறும் கேட்டுக் கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×