என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » encourage people
நீங்கள் தேடியது "encourage people"
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். #Modiurges #RahulGandhi #MKStalin
சென்னை:
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட அன்று இந்த தேர்தலில் முதன்முறை வாக்காளர்கள் அதிகமாக பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மீண்டும் இதே கருத்தை மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா, விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை குறிப்பிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிப்பதை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
மற்றொரு டுவீட்டில் ‘வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாகும் வகையில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், மாயாவதி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தை நடிகர்கள் நாகார்ஜுனா, மோகன்லால் ஆகியோருக்கும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீண்ட ஆண்டுகளாக உங்களது திரைத்தோற்றத்தின் மூலம் பல கோடி மக்களை நீங்கள் மகிழ்வித்து இருக்கிறீர்கள். பல விருதுகளையும் பெற்றிருக்கிறீர்கள். இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிகமான அளவில் அவர்கள் வாக்களிக்க நீங்கள் எல்லாம் ஊக்குவிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியுள்ளார்.

×

X