search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enfranchisement"

    • சிங்கம்புணரியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார்.
    • அரசின் நலத்திட்டங்களை பெற்று பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள மண்டபத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விநியோக தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பெண்களுக்கு உரிமைத்ெதாகை வழங்கி 2-ம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-சிவகங்கை மாவட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,784 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

    முதல் கட்டத்தில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 113 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-ம் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதை யடுத்து மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 897 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர 66 ஆயிரத்து 700 பெண்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகையும் பெற்று வருகின்றனர். இதன் வாயிலாக சராசரியாக 75 சதவீத பெண்கள் அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

    பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள் அதனை சிறந்த முறையில் பயன் படுத்தி கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, முன்னாள் அமைச்சர் தென்னவன், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, துணைத்தலைவர் இந்தியன்செந்தில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ரம்யா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய அயலக அணி சன் சீமான் சுப்பு, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×