search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ensure delivery of babies at primary health facilities"

    • சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தினால் பொதுமக்களின் வாழ்க்கை மேம்படும்
    • ஒவ்வொரு திங்கட்கிழமையும் அறிக்கை அளிக்க வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில், வாலாஜா வட்டார அளவிலான சுகாதார பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் கனிமொழி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாமலை வரவேற்றார்.

    கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-

    தற்போது டாக்டர்கள் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ ர்கள் பற்றாக்குறை இருக்காது. கிராமப்புறத்தில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தினால் பொதுமக்களின் வாழ்க்கை மேம்படும்.

    ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலும் பிரசவங்கள் நடைபெறுவதில்லை என உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறும் குற்றச்சாட்டுகளை தவிர்க்கும் வகையில் இனிவரும் காலங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பிரசவம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பிரசவங்கள் குறித்து ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் அறிக்கை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட டாக்டர்கள் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×