என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "EPS OPS"
- அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
- அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை என துணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.
சென்னை:
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். அதன்படி செயல்படுவோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.
- ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் நேற்றிரவு செய்யப்பட்ட மேல் முறையீட்டில் விடிய விடிய விசாரணை நடந்தது.
- நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பைக் கேட்டதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.
சென்னை:
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இரவு உத்தரவிட்டது.
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்ததை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரைக் கொண்ட இருநபர் அமர்வில் இரவே விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நீதிபதி துரைசாமி வசிக்கும் அண்ணாநகரில் இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
விடிய விடிய நடைபெற்ற விசாரணையின் முடிவில், அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம். மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தெரிவித்தனர்.
இந்நிலையில், நீதிபதிகள் தீர்ப்பைக் கேட்டதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். கிரீன்வேஸ் சாலையில் திரண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீர்ப்பைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
- சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் விசாரணை நடைபெற்றது.
- விசாரணை நடைபெறும் நீதிபதி வீட்டின் முன் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை:
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று உத்தரவிட்டார்.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் நேற்று இரவு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த
மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.
சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் நள்ளிரவில் விசாரணை நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயண் ஆஜராகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலட்சுமி ஆகியோர் ஆஜராகின்றனர்.
இந்நிலையில், விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம். மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.
விசாரணை நடைபெற்ற நீதிபதி வீட்டின் முன் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
- அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சுமார் 3 மணி நேர விசாரணையில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என உத்தரவிட்டார்.
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட இரு நபர் அமர்வில் நள்ளிரவில் விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஓபிஎஸ் வீட்டின் அருகே ஒட்டப்பட்டிருந்த ஈபிஎஸ் போஸ்டர்களுக்கு தீ வைத்தனர். மேலும், ஈபிஎஸ் ஆதரவு போஸ்டர்களை எரித்ததால் பரபாப்பு ஏற்பட்டது.
- பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.
- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.
சென்னை:
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.
நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். இந்த பர
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சுமார் 3 மணி நேர விசாரணையில் பொதுக்குழு கூட்டம் தொடர்பான அனைத்துத் தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. அதன்பின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலனை செய்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நாளை நடத்தலாம் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரைக் கொண்ட இருநபர் அமர்வில் இரவே விசாரணை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்