என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "erode by election"

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சேலம்:

    ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

    அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததையொட்டி, தமாகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியிட உள்ளது உறுதியாகி விட்டது. இதனை தொடந்து தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்க அ.தி.மு.க. தீவிர பணியில் இறங்கி உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என தெரிகிறது. மேலும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    காங்கிரஸை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் அவர் கருத்துக்களை கேட்டார்.

    • நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது இயலாது.
    • அ.தி.மு.க. கட்சி சின்னத்தினை இழந்து நிற்பதோடு, மட்டுமல்லாமல் அந்த கட்சி 2 பிரிவுகளாக உள்ளது. எனவே வெற்றி பெறுவது கடினம்.

    தூத்துக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் நடைபெற்ற குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    இது போன்ற தவறுகளை தடுக்க கியூ பிரிவு போல் தனி உளவுப்பிரிவு அமைக்க வேண்டும் என்பதை அரசுக்கு கோரிக்கையாக வைக்கின்றேன். இரட்டை குவளை முறை அதிகமாக உள்ளது. எனவே அதனை ஒழிக்க சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். அதற்கு கூட்டணி கட்சிகள் வலுவாக பாடுபடுவோம்.

    நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது இயலாது. ஏனெனில் அந்த கட்சி சின்னத்தினை இழந்து நிற்பதோடு, மட்டுமல்லாமல் அந்த கட்சி 2 பிரிவுகளாக உள்ளது. எனவே வெற்றி பெறுவது கடினம்.

    தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு தாட்கோ லோன்கள் கொடுப்பதற்கு தேசிய வங்கிகள் முன்வராத நிலை தமிழகத்தில் உள்ளது.

    ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது. மத்திய அரசுதான் அது ராமர் பாலம் இல்லை என்று சொன்னது. இப்போது இப்படி சொல்வது அதிர்ச்சியாக உள்ளது.

    சேது சமுத்திர திட்டத்தில் மீனவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 15 பேர் கொண்ட ஒரு ரகசிய குழுவை டெல்லி பா.ஜனதா மேலிடம் ஈரோட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.
    • குழுவினர் ஓசையில்லாமல் ஈரோடு தொகுதிக்குள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சென்று நேற்றே கள ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

    அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. போட்டியிட விரும்புகிறது. அதற்கு கூட்டணி கட்சியான த.மா.கா.வும் சம்மதம் தெரிவித்து விட்டது. ஆனால் பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன என்பது மர்மமாகவே உள்ளது.

    பா.ஜனதா போட்டியிட வேண்டும் என்ற கருத்தும் அந்த கட்சியினரிடையே உள்ளது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வரும் என்று யோசிக்கிறார்கள்.

    ஏற்கனவே பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது என்ன பேசினார்கள் என்ற விபரம் வெளியாகவில்லை.

    இதற்கிடையில் 15 பேர் கொண்ட ஒரு ரகசிய குழுவை டெல்லி பா.ஜனதா மேலிடம் ஈரோட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த குழுவினர் ஓசையில்லாமல் ஈரோடு தொகுதிக்குள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சென்று நேற்றே கள ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.

    தொகுதியின் கள நிலவரம் எப்படி இருக்கிறது? ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் செல்வாக்கு, ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தியா? திருப்தியா? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரிக்கிறார்கள்.

    இந்த குழுவினர் சேகரித்த தகவல்களை நாளை மறுநாள் (22-ந்தேதி) டெல்லி மேலிடத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லி பா.ஜனதா மேலிடம் எடுக்கப்போகும் முடிவு என்ன? அடுத்த கட்டம் என்ன? என்ற பரபரப்பு அ.தி.மு.க. கூட்டணிக்குள் நிலவுகிறது.

    • இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிக்காண அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எதிரொலியால், வீடு வீடாக சென்று அமைச்சர் முத்துசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிக்காண அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    இதன் எதிரொலியால், திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    வீடு வீடாக சென்று அமைச்சர் முத்துசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

    • பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம்.
    • பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம்.
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டியில் களமிறங்கி வெற்றிக்காண தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திமுக சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

    இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதுதொடர்பாக, ஓபிஎஸ் தரப்பில் மவுனம் காத்து வந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது நிலைபாட்டை தற்போது அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை கோர அதிமுக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் இன்று பாஜக தலைவர்களை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.

    இரட்டை இலை சின்னம் பெற எங்களுக்கு தான் முழு உரிமை உள்ளது. ஒங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். 2026ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் போட்டியிட முழு உரிமை உள்ளது.

    இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்.

    சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

    பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம்.

    கூட்டணி கட்சிகள் எங்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர். பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம்.

    ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு உரிமை உள்ளது.

    இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன். பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும்.

    ஈபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார். ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இதுவரை ஈபிஎஸ் தரப்படன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

    ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சஞ்சையை வேட்பாளராக களம் இறக்க தி.மு.க. தலைவர்கள் விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
    • இடைத்தேர்தல் களத்தில் இளங்கோவன் போட்டியிட்டால்தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற முடியும் என்று தி.மு.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யார் வேட்பாளராக களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இதுதொடர்பாக ஆலோசித்து டெல்லி மேலிடத்துக்கு பெயர்களை பரிந்துரை செய்வார்கள். அதன் பேரில் டெல்லி மேலிடம் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும்.

    ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இதில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் தி.மு.க. தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதை கருத்தில் கொண்டு அவர்கள் வேட்பாளர் தேர்வில் நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் சஞ்சையை களம் இறக்க காங்கிரசில் ஒரு சாரார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். சஞ்சய் தேர்தலில் போட்டியிட சம்மதித்தால் அதை ஏற்பதாக இளங்கோவன் கூறி வருகிறார்.

    ஆனால் சஞ்சையை வேட்பாளராக களம் இறக்க தி.மு.க. தலைவர்கள் விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது. இடைத்தேர்தல் களத்தில் இளங்கோவன் போட்டியிட்டால்தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற முடியும் என்று தி.மு.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் தேர்வு செய்யப்படுவாரா? அல்லது அவரது மகன் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அதுபோல அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் அந்த தொகுதியில் புகழ்பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு என்பவரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    இதனால் அ.தி.மு.க.வில் கே.வி.ராமலிங்கம், தென்னரசு இருவரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சந்திப்பில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
    • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இருவரும் அளித்த தனித்தனி பேட்டியில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடும் என்று தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உடன் ஓ.பி.எஸ் அணியினர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்கும்படி ஓ.பி.எஸ் கோரியுள்ளார்.

    ஏற்கனவே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டத்தில் முடிவு.
    • பா.ம.க எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவிப்பு.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் மேலும் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை.

    இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
    • தி.மு.க., ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமருவார்.

    திருப்பூர்:

    திருப்பூர் சூசையாபுரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பலதரப்பட்ட மக்களுடைய கோரிக்கைகள் என்ன என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் 4½ ஆண்டு காலம் நிறைவேற்றி தமிழக மக்களுடைய நெஞ்சத்தில் இடம் பிடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வருவார். அதற்கு விடை தருகிற நாள்தான் பிப்ரவரி 27ந் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பல்வேறு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு போகிற நாள் தான் பிப்ரவரி 27. அதன் பிறகு தி.மு.க., ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமருவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் அண்ணாமலையுடன் ஈபிஎஸ் அணி சந்திப்பு.
    • இன்று மாலை அண்ணாமலையை ஓபிஎஸ் தரப்பு சந்திக்க உள்ள நிலையில் முன்கூட்டியே ஈபிஎஸ் தரப்பு சந்திப்பு.

    பாஜக தலைவர் அண்ணாமலை உடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்தித்தனர். இதற்காக சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

    இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மேலும், இந்த சந்திப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்க ஈ.பி.எஸ் அணியினர் கோரினர்.

    இன்று மாலை அண்ணாமலையை ஓபிஎஸ் தரப்பு சந்திக்க உள்ள நிலையில் முன்கூட்டியே பாஜக தலைவர்களை ஈபிஎஸ் அணியினர் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் வேட்பாளர் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.
    • எதிரணியில் உள்ளவர்கள் யார் போட்டியிடுகிறார்கள் என்பதே இன்னும் தெரியவில்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரசார் வற்புறுத்தி வந்த நிலையில் அவர் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டார்.

    அவருக்கு பதில் தனது மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டதை அடுத்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத்திடம் நேரில் கருத்து கேட்டார். பின்னர் சஞ்சய் சம்பத் ஈரோடு தொகுதியில் போட்டியிட தினேஷ் குண்டுராவிடம் விருப்ப மனு கொடுத்தார்.

    இதைதொடர்ந்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது கட்சி மேலிடம் முடிவு செய்யும். காங்கிரஸ் வேட்பாளர் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.

    எதிரணியில் உள்ளவர்கள் யார் போட்டியிடுகிறார்கள் என்பதே இன்னும் தெரியவில்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் நிச்சயம் வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் இடைதேர்தலில் போட்டியிட உள்ளார்.
    • தேர்தலில் வெற்றி பெற்றால் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதை தடுப்பேன்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் போட்டியிட உள்ளார்.

    இதுகுறித்து ஆறுமுகம் கூறும்போது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். இதற்காக பாட்டில் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். தேர்தலில் போட்டியிட வைப்பு தொகை கட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையாக சென்று கடைக்கு வெளியே உள்ள காலி மதுபான பாட்டில்களை சேகரித்து வருகிறேன்.

    இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகைக்கு கட்ட முடிவு செய்துள்ளேன். மேலும் மது குடிக்க வரும் மது பிரியர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறேன்.

    தேர்தலில் வெற்றி பெற்றால் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதை தடுப்பேன். மேலும் மதுவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விதவைப் பெண்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்க சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஆறுமுகம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலி மது பாட்டில்களை சேகரித்து வருகிறார்.

    ×