search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "erwadi dargah"

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. நடப்பாண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. நடப்பாண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா நேற்று தொடங்கியது.

    இதையொட்டி தர்காவில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது.. ஏராளமான வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களின் கூட்டத்தால் ஏர்வாடி தர்கா களை கட்டி உள்ளது.

    நேற்று மாலை 4 மணிக்கு யானை, குதிரைகளுடன், மேளதாளங்கள் முழங்க தைக்காவில் இருந்து ஊர்வலமாக சென்று போர்வை எடுக்கும் விழா நடைபெற்றது. அதன்பிறகு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுராகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து அலங்கார ரதத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இன்று அதிகாலை 4 மணிக்கு தர்கா வந்தடைந்தது. தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையும், தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பக்தர்கள் தங்குவதற்கு தர்காவில் சிறப்பு பந்தல்களும். வளாகத்தில் பல்வேறு இடங்களில் கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சுகாதார துறையினரின் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 24 மணி நேரம் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் தடையில்லா மின்சாரம் வழங்க மின்துறை அலுவலர்கள் ஏர்வாடியில் முகாமிட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    சமூக விரோதிகள் நட மாட்டத்தை கண்காணிக்கும் வகையில் தர்கா வளாகத்தில் 50-க்கும் அதிகமான இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தர்கா நிர்வாக அலுவலகத்தில் இருந்தபடியே கண் காணிக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
    ×