search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "escape"

    சேலத்தில் போலீசாரை பார்த்ததும் தப்பியோடிய கொள்ளையன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் கால் முறிந்தது.
    சேலம்:

    சேலம் ஊத்துக்காடு வெடிக்கல்பாறை பகுதியை சேர்ந்தவர் கபாலி என்ற சுப்பிரமணி (வயது 24). பிரபல கொள்ளையனான இவர்  சேலத்தில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர் மீது அம்மாபேட்டை, சூரமங்கலம், கன்னங்குறிச்சி, மல்லூர் உள்பட பல போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும், ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் செயின் பறித்ததாக கூறப்படுகிறது. 

    இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு ஊத்துக்காடு வெடிக்கல் பாறை பகுதியில் கபாலி பதுங்கியிருப்பதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த கபாலி ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். இதனால் பயந்து போன கபாலி நிலை தடுமாறி கபாலி கீழே விழுந்தார். இதில் அவரது  இடது காலில் முறிவு ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்றிரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மனைவி-குழந்தைகளுடன் இலங்கைக்கு படகில் தப்ப முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் நாகை கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேளாங்கண்ணி சின்ன மாதா கோவில் அருகே அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் நின்று கொண்டு இருந்ததை பார்த்தனர்.

    அவர்கள் அருகில் சென்ற கியூ பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையின்போது அவர்கள், முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரித்தனர்.

    இதனைத்தொடர்ந்து, அவர்களை போலீசார் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள், இலங்கை திரிகோணமலை நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகத்மோகன், அவரது மனைவி சாந்தினி மற்றும் குழந்தைகள் சஜிர்தனா, ஸ்ரீவித் என்பது என்பது தெரியவந்ததுய இவர்கள் மதுரை அகதிகள் முகாமில் இருந்து தப்பி வந்துள்ளதும் தெரியவந்தது.

    இவர்கள் இலங்கைக்கு செல்ல முடிவு செய்து அதற்காக ஏஜெண்டுகள் மூலம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் கடற்பகுதியில் இருந்து கள்ள படகு மூலம் இலங்கை செல்வதற்காக படகிற்கு காத்திருந்தபோது கியூ பிரிவு போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

    மேலும், இவர்கள் இலங்கைக்கு செல்ல ஏஜெண்டுகளாக செயல்பட்ட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் நேற்றுடன் நிறைவடைந்தது. தலைநகர் சென்னை 100 டிகிரியை தொடாமல் தப்பியது. #AgniNatchathiram
    சென்னை:

    வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் கடந்த 4–ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அக்னி நட்சத்திர காலம்  நேற்றுடன் நிறைவடைந்தது.

    இந்தக் காலகட்டத்தில் கோடை வெயில் வறுத்து எடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு தமிழகத்தில் இந்த காலத்தில் வெயில் அதிகமாக இருந்தது.

    ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. திருத்தணி, வேலூர், மதுரை, திருச்சி, கரூர் போன்ற இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

    தலைநகர் சென்னையை பொறுத்தவரை வழக்கமாக அக்னி நட்சத்திர காலத்தில் 104, 105 டிகிரி என வெளியில் கொளுத்தும். இந்த ஆண்டு 100 டிகிரியை எட்டாமலேயே சென்னை நகரம் தப்பியது.

    அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 9–ம் தேதி 98.6 டிகிரி வெயில் பதிவானது. சென்னை புறநகரான மீனம்பாக்கத்தில் ஒரு சில நாட்களில் 100 டிகிரியை எட்டியது.

    தமிழகத்தில் இந்த பருவத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 108.6 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திர இறுதி நாளான நேற்று திருத்தணியில் 105 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 97.16 டிகிரியும் வெயில் பதிவானது. #AgniNatchathiram
    பஞ்சாப் மாநிலத்தில் கோவில் பணிகளை பார்வையிட சென்ற மந்திரி சித்து, மாடு முட்டுவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். #Sidhu #BullAttack
    ஜெய்ப்பூர்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள துர்கை கோவிலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிட மாநில மந்திரி சித்து இன்று சென்றார். பணிகளை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.



    அப்போது கோவிலை நோக்கி ஒரு காளை மாடு தறிகெட்டு ஓடிவந்தது. இதைக்கண்டதும் செய்தியாளர்கள் மற்றும் மந்திரி சித்து அங்கிருந்து ஓடினர்.

    ஆனாலும் மாடு முட்டியதில் 2 செய்தியாளர்கள் லேசான காயமடைந்தனர். இந்த தாக்குதலில் மந்திரி சித்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Sidhu #BullAttack
    ×