search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Exclusive tyre"

    கோதண்டராமர் சிலை ஏற்றி வந்த லாரிக்கு அதிக எடை தாங்கும் பிரத்யேகமான புதிய தொழில்நுட்பங்களை கொண்ட டயர்கள் மும்பையிலிருந்து வரவழைத்து பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Vishnustatue
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில் இருந்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெருமாள் சிலை பெங்களூஐரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை முழுமையாக செதுக்கி முடிக்கப்பட்டு 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் கிராமத்திற்கு கோதண்டராமர் சிலை கடந்த 8-ந்தேதி வந்தடைந்தது. திருவண்ணாமலையிலிருந்து செங்கம் நோக்கி கோதண்டராமர் சிலை வந்தபோது அம்மாபாளையம் ஆவின் பால் பவுடர் நிறுவனம் அருகே அடுத்தடுத்து 15 டயர்கள் வெடித்து பஞ்சர் ஆனது.

    இதனால் கோதண்டராமர் சிலையை கொண்டு வந்த லாரியை சிலை அமைப்பு குழுவினர் செங்கம் வட்டம் அம்மாபாளையம் கிராமத்தில் நிறுத்தி வைத்தனர்.

    மேலும் செங்கம் அம்மாபாளையம் முதல் செங்கம் அடுத்த அனந்தவாடி கிராமம் வரை சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.

    லாரிக்கு அதிக எடை தாங்கும் பிரத்யேகமான புதிய தொழில்நுட்பங்களை கொண்ட டயர்கள் மும்பையிலிருந்து வரவழைத்து பொருத்த ஏற்பாடு செய்துள்ளனர். பிரத்யேக டயர்கள் பொருத்திய பின்னர் லாரி புறப்பட்டு செல்லும் என சிலை அமைப்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    இதனால் கோதண்ட ராமர் சிலை பெங்களூரு செல்ல மேலும் கால அவகாசம் ஏற்படும் என தெரிகிறது.


    ×