search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Express"

    • தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள்.
    • அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முக்கியமான ரெயில்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்றாகும்.

    கன்னியாகுமரியிலிருந்து 740 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு இந்த ரெயில் 12.30 மணி நேரத்தில் சென்றடையும். தினமும் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலையில் 6.30 மணிக்கு சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

    இதேபோல் சென்னை எக்மோர் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலையில் 5.35 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்து அடையும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள், ஏசி பெட்டிகள், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி வருபவர்களும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்பவர்களும் பெரும்பாலும் அதிகமானோர் இந்த ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே முன்பதிவு தொடங்கிய உடனே இந்த ரெயிலில் டிக்கெட்டுகள் நிரம்பிவிடும். தக்கல் டிக்கெட்டை பொறுத்தமட்டில் ரெயில் பயணத்தின் முந்தைய நாள் முன்பதிவு செய்யப்படும். தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது.

    ஆன்லைன் மூலமாகவும் தக்கல் டிக்கெட் எடுப்பதற்கு பலரும் முயற்சி மேற்கொண்டும் ஒரு சிலருக்கு மட்டுமே டிக்கெட் கிடைக்கிறது. டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்து வருகிறார்கள். தினமும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    பண்டிகை காலங்கள் கோடை விடுமுறை தினங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும். கோடை விடுமுறையான மே மாதத்தில் முன்பதிவு செய்வதற்கு தற்பொழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பலரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    அனைத்து ரெயில்களிலும் மே மாதத்திற்கான முன்பதிவு தற்பொழுது நடைபெற்று வருகிறது. அனைத்து ரெயில்களிலும் டிக்கெட் எடுப்பதற்கு பொதுமக்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் நிலை உள்ளது. ஆனால் இன்றைய நிலவரப்படி மே 22-ந்தேதி வரை முன்பதிவு செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும்.

    மே 2-ந்தேதிக்கு பிறகு முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ரெயில்வே நிர்வாகமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்ய முடியவில்லை என்ற விவரத்தை முறையாக தெரிவிக்கவில்லை.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை மாற்றப்பட இருப்பதால் முன்பதிவு வசதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது இருக்கும் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து ஏசி பெட்டிகளை அதிகரிக்கவும் தென்னக ரெயில்வே முயற்சி மேற்கொண்டு வருவதாலும் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    பயணிகள் எந்த ஒரு குழப்பமும் இன்றி இருக்கும் வகையில் தென்னக ரெயில்வே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்யப்பட வில்லை என்ற முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ரெயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
    • முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்

    திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே இன்று காலை 7. 40 மணியளவில் வந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கொத்தனார் புஷ்பராஜ் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    உடனே சக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரெயிலின் சங்கிலியை இழுத்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினர். ரெயில் டிரைவர் மற்றும் டி.டி.ஆர்.,ரெயில்வே ஊழியர்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.ஒரத்தூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் அவர் கையில் வைத்திருந்த நெஞ்சுவலி சம்பந்தமான மாத்திரையை கொடுத்து முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ெரயில் 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக சென்றது.  

    • மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும்.
    • 3 மாதங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் நின்று செல்லும்.

    மதுரை 

    மதுரை - திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (16-ந் தேதி) முதல் செப்டம்பர் 16-ந் தேதி வரை 3 மாதங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    அதன்படி மதுரை - திருவனந்தபுரம் ரெயில் (16344) ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையத்தில் நின்று மாலை 5.30 மணிக்கு புறப்படும்.

    மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா ரெயில் (16343) ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையத்தில் காலை 7.50 மணிக்கு புறப்படும்.

    • தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
    • இந்த ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் இயங்கும்.

    விருதுநகர்

    பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை 8-ந் தேதி சென்னை வருகிறார். அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தாம்பரம்-செங்கோட்டை வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    இந்த ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் இயங்கும். இந்த ரெயில் ஞாயிற்க்கிழமை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும். மறுமார்கத்தில் திங்கட்கிழமை செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு செல்லும். 20683 என்ற எண் கொண்ட ரெயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 10.50 செங்கோட்டை செல்லும்.

    மறுமார்கத்தில் திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 6.05 மணிக்கு தாம்பரத்தை அடையும். விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய நிறுத்தங்களில் இந்த ரெயில் நின்று செல்லும்.

    9-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை 2 மாதங்களுக்கு இந்த வாராந்திர ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவது பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    • சென்னை -திருச்செந்தூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • எக்ஸ்பிரஸ் ரெயில் பாபநாசத்தில் 1 நிமிடம் மட்டும் தற்காலிகமாக நின்று செல்லும்.

    தஞ்சாவூர்:

    சென்னை-திருச்செந்தூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து புறப்படும் ரெயில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கும், மறுமார்க்கமாக அங்கிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று செந்தூர் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் பாபநாசத்தில் 1 நிமிடம் மட்டும் தற்காலிகமாக நின்று செல்லும்.

    நாளை முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.

    அடுத்த வருடம் ஜூன் மாதம் 3-ந் தேதி வரை இந்த சோதனை முறை அமலில் இருக்கும் என்றும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து நிரந்தர நிறுத்தமாக மாற்றப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள திண்ணப்பட்டியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
    • குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள திண்ணப்பட்டியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கேரளாவில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் தடம் உள்ளது. மேலும் மதுரை, திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில்களும் இந்த வழியாக சென்று வருகின்றன.

    குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களை இணைக்கும் ரெயில் பாதை என்பதால் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்கள் வந்து, செல்கின்றன.

    ெரயில் தடமாற்றி தண்டவாளத்தில்...

    இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் தின்னப்பட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள முள்ளிசெட்டிபட்டி இடையே ரெயில் தடம் மாற்றியில் இடையே கற்களை வைத்துள்ளனர். தொடர்ந்து மற்றொரு தண்டவளத்தில் இரும்பு ராடுகளை எடுத்து தண்டவாளத்தின் குறுக்கே வைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதை தொடர்ந்து அவ்வழி வந்த உள்ளூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துவிட்டு ரெயில் நிலையத்திலிருந்த பாயிண்ட் மேன் அருண் என்பவரிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்ற பாயிண்ட் மேன் அருண் கற்களையும் இரும்புத் ராடையும் அப்புறப்படுத்தினார்.

    இதில் தடமாற்றம் செய்யும் யார்டு பகுதியில் இடையே கற்கள் அகற்ற முடியாத அளவுக்கு வைத்திருந்தால் அவற்றை அகற்ற சிரமம் ஏற்பட்டது. கடின முயற்சிக்கு பிறகு அந்த கற்கள் முழுவதும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

    கற்கள் மற்றும் இரும்பு ராடு வைத்த சமயத்தில் அந்த வழியாக ரெயில் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில்களை தடமாற்றம் செய்யும் யார்டு பகுதியில் இடையே கற்கள் வைத்திருந்ததால் ரெயிலை கவிழ்க்க மிகப்பெரிய சதி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தண்டவாளம் நடுவே கல் மற்றும் இரும்பு ராடுகளை வைத்த மர்ம கும்பல் யார் ? என கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை போலீஸ் உயர் அதிகாரிகள் எடுத்துள்ளனர். அவர்கள் தண்டவாளம் ஒட்டியுள்ள பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் மர்ம கும்பல் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த சம்பத்தை அடுத்து சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹேதா, துணை கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரும் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர்.

    உள்ளூர் பகுதியை சேர்ந்த நபர் சரியான நேரத்தில் தகவல் தெரிவித்ததால் அவருக்கு பொதுமக்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள், போலீசார் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #BombThreat #TrainBombThreat

    போரூர்:

    சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு இன்று காலை 6.50 மணிக்கு ஒரு மர்ம போன் வந்தது.

    அதில் பேசியவர், சென்னையில் இருந்து செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு போன் தொடர்பை துண்டித்து விட்டார்.

    இதுகுறித்து வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு விசாரணை செய்தார். கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட போன் நம்பரை வைத்து அது யார் என்பதை கண்டுபிடித்தார்.

    வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான நவின் குமார் என்பவர் போனில் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நவின் குமார் கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் காட்பாடி. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த மூன்று மாதங்களாக தங்கி வேலை தேடி வந்தேன். தற்போது விடுமுறை நாள் என்பதால் சொந்த ஊர் செல்வதற்காக கோடம்பாக்கத்தில் இருந்து மின்சார ரெயில் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடி செல்ல முடிவு செய்தேன்.

    இன்று காலை கிளம்பினேன். ஆனால் நான் செல்வதற்கு சற்று நேரமாகி விட்டதால் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறினால் ரெயில் புறப்பட காலதாமதமாகும். எனவே கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #BombThreat #TrainBombThreat

    ×