என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Express train"
- ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் இருந்து போடிக்கு சென்று கொண்டிருந்த ரெயில் மதுரை சந்திப்பில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மதுரை ரெயில்வே சந்திப்பில் ரெயில் எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதாலும், பணிகளின் எண்ணிக்கை குறைவாகி இருந்ததாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மதுரை ரெயில்வே சந்திப்பில் சக்கரம் கழன்று தடம்புரண்டு ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- திருவலம் அருகே வந்தபோது திடீரென என்ஜினில் உள்ள கப்ளிங் இணைப்பு பயங்கர சத்தத்துடன் உடைந்தது.
- அதிகாலை சுமார் 5 மணி முதல் 10.30 மணிக்கு மேல் வரை பணிகள் நடந்தது.
வேலூர்:
அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் ரேணிகொண்டா அரக்கோணம் வழியாக வந்து கொண்டிருந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் அருகே வந்தபோது திடீரென என்ஜினில் உள்ள கப்ளிங் இணைப்பு பயங்கர சத்தத்துடன் உடைந்தது.
இதனால் பெட்டிகளை விட்டு பிரிந்து என்ஜின் மட்டும் தனியாக கழன்று ஓடியது.
இதனைக் கண்டு என்ஜின் டிரைவர் திடுக்கிட்டார். ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் ஏதோ பெரிய விபத்து நடக்கப்போவதாக எண்ணி அலறி கூச்சலிட்டனர்.
என்ஜின் மீது பின்னால் வேகமாக வந்த பெட்டிகள் மோதாமல் இருக்கும் வகையில் லாவகமாக டிரைவர் என்ஜினை இயக்கினார்.
திருவலம் ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜினை விட்டு பிரிந்த பெட்டிகள் தானாக தண்டவாளத்தில் நின்றன. அப்போது என்ஜினை நிறுத்திய டிரைவர் மீண்டும் பின்னோக்கி வந்து பெட்டிகள் அருகே நிறுத்தினார். இறங்கி பார்த்தபோது என்ஜினில் இருந்த கப்பளிங் உடைந்தது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்த ஊழியர்கள் விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை சுமார் 8.45 மணி முதல் 10.50 மணி வரை பணிகள் நடந்தது. நடுவழியில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நின்றதால் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. அதிலிருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விரைவு ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில் சேவையில் வருகிற 14-ந்தேதி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
- திருச்சி-தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில் வழித்தடத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் அங்கு மேம்பாட்டு பணிகள் மற்றும் நடைமேடைகள் விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது. இதன் காரணமாக விரைவு ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில் சேவையில் வருகிற 14-ந்தேதி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பணிகள் மேலும் 3 நாட்களுக்கு நடைபெற இருப்பதால் வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 3 நாட்கள் விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தாம்பரத்தில் நடந்து வரும் யார்டு புனரமைப்பு பணிகள் காரணமாக வருகிற 15, 16, 17-ந்தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் அனைத்து விரைவு ரெயில்களும் தாம்பரத்தில் நிற்காது. இதற்கு மாற்றாக விரைவு ரெயில்கள் அனைத்தும் மாம்பலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வழியாக எழும்பூர் நோக்கி வரும் அனைத்து விரைவு ரெயில்களும் தாம்பரத்தில் நிற்காது. அதற்கு பதிலாக மாம்பலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு திருச்சி-தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து நாளை (11-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் மறுநாள் காலை 5.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில் தஞ்சாவூர், சிதம்பரம் வழியாக இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பலத்த சத்தத்துடன் எஞ்ஜினில் இருந்து பெட்டிகள் தனியாக பிரிந்தன.
- சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எர்ணாகுளம் - டாடா நகர் விரைவு ரயில் இன்று காலை கேரளா மாநிலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் பிரதான பகுதியில் இருந்து பலத்த சத்தத்துடன் எஞ்ஜினில் இருந்து பெட்டிகள் தனியாக பிரிந்தன. இந்த சம்பவமானது காலை 9.30 மணியளவில் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் எஞ்ஜில் இருந்து மூன்றாவது பெட்டி விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பிரிந்து நின்ற பெட்டிகளை சரி செய்து எஞ்சினுடன் இணைத்ததால் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.
சம்பவம் நடந்த போது ரயில் மெதுவாக நகர்ந்ததாகவும், பயணிகள் யாருக்கும் எந்த காயமும் எற்படவில்லை எனவும் அதிகாரிகள் கூறினர். ரயில் எஞ்ஜினில் இருந்து பிரிந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் குமண்டி ரெயில் நிலையம் அருகே ராஞ்சி - சசரம் விரைவு ரெயிலில் தீ பிடித்ததாக பரவிய வதந்தியால் ரெயிலில் இருந்து பலர் தண்டவாளத்தில் குதித்துள்ளனர்.
அவர்கள் தண்டவாளத்தில் குதித்த சமயம் அவ்வழியே வந்த சரக்கு ரெயிலில் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீ விபத்து பற்றி பரவிய வதந்தி குறித்தும் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (16526, 16236) செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வருகிற செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பெங்களூரு கண்டோன்மென்டில் நிற்காது.
அதன்படி, பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் லால்பாக், டபுள் டக்கர், மெயில் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வண்டி-எண்-12608, 22626, 12658) செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.
அதே தேதிகளில், சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர், பிருந்தாவன், லால்பாக், சதாப்தி ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும் (22625, 12639, 12607, 12027) பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.
கன்னியாகுமரி-பெங்களூரு, தூத்துக்குடி-மைசூரு, சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (16525, 16235, 12657) செப்டம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.
அதே போல, பெங்களூரு-கன்னியாகுமரி, மைசூரு-தூத்துக்குடி இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (16526, 16236) செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.
மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16022), சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16021) செப்டம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை சென்டிரல்-மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
- மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 26-ந் தேதி முதல் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22611) இன்று (புதன்கிழமை) முதல் ஹிஜ்லி, கரக்பூர், பட்டா நகர் வழித்தடத்தில் செல்லும்.
அதேபோல, மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) வருகிற 26-ந் தேதி முதல் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.
- அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பினர்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.15 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.
நாளை அங்கிருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை காலை 10 மணிக்கு திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணிக்கு திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார்.
ரெயில் நிலையத்தில் முதலமைச்சரை, அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பி வைத்தனர்.
- ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார்.
- தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குஜராத் மாநிலம் காந்தி தாமிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத கற்கள் மீது மோதி நின்றது.
இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும் ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தண்டவாளங்களிலும் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே பாலங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரித்த போது 6 மர்மநபர்கள் அந்த பகுதியில் சுற்றிந்திரிந்ததாக தெரிவித்தார்.
- சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நெல்லைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று இரவு நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியில் வந்த போது தண்டவாளத்தில் பெரிய கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்த என்ஜின் டிரைவர் ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்த முயன்றார். ஆனால் தண்ட வாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ரெயில் பயங்கர சத்தத்துடன் மோதியது. பின்னர் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார். தண்ட வாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது குறித்து ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் இரணியல் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தண்டவாளத்தில் மாட்டின் தலை, கொம்பு மற்றும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரெயில் தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரித்த போது 6 மர்மநபர்கள் அந்த பகுதியில் சுற்றிந்திரிந்ததாக தெரிவித்தார். ரெயில் கற்கள் மீது மோதிய பிறகு அந்த நபர்கள் அங்கிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றதாக கூறினார்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தண்ட வாளத்தில் கற்களை எதற்காக அடுக்கி வைத்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வாலிபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இது பற்றிய தகவல் வந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற் கொண்டார்.
இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். இன்று காலையிலும் சம்பவம் நடந்த பகுதியில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுபோதையில் வாலிபர்கள் கற்களை தூக்கி வைத்தார்களா? ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்று கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
- தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது. விபத்து காரணமாக மற்றொரு தண்டவாளத்தில் விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தண்டவாளத்தை சீரமைத்து, ரெயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் அதன் பின்னால் வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
- ரெயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டு சென்றன.
ஜோலார்பேட்டை:
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சேலம் அடுத்த தின்னப்பட்டி ரெயில் நிலையம் அருகே வந்தது.
அப்போது திடீரென ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு பழுதாகி நடுவழியில் நின்றது.
இதனால் அந்த ரெயிலில் வந்த பயணிகள் வேறு ரெயில்களை பிடிக்க முடியாமலும், குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடியாமலும் கடும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக சேலம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் சேலம் ரெயில் நிலைய அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி என்ஜின் கோளாறை சரி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது.
திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் அதன் பின்னால் வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டு சென்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்