search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eye beauty"

    கண்ணுக்கு மட்டும்தான் உள்ளத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் குணம் இருக்கு. கண்களை அழகாக காட்ட எளிய முறையில் அலங்காரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    இன்று, பெரும்பாலான இளம் பெண்கள் மொபைலையும், அலுவலகம் செல்லும் பெண்கள் கம்ப்யூட்டரையும், இல்லத்தரசிகள் டி.வி-யையும் பார்த்துட்டே இருக்காங்க. இதனால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.

    கண்களுக்கான ரிலாக்ஸிங் ட்ரீட்மென்ட் ப்ளஸ் கண் கருவளையத்துக்கான சிகிச்சை என டூ இன் ஒன் பார்லர் சிகிச்சையான ‘ஐ ட்ரீட்மென்ட்’ பற்றி இங்கே பார்ப்போம். இதில், முதல்ல கண்களை க்ளென்ஸிங் மூலமா சுத்தப்படுத்தி, ஒரு பேக் போட்டுவிடுவார்கள். அதை அலசிய பிறகு, மசாஜ் க்ரீம் கொண்டு கண்களுக்கு நல்லா மசாஜ் கொடுப்பார்கள் இது முடிஞ்சதும், ஐ ஜெல் மூலம் மசாஜ் கொடுப்பார்கள். மீண்டும் ஒரு பேக் போட்டு விடுவார்கள். இந்த ட்ரீட்மென்ட் காரணமா கண்கள் புத்துணர்ச்சி பெறுவதோட, கருவளையமும் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுடும். இப்போது தினமும் போடக்கூடிய கண் அலங்காரத்திற்கான டிப்ஸை பார்க்கலாம்.

    ஐபுரோ பாலட்: கண், புருவத்துக்கு என ஐபுரோ பாலட்கள் காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கின்றன. இதில் மூன்று நிறங்கள் இருக்கும். இதில் உள்ள பிரஷ் மூலம், இந்த வண்ணங்களை தேவைக்கு ஏற்ப கலந்து, புருவ முடிகளின் மீது மட்டும் தடவலாம். இது புருவத்தை பளிச்சென்று காட்டும்.

    ஐலாஷ்: மார்க்கெட்டில் பலவிதமான செயற்கை இமை முடிகள் கிடைக்கின்றன. இதனுடன் கொடுக்கப்படும் பசையின் உதவியால் இதை கண் இமைகளில் ஒட்டிக்கொண்டால், இமை முடிகள் நீண்டு, அடர்ந்து இருப்பது போன்ற அழகிய தோற்றத்தைக் கொடுக்கும். கவனம்… தரமான பிராண்ட் பார்த்து வாங்கவும்.

    ஐ ஷேடோ: தரமான ஐ ஷேடோ உபயோகிப்பதால், கண்களில் அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கலாம். ஐ ஷேடோக்களின் துகள்கள், கண்களின் உள்ளே போய், அலர்ஜி மற்றும் கட்டியை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, கண்களுக்கு ஐ ஷேடோ தடவும் முன்பாக, ஐ ப்ரைமர் தடவிவிட்டு அப்ளை செய்தால், கண் இமைகளை அலர்ஜியில் இருந்து காக்கலாம்.

    ×