என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » fake apps
நீங்கள் தேடியது "fake apps"
பிரபல ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான க்விக் ஹீல் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 28 போலி செயலிகளை நீக்கியிருக்கிறது. #QuickHeal #Google
கூகுள் பிளே ஸ்டோரில் குறைந்தபட்சம் சுமார் 48,000 பேர் வரை இன்ஸ்டால் செய்திருந்த 28 செயலிகளை கூகுள் நீக்கியிருக்கிறது. இந்த செயலிகள் போலியாக இயங்கி வந்தது கண்டறியப்பட்டதால் இவை, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகள் அவற்றின் டிஸ்க்ரிப்ஷனில் குறிப்பிட்டிருந்த படி இயங்கவில்லை என்றும், அவை வழங்கிய பெயருக்கு ஏற்றவாரு செயல்படவில்லை என கூகுள் தெரிவித்திருக்கிறது. நீக்கப்பட்டிருக்கும் 28 செயலிகளையும் சர்வேஷ் டெவலப்பர் என்ற ஒரே டெவலப்பர் உருவாக்கி இருக்கிறார்.
நீக்கப்பட்ட போலி செயலிகள் பெரும்பாலும் நிதி சார்ந்த சேவைகளையும், ஸ்டிக்கர், டிப்ஸ் மற்றும் வெப் ஹோஸ்டிங், டி.என்.எஸ். உள்ளிட்டவை ஆகும். போலி செய்திகள் பற்றி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்ட க்விக் ஹீல் பிளே ஸ்டோரில் இருந்த போலி செயலிகளை கண்டறிந்தது.
பின் போலி செயலிகள் பற்றிய விவரங்களை க்விக் ஹீல் கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பியது. நீக்கப்பட்ட 28 செயலிகள் முழுக்க அதிகப்படியான விளம்பரங்கள் இடம்பெற்றிருந்ததோடு, பயனர்களின் திரை முழுக்க விளம்பரங்களை காட்சிப்படுத்தி வந்தன. அனைத்து செயலிகளும் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்ததாக க்விக் ஹீல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் நன்றி: Quick Heal
கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலில் ஸ்கிரீன்ஷாட்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட அம்சங்களை சில செயலிகள் வழங்கவில்லை என்றும் க்விக் ஹீல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலிகள் பயனர்களுக்கு ஏதேனும் பணியை கொடுத்து அவர்களுக்கு வருவாய் ஈட்டச்செய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி பயனர்கள் இந்த செயலிகளில் தோன்றும் விளம்பரங்களை பார்க்கவும், சில செயலிகளை கூடுதலாக இன்ஸ்டால் செய்து அவற்றில் சில விளம்பரங்களை க்ளிக் செய்ய வேண்டும். சில செயலிகள் பயனர்கள் பத்து புள்ளிகளை பெற்றால் பேடிஎம் மூலம் பணம் பெறலாம் என்ற வாக்கில் விளம்பரம் செய்திருக்கின்றன.
எனினும், இவ்வாறு செய்த பின்பும் பயனர்களுக்கு பேடிஎம் மூலம் பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. பயனர்கள் முழு புள்ளிகளை பெற்றாலும், மீண்டும் பழைய இணையபக்கம் திறப்பதாக பயனர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X