என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » fake degrees
நீங்கள் தேடியது "fake degrees"
பாகிஸ்தானில் பள்ளி படிப்பை முடிக்காதவர்களும் பஸ் கூட ஓட்ட தகுதி இல்லாதவர்களும் விமானத்தை ஓட்டி பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். #PIA #PakistanSC
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பொதுத்துறை நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் மற்றும் ஊழியர்களில் பலர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும், அவர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் சிவில் விமான போக்குவரத்து கழகம் குற்றம் சாட்டியது.
மேலும் அவர்களின் கல்வி சான்றிதழ்களை சரி பார்க்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்கள் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சாஹிப் நிசார் தலைமையில் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் 7 பேரின் கல்விச் சான்றிதழ் போலியானவை என கண்டறியப்பட்டது. அவர்களில் 5 பேர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இது குறித்து நீதிபதி கூறுகையில், “பள்ளி படிப்பை முடிக்காத நபர்கள், பஸ் கூட ஓட்ட தகுதி இல்லாதவர்கள். விமானத்தை இயக்கி, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள்” என்றார்.
மேலும் அவர், “தங்களின் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்காத பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 50 பேர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்” எனவும் உத்தரவிட்டார். #PIA #PakistanSC

×

X