என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fake lottery sales"
புதுச்சேரி:
புதுவையில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பவர்களை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு மாறன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது உத்தரவின் பேரில் போலி லாட்டரி கும்பலை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முத்தியால்பேட்டை- கோட்டக்குப்பம் எல்லையில் 2 பேர் செல்போன் மூலம் 3 நம்பர் போலி லாட்டரி விற்பதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச் சந்திரன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் செல்போன் மூலம் நம்பர் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முத்தியால்பேட்டை சோலை தெருவை சேர்ந்த தச்சு தொழிலாளி இளங்கோ (வயது 45) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஆறுமுகம் (44) என்பதும், அதிகம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அவர்கள் போலி லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த லாட்டரி விற்பனை பணம் ரூ. 5700 மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.