search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake voters"

    • போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
    • 16 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 38.83 லட்சம் பேர்.

    கடந்த ஆண்டு 3.2 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 2 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டது.

    இதையடுத்து போலி வாக்காளர்களை அடையாளம் காண புதிய மென்பொருளை தேர்தல் ஆணையம் உருவாக்கியது.

    அதை பயன்படுத்தி போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. 16 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதில் மிகவும் அதிகமாக போலி வாக்காளர்கள் இருப்பது வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகள்தான்.

    வேளச்சேரி தொகுதியில் மொத்தம் 3.05 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 414 போலி வாக்காளர்கள் உள்ளனர்.

    இதற்கு அடுத்ததாக விருகம்பாக்கம் தொகுதி. இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2.76 லட்சம் வாக்காளர்களில் 23,073 பேர் போலி வாக்காளர்கள்.

    சைதாப்பேட்டை தொகுதியில் மொத்தம் 2.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 19,883 பேர் போலி வாக்காளர்கள்.

    2.72 லட்சம் வாக்காளர்களை கொண்ட அண்ணாநகர் தொகுதியில் 19,506 போலி வாக்காளர்கள் உள்ளனர். துறைமுகம் தொகுதியில்தான் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 10,082 போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    இந்த போலி வாக்காளர்களை போட்டோ அடையாளத்தை அடிப்படையாக கொண்டு கம்ப்யூட்டர் கண்டுபிடித்துள்ளது. வாக்குச்சாவடி அளவிலான ஊழியர்கள் மூலம் வீடு வீடாக ஆய்வு நடத்தி தவறாக சேர்க்கப்பட்டிருப்பவர்கள் நீக்கப்படுகிறார்கள்.

    மேலும் ஒரு புதிய மென்பொருளை மக்கள்தொகை பண்புகளின் அடிப்படையில் கண்டுபிடிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளது. விரைவில் போலி வாக்காளர்களை முற்றிலுமாக நீக்கும் வகையில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #DMK #MKStalin

    சென்னை, அக். 12-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண் டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப் பதாவது:-

    ஹிட்லர் மற்றும் முசோலினியின் வாரிசுகள் தான் இந்நாட்டை ஆள்கிறார் களோ என்று அனைத்துத் தரப்பு மக்களும் அச்சப்படக் கூடிய அளவிலே, ஜனநாயகத்திற்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் விரோதமான செயல்பாடுகளை மத்தியமாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலை யில், பொதுமக்களின் இறுதி யானதும் உறுதியானதுமான நம்பிக்கையாக இருப்பது தேர்தல் களம் மட்டும் தான். அதுதான் அவர்கள் கையில் உள்ள வாக்குரிமை என்கிற வலிமை மிகுந்த ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தக் கூடிய இடமாகும்.

    ஆனால், அந்த ஆயுதத்தையும் தந்திரமாகப் பறித்து, தேர்தல் களத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஆட்சியாளர்கள் பல மோசடிகளையும் சூழ்ச்சி களையும் செய்து வருகி றார்கள். இவை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எத்தனையோ புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளின்படி அந்த மோசடிகளைக் களை வதில் உரிய வேகமும் போதிய அக் கறையும் காட்டப்படவில்லை.

    கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில், ஆளுங்கட்சியினர், போலி வாக்காளர்களைப் புகுத்தவும், பாரம்பரியமான கழக வாக்காளர்களை நீக்கவும் முயற்சி செய்வதாக பல இடங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன.

    அவ்வாறு நடைபெறும் அத்துமீறல்களை சட்டவிரோத செயல்களைப் பற்றி, உடனுக் குடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களைக் கொடுத்து உரிய நிவாரணம் பெற்றிட வேண்டும் எனவும், அப்படி புகார் கொடுத்த விவரங்களைக் கழகத் தேர்தல் பணிக்குழுவிற்கும், தலைமைக் கழகத்திற்கும் அவ்வப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனுப்பி வைத்திட வேண்டும்“ என வலியுறுத்தப்பட்டது.

    இதனை கழக நிர்வாகிகள் சரியாகவும் முறையாகவும் கடைப்பிடித்திட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின வாக்கா ளர்களும் நீக்கப்படுகின்றனர். புதிதாகக் குடி வந்தவர்களின் பெயர்களை சேர்ப்பதிலும் அலட்சியம் காட்டப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்படும் புகார்களின் மீது தேர்தல் அலுவலர்கள் உரிய நடவ டிக்கை எடுப்பதில்லை; ஏனோ தயக்கம் காட்டுகிறார்கள்.

    இருப்பவர்களை நீக்குகின்ற அதே நேரத்தில், இறந்து போனவர்களின் பட்டியலை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி, அவர்களை நீக்குமாறு கழகத்தினரும் மற்ற கட்சியினரும் எடுத்துச் சொன்னால் அந்த வாக்காளர்களை நீக்கி விடாதவாறு ஆளுங்கட்சியினர் செயல்படுகிறார்கள். வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள தொழிலாளர்களுக்கு உரிய முகவரியில்லாத போதும் அவர்களின் பெயர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் சேர்த்து, வாக் காளர் அடையாள அட்டை களையும் பெற்றுத் தரும் வேலையை ஆளுந்தரப்பு மேற்கொள்கிறது.

    இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உள்ளிட் டோரின் பெயர்கள் நீக்கப் படுவதில் அலட்சியமும், கழகத்தினர்,சிறுபான்மையினர், தோழமைக் கட்சியினர் ஆகியோர் சார்ந்த வாக் காளர்கள் பெயர் களை நீக்குவதில் அதிதீவிர அக்க றையும் காட்டி ஆளுங்கட் சியினர் செயல்பட்டு வரு கின்றனர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, 14-ந்தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் கழகத்தின் முகவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் தான், வாக்காளர் பட்டியல் மோசடியைத் தடுத்திட முடியும்.

    புதிய இளம் வாக்கா ளர்களை சேர்ப்பது என்பதும் மிகவும் முக்கியமான பணியாகும். 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியுடன் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்பதால், அத்தகைய இளை ஞர்கள் உரிய சான்றுகளுடன் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திட கழக முகவர்கள் துணை நிற்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புக்கான கடைசி முகாம் நடைபெறும் அக்டோபர் 14 காலை முதல் மாலை வரை இந்தப் பணியில் சிறிதும் சோர் வின்றிச் செயல் பட்டால் தான் ஆளுந்தரப்பு மேற்கொள்ளும் மோசடிகளைத் தடுத்திட முடியும். வாக்காளர் பட்டிய லில் உள்ள களைகளை நீக்கினாலே, வெற்றி எனும் பயிர் விரைந்து விளையும். சமுதாய சீர்திருத்தமும் தேர் தல் கள அரசியலும் கழகத்தின் இரு கண்கள்.

    வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு வாக்கும் நெல்மணிகள். ஒரு நெல் வீணானாலும், தேவையற்ற பதர்கள் பெருகினாலும் அது வெற்றியினைப் பாதிக்கும். இளையான்குடி தொகுதி யில் கழக வேட்பாளர் மலைக் கண்ணன் ஒரேயொரு வாக் கில் வெற்றி வாய்ப்பை இழந்ததனை கலைஞர் பல முறை சுட்டிக்காட்டி நமக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தி யிருக்கிறார். அந்த விழிப்புணர் வுடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் முகாமில் கவனம் செலுத்திட வேண்டும்.

    இன்று நீங்கள் காட்டும் அக்கறை, நாளை நம்மை வெற்றிக் கரை சேர்க்கும். விழிப்புடன் செயல்பட்டு, வெற்றியினை உறுதி செய்வீர்!

    ×