search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farm loans"

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Farmersloan #RahulGandhi #Congressgovernment
    ஜெய்பூர்:

    மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், அசாம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக மேற்கண்ட மாநிலங்களில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இங்கு ஆட்சி அமைத்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன்படி, காங்கிரஸ் வெற்றிபெற்ற ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல் மந்திரிகள் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரில் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ரபேல் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்பதால் பாராளுமன்றத்துக்கு வரவே பிரதமர் மோடி பயப்படுகிறார். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இவ்விவகாரத்தில் பதிலளிப்பதாக கூறி மக்களவையில் இரண்டரை மணிநேரம் பேசினார். ஆனால், அவர் வெளியிட்ட அத்தனை பொய்களுக்கும் பதிலடி கொடுத்து உண்மையை நாங்கள் தோலுரித்து காட்டி விட்டோம். எங்களின் நேரடியான கேள்விகளுக்கு பதில் சொல்ல அவரிடம் எதுவும் இல்லை.



    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா நடு ராத்திரியில் திடீரென்று பதவிநீக்கம் செய்யப்பட்டார். இப்போது அவரை பதவியில் அமர்த்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரபேல் பேரம் தொடர்பாக சி.பி.ஐ.யும் பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    56 அங்குலம் மார்புக்கு சொந்தக்காரரான பிரதமர் மோடி ஒரு நிமிடம் பாராளுமன்றத்துக்கு வருவதற்கும் பயப்படுகிறார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விவசாயிகளின் பலம் என்ன என்பதை பிரதமர் மோடிக்கு உணர்த்தியுள்ளது. பாராளுமன்ற  தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில்  ஆட்சி அமைத்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம்

    ஆனால், வெறும் கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் நெருக்கடிக்கு தீர்வாகிவிட முடியாது. நாட்டில் ஒரு புதிய பசுமைப் புரட்சியும் ஏற்பட்டாக வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். #Farmersloan #RahulGandhi #Congressgovernment
    முதல் மந்திரி குமாரசாமி விவசாயிகள் கடனை 24 மணி நேரத்துக்குள் தள்ளுபடி செய்யாவிட்டால் கர்நாடகாவில் 28-ந் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார். #yeddyurappa #kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத் தேர்தலில் 77 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.த தலைவர் குமாரசாமி கடந்த மே 23 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். ஏற்கனவே முதல்-மந்திரியாக இருந்தபோது செய்த தவறுகளை சரிசெய்ய விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இன்று சட்டசபையில் இருந்து பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர், சட்டசபை வளாகத்தில் பேட்டியளித்த எடியூரப்பா, விவசாயிகள் கடனை குமாரசாமி தலைமையிலான அரசு இன்னும் 24 மணி நேரத்துக்குள் தள்ளுபடி செய்யாவிட்டால் வரும் 28-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என தெரிவித்தார். #yeddyurappa #kumaraswamy
    ×