என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » farmers demonstrated
நீங்கள் தேடியது "Farmers demonstrated"
பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை தாலுகாவை சேர்ந்த சிறுவத்தி, விஜயாபுரம், பரையநேந்தல், ஒரசூர், கற்களத்தூர், விருசூர், நாகமத்தி, கல்லங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு அரசு அறிவித்த பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தேவகோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது காப்பீட்டு தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து விளக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கர், ராஜேந்திரன், மாணிக்கம், கண்ணன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பென்னாகரம் பஸ் நிலையம் அருகில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்:
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விவசாயிகள் அனுமதி இல்லாமல் விளை நிலங்களில் உயர்மின்கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தருமபுரியில் சோம்பட்டியில் இருந்து அதியமான் கோட்டை, சின்னப்பட்டி, பெரும்பாலை, பாப்பாரப்பட்டி, இண்டூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இந்த கோபுரங்களை அமைக்கும் பணியில் மத்திய அரசின் நிறுவனமான பவர் கிரீடு ஈடுபட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இன்று பென்னாகரம் பஸ் நிலையம் அருகில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கொங்கு ராஜாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ரவீந்திரன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் முடிவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கொங்கு ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
சத்தீஸ்கர் மாநிலம் ரெய்க்கார்க் நகரில் இருந்து புகலூர் வரை பவர்கிரீடு சார்பில் உயர்மின்கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விவசாயிகள் அனுமதி இல்லாமல் அவர்களை மிரட்டி இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினோம்.இதனால் கொஞ்சகாலம் இந்த பணியை நிறுத்தி வைத்திருந்திருந்தனர். தற்போது மீண்டும் இந்த பணியை தொடங்கி உள்ளனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது.
விவசாயிகளுக்கு இழப்பீடு தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுகிறார்கள். விவசாய நிலங்களில் உயர்மின் பாதை அமைப்பதைவிட சாலைக்கு அடியில் மின் கேபிள் பதிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கூறி இருக்கிறோம்.
அதை செய்தாலே நன்றாக இருக்கும் பழைய திட்டத்தின் படி விவசாய நிலங்களில் மின் பாதை அமைத்தால் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயித்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
புதிய திட்டத்தன் படி நிலத்துக்கு அடியில் கேபிளை பதிக்க வேண்டும் என்றும் மத்திய-மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

×

X