என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » farmers suicides
நீங்கள் தேடியது "farmers suicides"
விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2013 முதல் 2015-ம் ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலையில் மராட்டிய மாநிலம் முதலிடம் பிடித்து உள்ளது. #Maharashtra #FormerSuicides
நாக்பூர்:
கடும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும் இந்த சோக நிகழ்வுகள் தொடர்வதை தடுக்க முடியவில்லை.
விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2013 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை அடங்கிய அறிக்கை ஒன்றை அரசு வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் மராட்டிய மாநிலம் முதலிடம் பிடித்து உள்ளது.
அதன்படி இந்த 3 ஆண்டுகளில் மராட்டியத்தில் மட்டும் 11,441 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கர்நாடகா (3,740 பேர்) 2-வது இடத்தையும், மத்திய பிரதேசம் (3,578 பேர்) 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் (1,606 பேர்) 8-வது இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் விவசாயிகளின் தற்கொலையை மத்திய அரசு பதிவு செய்து கொண்டாலும், 2015-ம் ஆண்டுக்கு பிந்தைய அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Maharashtra #FormerSuicides

×

X