search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fathima"

    சபரிமலைக்கு சென்ற பாத்திமா பின்னணியில் மாவோயிஸ்டு ஆதரவு அமைப்புகளின் பின்னணி இருப்பதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sabarimala #Sabarimalafathima

    புதுடெல்லி:

    சபரிமலைக்கு 300 போலீசார் பாதுகாப்புடன் சென்ற பாத்திமா தன்னை பெண்ணியவாதி என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவரது செயல்பாடுகள் அனைத்தும் சபரிமலை புனிதத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாத்திமா இருமுடி கட்டி வந்து இருப்பதாக போலீசாரை ஏமாற்றி இருந்தார். அந்த இருமுடி கட்டை தேவ சம்போர்டு ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அந்த இருமுடி கட்டுக்குள் நெய் தேங்காய் உள்பட அய்யப்பனை வழிபடுவதற்குரிய எந்த பொருட்களும் இல்லையாம்.

    மாறாக அந்த இரு முடி கட்டுக்குள் ஆரஞ்சு பழ வகைகளை பாத்திமா வைத்திருந்தாராம். மேலும் அவர் சபரிமலைக்கு செருப்பு அணிந்து வந்ததும் சமூக வலைத்தளங்கள் மூலம் கடும் விமர்சனத்தக்குள்ளாகி இருக்கிறது.

    பாத்திமாவை கண்டித்து நேற்று பல்லாயிரக்கணக் கானவர்கள் சமூக வலை தளங்களில் பதிவுகள் வெளியிட்டிருந்தனர். அந்த பதிவுகளில் இடம் பெற்றிருந்த பாத்திமாவின் படங்கள் மிக, மிக மோசமாக இருந்தன. இதனால் பாத்திமா மீதான சந்தேக பார்வை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் பாத்திமா, கவிதா, மேரி சுவீட்டி உள்ளிட்ட சில பெண்கள் சபரிமலைக்கு சென்றே தீருவோம் என்று பிடிவாதமாக கூறியதன் பின்னணியில் மாவோயிஸ்டு ஆதரவு அமைப்புகளின் பின்னணி இருப்பதாக மத்திய உள்துறை எச்சரித்து உஷார்படுத்தியுள்ளது. 

    இது பற்றி மத்திய உள்துறை அனுப்பியுள்ள எச்சரிக்கை விபரம் வருமாறு:-

    சபரிமலைக்கு செல்ல பெண்ணியவாதிகள் மட்டும் போராடவில்லை. அவர்களின் பின்னணியில் பெண் மாவோயிஸ்டுகளின் கைவரிசையும் உள்ளது. அவர்கள்தான் பெண்களை தூண்டி விடுகிறார்கள்.

    பெண்களை எதிர்க்கும் போராட்டங்கள் நடந்து வருவதால் மாவோயிஸ்டு ஆதரவு குழுக்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும். எனவே போராட்டம் நடத்துபவர்களையும், அதையும் மீறி வருபவர்கள் பற்றி கண்காணியுங்கள்.

    சமூக வலைத்தளங்கள் மூலம் போராட்டம் பற்றிய தகவல்கள் பரவுகின்றன. எனவே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.

    இவ்வாறு மத்திய உள்துறை கூறியுள்ளது. #Sabarimala  #Sabarimalafathima

    ×