என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Female elephant"
- யானைக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்ள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- பெண் காட்டு யானை சற்று உடல்நலம் தேரி உணவு உட்கொண்டு வந்தது.
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானை சற்று உடல்நலம் தேரி உணவு உட்கொண்டு வந்தது. தொடர் சிகிச்சை, கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைக்கப்பட்ட யானை, உணவை தானே உட்கொண்டு வந்தது.
இந்நிலையில், பெண் யானைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தாய் யானையை அதன் 4 மாத குட்டி யானை சுற்றி சுற்றி வரும் காட்சி காண்பவர்களை பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
யானைக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்ள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தாயிடம் பால் குடிக்க முயலும் குட்டி யானைக்கு லாக்டோஜன், இளநீர் ஆகியவற்றை வனத்துறையினர் அளித்து வருகின்றனர். இருப்பினும், தாய் யானையை அதன் 4 மாத குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பரிதவிக்கும் காட்சி காண்பவர்களை பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
- தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி வறண்டு போய் உள்ளது. இதனால் காட்டுயானைகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி அங்கும் இங்கும் அலைகின்றன.
இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த யானையை சுற்றி ஒரு குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பிளறிக் கொண்டிருந்தது.
இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவ குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியம ங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்குனர் குலால் யோகேஷ் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண் யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதலில் குட்டி யானையை தாய் யானையிடம் இருந்து பிரித்து வனத்துறையினர் தனியாக அழைத்து சென்றனர். பின்னர் தாய் யானைக்கு முதலில் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அந்த யானையின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது. இதற்கு இடையே குட்டி யானையின் சத்தத்தை கேட்டு காட்டில் உள்ள 6 காட்டுயானை கூட்டம் சம்பவ இடத்திற்கு வந்தது.
காட்டு யானைகள் கூட்டத்தை கண்டதும் வனத்துறையினர் மருத்துவக் குழுவினர் அங்கிருந்து சற்று விலகி இருந்தனர். பின்னர் அந்த யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சென்றது. அதன் பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் யானையை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை இரவில் பரிதாபமாக இறந்தது.
இதனையடுத்து அந்த யானையின் உடல் அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக போடப்பட்டுள்ளது. இதற்கிடையே காட்டு யானை கூட்டத்துடன் சென்ற குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழுவினர் அந்த குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
கடந்த மாதம் பண்ணாரி கோவில் அருகே பெண் யானை உயிரிழந்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூரில் ஒரு பெண் யானை உயிரிழந்தது. தற்போதும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது.
தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கடம்பூர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
- வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், கடம்பூர், பர்கூர் உட்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியை விட்டு சமீப காலமாக வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையோரம் உலா வருவதும், அங்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
மேலும் சில யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இரு க்கும் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள குரும்பூர் என்னும் இடத்தில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய பெண் காட்டு யானை ஒன்று வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரை தேடி அங்கும் இங்கும் அலைந்து உள்ளது.
அதேப்பகுதியில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு அருகே புறம்போக்கு இடத்திற்கு அந்த யானை வந்துள்ளது. அப்போது யானைக்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் அந்தப் பெண் யானை தவறி கீழே விழுந்தது.
ஏற்கனவே உணவு குடிநீரின்றி பலவீனமாக இருந்த அந்த பெண் யானை அகழியில் விழுந்ததால் அடிப்பட்டு உயிருக்கு போராடியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடம்பூர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு உயிருக்கு போராடும் யானையை காப்பாற்றுவதற்காக அதன் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றி வருகின்றனர். யானையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் மருத்துவ குழுவினர் அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் யானையை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வனப்பகுதியில் வரட்சியான நிலை உள்ளதால் தன்னார்வலர்கள் மூலம் வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகி மாவட்டம். தேன்கனிக்கோட்டை வனச்சரகம், நொகனூர் காப்பு காட்டின் எல்லைக்கு உட்பட்ட தாவரக்கரை கிராமத்திற்கருகே, கடந்த 26-ந் தேதி நொகனூர் காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, தாவரக்கரை கிராமத்திற்கு அருகில் உள்ள, நாராயணன் என்கிற பால்நாராயணன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மின் மோட்டாருக்கு அமைக்கப்பட்டிருந்த காப்பிடப்பட்ட கம்பியை எதிர்பாராத விதமாக யானை கடித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
பின்னர். ஓசூர் வனக்கோட்ட வனஉயிரினக் காப்பாளர் கார்த்திகேயனி, தலைமையில், உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று தணிக்கை மேற்கொண்டு, வனக்கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், மற்றும் மருத்துவ குழுவினர் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் அறிவுரைப்படி, ஓசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர் உத்தரவுப்படி, இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் வனஉயிரின குற்ற வழக்கு பதிவுசெய்து, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த, வேலு என்பவரின் மகன் கார்த்திக் (வயது 25) என்பவர் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.
இதில், அவர் கடந்த 8 ஆண்டுகளாக தாவரக்கரை கிராமத்தில் சம்பவம் நடைபெற்ற விவசாய நிலத்தை உழுதும், மின்சாரம் சம்பந்தப்பட்ட சிறு சிறு பணிகளை கவனித்தும், அங்கேயே தங்கி அவரது பொறுப்பிலேயே கவனித்தவருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், மேற்படி விவசாய தோட்டத்தில் மின்சார கேபிள் இணைப்பிணை ஏற்படுத்தி, அதன் மூலம் சொட்டு நீர் பாசனம் செய்து வந்ததாகவும்,அதனை எதிர்பாரத விதமாக ஒரு யானை கடித்து உயிரிழந்தது என்றார்.
மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பிற்கு காரணமான விவசாயி கார்த்திக் என்பவரை கைது செய்து தேன்கனிகோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.
கடையநல்லூர்:
மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடைய நல்லூர் பகுதியில் மக்தூம் ஞானியார் தர்கா உள்ளது.
இந்த தர்காவில் நூறாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை வளர்க்க சில ஆண்டுகளாக வனத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் தர்காவினர் வளர்த்து வந்ததால், வனத்துறை தெரிவித்த தகவலின்பேரில், சென்னையில் இருந்து யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டியினர் ஒரு குழுவாக கடையநல்லூர் வந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு யானையை பார்வையிட்டனர்.
இந்நிலையில் யானையை வளர்க்க தோட்டம், நீச்சல் குளம், தூங்குவதற்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை தர்காவில் இல்லை என்று கூறி உடனடியாக இந்த யானையை பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல அந்த குழு உத்தரவு பிறப்பித்தது.
அதனைத்தொடர்ந்து நேற்று இரவு கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.
தற்போது 58 வயது கொண்ட இந்த பெண் யானையின் எடை 4.5 டன் ஆகும். இந்த தர்காவிற்கு இது 5-வது யானையாகும். நூற்றாண்டு பழமையான இந்த தர்காவில் இருந்து யானையை வனத்துறையினர் கைப்பற்றி சென்றது அங்குள்ளவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.
இதனால் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதேநேரத்தில் யானை பாகன் நத்கர் பாதுஷா, யானையின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடி யானைக்கு பிரியா விடை கொடுத்தார்.
- யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது.
- பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ளவய
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே, ஜவளகிரி வனப்பகுதியில் பிரசவத்தின் போது பெண் யானை உயிரிழந்தது. இதையடுத்து, குட்டியானையை மீட்டு வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரகம், உளி பண்டா காப்புகாடு உறுகுட்டை சரக பகுதியில், நேற்று காலை பெண் யானை ஒன்று குட்டி ஈன்ற பிறகு உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் (பொ) விஜயன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர்.
பின்னர், இறந்த தாய் யானையின் அருகே, உயிருடன் இருந்த குட்டியை மீட்டனர். அந்த யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது. மேலும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரசவத்தின்போது, உயிரிழந்த பெண் யானையின் உடலை, வனக்கால்நடை மருத்துவரால் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்வயர் கடித்து பெண் யானை இறந்த நிலையில், ஜவளகிரி வனப்பகுதியில் குட்டி ஈன்ற பெண் யானை இறந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காரமடை வனச்சரக பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 8 முதல் 10 வயதுடைய பெண் காட்டு யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்தி–ற்குட்பட்ட நெல்லித்துறை காப்புக்காடு, மானார் சுற்று வனப்பகுதியில் காரமடை வனச்சரக பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மானார் சரக வன பகுதியில் 8 முதல் 10 வயதுடைய பெண் காட்டு யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யானை உடலின் மேற்பகுதியில் எந்தவித காயங்களும் இல்லை. இதனிடையே யானையின் இறப்பு குறித்து உடற்கூறாய்வு இன்று நடைபெறுகிறது. அதனபின்னரே யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
- விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை கள் உள்ளன.
தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஜீரகள்ளி வனச்சரகம், மல்லன்குழி வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மல்லன் குழி கிராமத்தில் விவசாயி மாதேவா என்பவரது விவசாய தோட்டத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளத்தின் அருகே ஒரு காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் இறந்தது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்தது.
பெண் யானை உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை கண்டறிய வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் மாதேவா அவரது தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க அமைத்திருந்த மின் வேலியில் உயர் அழுத்தம் மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம பீட் என்ற பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
- இதையடுத்து இன்று யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம பீட் என்ற பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்யானை இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் பவானிசாகர்வன சரகர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.
அப்போது யானை இறந்து சில நாட்கள் ஆனது தெரியவந்தது. மேலும் குடற்புழு நோயால் யானை இறந்து இருக்கலாம்என்றும் தெரியவந்தது. இதையடுத்து இன்று யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன் பின்னர்தான் யானை சாவுக்கான முழு காரணமும் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர எல்லையில் உள்ளது. ஆந்திர வனச்சரகத்திற்குட்பட்ட கவுண்டன்யா யானைகள் சரணாலயம் மிக அருகிலேயே இருக்கிறது.
இங்கு இருந்து குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டப்பல்லி உள்ளிட்ட கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்யும்.
மோர்தானா நீரோடையில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்லும். நேற்று ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் மோர்தானா நீரோடையில், யானை இறந்து கிடந்ததை பார்த்தனர்.
இதுகுறித்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஜி.பி.எஸ். மூலம் ஆய்வு செய்ததில் யானை இறந்துகிடந்த பகுதி தமிழக-ஆந்திர வனப்பகுதி எல்லையில் இருந்தது.
இதனால், ஆந்திர வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எல்லை பிரச்சினை காரணமாக, யானை உடலை அகற்றுவது யார்? என்பதில் முரண்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, வேலூர் மாவட்ட வன அலுவலர் முருகன், குடியாத்தம் வனச்சரக அலுவலர் சங்கரய்யா தலைமையில் தமிழக வனத்துறையினர் மற்றும் ஆந்திர வனத்துறையினர் இன்று காலை மோர்தானா நீரோடை பகுதிக்கு வந்தனர்.
யானை உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. சுமார் 40 வயது இருக்கும். ஒரு வாரத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்க மோர்தானா நீரோடைக்கு வந்துள்ளது.
அப்போது தவறி விழுந்து நீரோடையில் இறந்துள்ளது என தமிழக-ஆந்திர வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், யானையின் அழுகிய உடலில் இருந்து பெரிய புழுக்கள், சதை துணுக்குகள் நீரோடையில் கலந்து மோர்தானா அணைக்கு செல்கிறது.
இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீரோடையில் கிடந்த யானையின் உடலை தமிழக- ஆந்திர வனத்துறையினர் அகற்றினர். மேலும், யானை இறப்பு குறித்து இருமாநில வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்