search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fighter planes"

    அமெரிக்காவில் இருந்து எப்.16 ரக போர் விமானங்களை வாங்குமாறு இந்தியாவை நாங்கள் வற்புறுத்தவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்டு ககன் தெரிவித்துள்ளார். #USAmbassador #India #US
    மும்பை:

    ரஷியாவிடம் இருந்து எஸ்.400 ரக ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கு இந்தியா–ரஷியா இடையே சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த நாட்டிடம் இருந்து எப்.16 ரக போர் விமானங்களையும் வாங்குவதற்கு இந்தியாவை வற்புறுத்துவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்டு ககனிடம், இது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘அமெரிக்காவிடம் இருந்து எப்.16 ரக போர் விமானங்களோ அல்லது வேறு எந்த தளவாடங்களோ வாங்க வேண்டும் என இந்தியாவை நாங்கள் வற்புறுத்தப்போவதாக கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை.



    இந்தியாவோ அல்லது பிற நாடுகளோ வாங்கும் வகையில் மிகப்பெரிய திறமையை அமெரிக்க ராணுவ அமைப்பு பெற்றிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.

    உண்மை என்றவென்றால், இந்தியா 15 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.1 லட்சம் கோடி) அதிக மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கி இருக்கிறது என்று கூறிய ககன், இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ உறவுகள் விரிவடைந்திருப்பது குறித்து பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.

    ஆயுத கொள்முதல் தொடர்பாக இந்தியா எடுக்கும் சொந்த முடிவுகளை தாங்கள் அங்கீகரிப்பதாகவும் அவர் கூறினார். #USAmbassador #India #US
    ×