search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire deposit"

    • தனியார் தொழிற்சாலைக்கு தீ வைப்பு 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • போலீசார் அப்போது சென்று தொழிற்சாலைக்குள் கொள்ளையர்களை விரட்டுவது அவர்களை கைது செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் சிப்காட் பகுதி-3 சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு ஆலை உள்ளது கடந்த சிலநாட்களாக இந்த தொழிற்சாலைக்குள் இருக்கும் பொருட்களை கொள்ளையர்கள் இரவு பகல் பாராமல் பல்வேறு இடங்கள் வழியாக உள்ளே புகுந்து கொள்ளை அடித்து வந்தனர். இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகம் அளிக்கும் புகாரின் பேரில் போலீசார் அப்போது சென்று தொழிற்சாலைக்குள் கொள்ளையர்களை விரட்டுவது அவர்களை கைது செய்வது மற்றும் பொருட்களை மீட்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் அதிகாலை கொள்ளையர்கள் தொழிற்சாலைக்குள் புகுந்து2 குடோன்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீவைப்பு சம்பவத்தால் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கம்பளிமேடு, அன்னதானம்பேட்டை, அகரம் காலனி, கோபாலபுரம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், பி.முட்லூர், காயல்பட்டு, குறிஞ்சிப்பாடி உள்ள பகுதிகளைச் சேர்ந்த 7 பெண்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    ×