search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishing gangs"

    • தியாகதுருகம் அருகே ஏரியில் மர்ம கும்பல் மின்சாரம் செலுத்தி மீன் பிடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மணிமுக்தா ஏரியில் மீன்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் இருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் மணிமுக்தா ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சித்தலூர், பானையங்கால் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பலரும் வலைகளை வீசியும், தூண்டில் போட்டும் மீன் பிடித்து வருகின்றனர். ஒரு சில கும்பல்கள் மட்டும் மின்சாரம் செலுத்தி மீன்களை பிடித்து வருகி ன்றனர். அந்த ஏரி வழியாக வயல்வெளி பகுதிகளுக்கு மின் கம்ப ங்கள் நடப்பட்டு அதில் மின் கம்பிகள் மூலம் மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த மின் கம்பிகளில் திருட்டுத்தனமாக கொக்கி யின் மூலம் மின்சாரம் எடுத்து அதன் மற்றொரு முனையை சுமார் 20 அடி நீளம் உள்ள குச்சியின் நுனி பகுதியில் சல்லடை போன்ற இரும்பு தகடுகளில் பொருத்துகின்றனர். இவ்வாறு பொருத்தும் போது மின் கம்பிகளில் இருந்து கேபிள் வழியாக செல்லும் மின்சாரம் அந்த குச்சியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தகடுக்கு வருகிறது.

    அப்போது நீண்ட குச்சியின் மறுமுனையை அந்த நபர்கள் பிடித்துக் கொண்டு ஏரியில் உள்ள நீரில் அலசுகின்றனர். அப்போது சல்லடை பகுதியில் படும் மீன்கள் மீது மின்சாரம் பாய்வதால் மீன்கள் செத்து மிதக்கி றது. தொடர்ந்து அந்த நீண்ட குச்சியை தண்ணீ ரில் படாதவாறு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு செத்து மிதக்கும் மீன்களை இவர்கள் எடுத்துச் செல்கி ன்றனர். இவ்வாறு மீன் பிடிப்பதால் மீன் பிடிக்கும் நபர்களுக்கே மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் இதே போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்த போது இறந்து போனதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகா ரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின்சாரம் செலுத்தி ஏரியில் மீன் பிடிக்கும் நபர்களை எச்சரித்து, அவர்களிடம் மின்சாரம் செலுத்தி மீன் பிடித்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×