என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "flight service"
- சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 வாரங்களில் மட்டும், சுமார் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து,பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதாக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் தொடர் கதையாகி வரும் வெடிகுண்டு மிரட்டலால் விமான நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களில் மட்டும், சுமார் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால், விமானத்தில் பயணிக்க அச்சம் ஏற்படுவதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- சவுதியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 4 ஆண்டுக்கு பிறகு சென்னை-ஜெட்டா- சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்கி உள்ளது.
- சென்னை-ஜெட்டா இடையே இந்த நேரடி விமானத்தின் பயண நேரம் 5 மணி 30 நிமிடங்கள்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து சவுதி அரேபியா நாட்டில் உள்ள ஜெட்டா நகருக்கு நேரடி விமான சேவை ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தன.
ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தின்போது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் சென்னை-ஜெட்டா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின்பும், சென்னை-ஜெட்டா-சென்னை இடையே நேரடி விமான சேவைகள் தொடங்கப்படவில்லை. இஸ்லாமியர்கள் தங்களது புனித தலமான மெக்கா, மதினாவுக்கு ஏராளமான பயணிகள், ஆண்டு முழுவதும் சென்று கொண்டிருப்பதால், சென்னை-ஜெட்டா இடையே, நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சவுதியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 4 ஆண்டுக்கு பிறகு சென்னை-ஜெட்டா- சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்கி உள்ளது. வாரத்தில் திங்கள், புதன் ஆகிய இரு தினங்கள் நேரடி விமான சேவை, சென்னையிலிருந்து ஜெட்டா நகருக்கு இயக்கப்படுகிறது. நேற்று மதியம் 12 மணிக்கு, ஜெட்டா நகரில் இருந்து 132 பயணிகளுடன் புறப்பட்ட சவுதியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மாலை 5.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது. அதன் பின்பு அதே விமானம், நேற்று இரவு 7 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 222 பயணிகளுடன் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றது.
சென்னை-ஜெட்டா இடையே இந்த நேரடி விமானத்தின் பயண நேரம் 5 மணி 30 நிமிடங்கள். இப்போது வாரத்தில் திங்கள், புதன் ஆகிய 2 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் வாரத்தில் 3 நாட்களாக, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும் இந்த விமானம் இயக்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை-ஜெட்டா- சென்னை இடையே, 4 ஆண்டுகளுக்குப் பின்பு, மீண்டும் விமான சேவைகள் புதிதாக தொடங்கியுள்ளது, பயணிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வருகின்றன.
- சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன.
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.
சென்னையில் மழை இரவு முழுவதும் நீடித்தது. இந்நிலையில், சென்னையில் இரவில் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வருகின்றன.
சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 16 விமானங்கள் வானிலை காரணமாக பல மணி நேரமாக தாமதமாகி வருகின்றன.
- நாய்களுக்கு பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது.
- நாய்களுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.
நாய்கள் விமானம் பயணம் செய்வதற்கான புதிய ஆடம்பர விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. பார்க் ஏர் என அழைக்கப்படும் புதிய விமான சேவை மே 23 ஆம் தேதி துவங்கியது. நியூ யார்க்-இன் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
நாய் பொம்மைகளை விற்பனை செய்யும் பார்க் நிறுவனம் ஜெட் சார்டர் சேவையை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பார்க் ஏர் நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் நாய்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது.
"முந்தைய விமான பயணத்தை போன்று, இந்த நாய்களை யாரும் குறைத்து மதிப்படவோ அல்லது கார்கோ போன்றோ நடத்தவில்லை. மேலும், இவைகள் மற்ற பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு தொல்லையாகவும் இருக்கவில்லை. இங்கு, நாய்களுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு வசதியும், நாய்களுக்கு சவுகரியமாக இருக்குமா? என்ற அடிப்படையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன," என்று பார்க் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாய்கள் பயணிக்கும் இந்த விமானத்தில், அவைகளுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம். தற்போது முதற்கட்டமாக இந்த சேவை நியூ யார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே, ஒருவழி மற்றும் இருவழி பயணமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பயணத்திலும் 15 நாய்களும், அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.
சவுகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையில், ஒரு பயணத்தில் அதிகபட்சம் 10-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த விமானத்தில் உள்நாட்டு பயணத்திற்கு 6 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 98 ஆயிரத்து 352 என்றும் சர்வதேச பயணத்திற்கு 8 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 64 ஆயிரத்து 470 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் அவதி.
- இந்தியா முழுவதும் சுமார் 70 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், பெங்களூரு- டெல்லி, கோழிக்கோடு- துபாய் குவைத்- தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா கண்ணூரில் இருந்து தனது விமானங்களை ரத்து செய்தது. அதன்படி, கண்ணூரில் இருந்து மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, கொச்சி விமான நிலையத்திலிருந்து நான்கு சேவைகள் நிறுத்தப்பட்டன.
அறிக்கைகளின்படி, திருவனந்தபுரம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் இருந்து சுமார் 70 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கச் சிக்கல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தாலும், அதன் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தான் ரத்து செய்ய வழிவகுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் பனிமூட்டம் நீடிக்கிறது.
- இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 11 விமானங்கள் தரையிறங்க தாமதம் ஆனது.
புதுடெல்லி:
தலைந்கர் டெல்லியில் உள்பட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. கடும் பனிமூட்டத்தால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக நிலையில் உள்ளது என காற்றின் தரம் குறித்த ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது.
பனிப்பொழிவு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 11 சர்வதேச விமானங்களும், 3 உள்ளூர் விமானங்களும் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.
பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டும் வருகின்றன.
- மோசமான வானிலை காரணமாக டெல்லியில் விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளது.
- காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை சுமார் 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதையடுத்து, டெல்லி வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை சுமார் 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் தி.மு.க. எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் பயணம் செய்தனர். அந்த விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. வில்சன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் நாடு முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்டன.
- விமான சேவைக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் பெருமளவு வரவேற்பு இருக்கிறது.
மீனம்பாக்கம்:
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் தமிழர்கள் பெருமளவு வசித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கை கொழும்பு நகருக்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எனவே தமிழர்கள் அதிக அளவு வசிக்கக்கூடிய யாழ்ப்பாணம் நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து ஏர்-இந்தியாவின் சகோதர நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் 2019-ம் ஆண்டில் இருந்து சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது. ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டபோது, சென்னை- யாழ்ப்பாணம் இடையே விமான சேவை நிறுத்தப்பட்டது.
கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் நாடு முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்டன. அதன்படி சென்னை- யாழ்ப்பாணம் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவையை 2022-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதியில் இருந்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வாரத்தில் 4 நாட்கள் என மீண்டும் தொடங்கியது. திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் இந்த விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமான சேவைக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் பெருமளவு வரவேற்பு இருக்கிறது. சுற்றுலா பயணிகளும் இந்த விமானத்தில் அதிக அளவில் யாழ்ப்பாணம் சென்று வருகின்றனர். இதனால் யாழ்ப்பாணம் விமான சேவையை தினசரி விமானமாக சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16-ந்தேதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும். பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தினசரி விமான சேவையாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் இலங்கை மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
- விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனம்பாக்கம்:
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. போதிய பயணிகள் இல்லாமல் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் 2 விமானங்களும், கடப்பா செல்லும் ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் மதுரையில் இருந்து சென்னை வரவேண்டிய 2 விமானங்களும், கடப்பாவில் இருந்து வரவேண்டிய ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மரைன் டிரைவ் பகுதியில் தடுப்பு சுவரை தாண்டி அலைகள் சீறி பாய்ந்தன.
- தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் படையினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மும்பை:
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது.
இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது.
பிபோர்ஜோய் புயல் மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும், வருகிற 15-ந் தேதி பிற்பகல் குஜராத்தின் மாண்ட்வி-பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஸ்டிரா கடல் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக மும்பையில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரைன் டிரைவ் பகுதியில் தடுப்பு சுவரை தாண்டி அலைகள் சீறி பாய்ந்தன.
மேலும் அங்குள்ள தாதர், தாராவி, சி.எஸ்.எம்.டி. உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது.
பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மும்பையில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. விமானங்கள் வருவதும், புறப்பட்டுச் செல்வதும் 40 நிமிடம் தாமதமானது.
பிபோர்ஜோய் புயலால் குஜராத் மாநிலத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சவுராஸ்டிரா, கட்ச் ஆகிய கடற்கரை மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கட்ச், ஜாம்நகர், மோர்பி, கிர்சோம்நாத், போர்பந்தர், தேவபூமி, துவாரகா ஆகிய 6 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இதனால் இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் படையினரும் தயார் நிலையில் 6 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- விமானங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
- அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலையில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட மெதுவாகவே இருந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக, விமானங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
பயணிகள் முன்பதிவு செய்துள்ள விமானங்களுக்கான பயண நேரம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டு அறிந்துகொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
டெல்லியில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 30ம் தேதிவரை வெப்ப அலை இருக்காது என கணித்துள்ளது.
- 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 22.18 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் சேவை அதிகரித்துள்ளது.
- கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு சேவை விமானங்கள் 0.47 சதவீத அளவுக்கே ரத்து செய்யப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:
உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் அளித்துள்ள தரவுகளின்படி, நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 5 கோடியே 4 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 42.85 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டில் 3 கோடியே 53 லட்சம் பேர் பயணித்து இருந்தனர்.
மேலும் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 22.18 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் சேவை அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு சேவை விமானங்கள் 0.47 சதவீத அளவுக்கே ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதைப்போல பயணிகளின் புகார் எண்ணிக்கையும் 10 ஆயிரம் பயணிகளுக்கு 0.28 பயணிகள் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்