search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood prevention work"

    • சென்னை மண்டல பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
    • ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் இன்று (30.07.2024) சென்னை தலைமை செயலகத்தில், சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 13 மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, சென்னை மண்டல பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், ரூ.700 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வெள்ள தடுப்பு திட்டங்கள் மற்றும் ரூ.35 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய தூர்வாரும் பணிகள் மற்றும் RRR திட்டத்தின் கீழ் (செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல்) ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருமழைக்கு முன்பு விரைந்து முடிக்க நீர்வளத்துறை அமைச்சரால் உத்திரவிடப்பட்டது.

    இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், கூடுதல் செயலாளர் எஸ்.மலர்விழி, மன்மதன், முதன்மை தலைமைப் பொறியாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது). கண்காணிப்பு பொறியாளர்கள், மற்றும் அனைத்து நீர்வளத்துறை செயற்பொறியாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள தடுப்பு பணி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதற்கு டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள நீர் வடிகால் கட்டுமான பணிகளுக்காகவும் மற்றும் சாலைகள் அமைப்பதற்காகவும் கோரப்பட்ட ரூபாய் 740 கோடி மதிப்பிலான டெண்டரில், மிகப்பெரிய முறைகேட்டில் மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் கூட்டாக ஈடுபட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

    மழைக்காலங்களில் புயல் வெள்ள பாதிப்புகளால் மக்கள் தங்களது உடைமைகளை இழப்பதும், பல நேரங்களில் உயிர் சேதங்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

    இதனை தடுக்கும் பொருட்டு, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதும், நீர் நிலைகளை முறையாக பராமரிப்பதும், விரிவுபடுத்துவதும் அவசியமான ஒன்று. அவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தோடு ஒன்றிய பணிகளில் முறைகேடுகள் நடைபெற அனுமதிக்கும் அரசானது, மக்களின் நலனை சிறிதும் சிந்திக்காத மக்கள் விரோத அரசு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.

    திரும்பும் திசையெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு, காணும் காட்சியெல்லாம் நிர்வாக அவலம், இதுதான் பழனிசாமி ஆட்சியின் சாதனை. ஊழல் புகார் மயமான ஆட்சியில் மக்கள் நலன் புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என் பதைத்தான் இச்செய்தி காட்டுகிறது.

    மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் உள்ளாட்சித்துறையில் பூதாகரமாக எழுந்து வரும் தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் நடைபெறுவதைத்தான் எடுத்துரைக்கிறது. ஊழல் குற்றசாட்டுக்கு தொடர்ந்து உள்ளாகிவரும் உள்ளாட்சித்துறைக்கும், அதனை தடுக்கத் தவறும் பழனிசாமி அரசுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran
    ×