என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ford endeavour
நீங்கள் தேடியது "Ford Endeavour"
2019 ஃபோர்டு எண்டேவர் கார் புத்தம் புதிய இன்டீரியர் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களுடன் உருவாகி வருகிறது. #FordEndeavour #Car
அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் தனது பிரபல எண்டேவர் எஸ்.யு.வி. மாடலில் புதிய மேம்படுத்தப்பட்ட மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடல் இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதனால் இந்தாண்டில் மேம்படுத்தப்பட்ட ரகத்தை அறிமுகம் செய்ய ஃபோர்டு முடிவு செய்துள்ளது. புதிய மாடலில் முன்புற பம்பர், கிரில், முகப்பு விளக்கு உள்ளிட்ட அனைத்துமே மாற்றம் செய்யப்பட்டு கம்பீரமான தோற்றத்துடன் உருவாகி வருவதாக தெரிகிறது. இத்துடன் டயமண்ட் கட் பினிஷுடன் 20 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.
உள்புற இன்டீரியரிலும் மாறுதல்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இன்ஃபோடெயின்மென்ட் பகுதியில் இப்போது கூடுதலாக ஃபோர்டு சிங் 3 இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. இது ஆப்பிள் கார் பிளே சேவைக்கு இணையான ஒன்றாகும். இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியும் வழங்கப்படுகிறது.
பாதசாரிகள் திடீரென காரை கடந்தால் அதை உணர்ந்து உடனடியாக பிரேக் தானாக செயல்படும் தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்படுகிறது. முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டிருப்பதை போன்று 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் என்ஜினுடன் இவை வெளிவந்துள்ளன.
இவை பி.எஸ். VI (பாரத் புகை விதி 6) இணையாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த என்ஜின்கள் முறையே 180 பி.ஹெச்.பி. பவர் 420 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 213 பி.ஹெச்.பி. மற்றும் 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய ஃபோர்டு எண்டேவர் கார் இந்தியாவில் மஹிந்திரா அல்டுராஸ், டொயோடா பார்ச்சூனர், மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட இசுஸூ எம்.யு.எக்ஸ். போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.#FordEndeavour #Car

×

X