search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former bihar cm home robbery jewellery stolen"

    பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி மண்டல் வீட்டை நேற்றிரவு சூறையாடிய கொள்ளையர்கள் 5 லட்சம் நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை அள்ளிச் சென்றனர். #Rs5lakhjewelleriesstolen #BPMandal #BiharformerCMhouse
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியாக கடந்த 1968-ம் ஆண்டு ஒருமாத காலம் பதவி வகித்தவர் பி.பி. மண்டல். அரசு வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு வழங்க பரிந்துரைகளை அளித்த ‘மண்டல் கமிஷன்’ இவரது தலைமையில் தான் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    பி.பி.மண்டல் கடந்த 1982-ம் ஆண்டு காலமான பின்னர், மாதேபுரா மாவட்டம், மாதேபுரா நகரில் உள்ள பூர்விக வீட்டில் இவரது மகனும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மஹிந்திர குமார் மண்டல் தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில், மாதேபுரா மாவட்டத்தில் தங்களது மூதாதையர் கிராமமான முர்ஹோ கிராமத்துக்கு மஹிந்திர குமார் தனது குடும்பத்தாருடன் சென்றிருந்தார். நேற்றிரவு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கிருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை அள்ளிச் சென்றனர்.

    மேலும், லேப்டாப், கைபேசிகள், துணிமணி, சமையல் பாத்திரம் எல்லாவற்றையும் மூட்டைகட்டி எடுத்து சென்றுள்ளனர். இன்று வீடு திரும்பிய மஹிந்திர குமார், முன்னாள் முதல் மந்திரியின் வீடு கொள்ளையர்களால் சூறையாடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுதொடர்பாக, அருகாமையில் உள்ள சடார் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மோப்பநாய் உதவியுடன் விசாரணையில் இறங்கிய போலீசார் 3 பேரை கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் 80 சதவீதத்தை பறிமுதல் செய்துள்ளனர்.  இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். #Rs5lakhjewelleriesstolen #BPMandal #BiharformerCMhouse
    ×