என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » founder julian assange
நீங்கள் தேடியது "founder Julian Assange"
ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர். #Wikileaks #JulianAssange
லண்டன்:
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர்.
பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அவர்களிடம் சிக்காமல் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.
இதற்கிடையே, ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது.
இந்நிலையில், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர்.
ஈக்வடார் அரசு அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை வாபஸ்பெற்ற நிலையில் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து வெஸ்ட் மிண்ட்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
2012ம் ஆண்டு லண்டனில் தஞ்சம் அடைந்த ஜூலியன் அசாஞ்சேவை 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Wikileaks #JulianAssange
×

X