search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FRAURU"

    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவேயை 2-0 என வீழ்த்தி பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து இன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் மோதின. உருகுவே அணியில் காயம் காரணமாக கவானி களம் இறங்கவில்லை. பிரான்ஸ் அணி முழு பலத்துடன் களம் இறங்கியது.

    தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தின. ஆனால் உருகுவே அணியின் டிபென்ஸ்-ஆல் பிரான்ஸ் கோல் அடிக்க திணறின. இதற்கிடையே உருகுவே அணியும் கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்மான் பந்தை உதைக்க வரானே அதை தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் உருகுவே அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகுவே, முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

    2-வது பாதி நேரத்திலும் பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் நீடித்தது. 61-வது நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கிரிஸ்மான் பந்தை புயல் வேகத்தில் அடித்தார். அதை உருகுவே கோல்கீப்பர் தடுத்து விட முயன்றார். அப்போது பந்து அவரது கையில் பட்டு கோல் கம்பத்திற்குள் நுழைந்தது. இதனால் பிரான்ஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது.



    0-2 என பின்தங்கியதால் உருகுவே அணி கோல் அடிக்கும் முனைப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பலமுறை பிரான்ஸ் கோல் எல்லைக்குள் பந்தை கடத்திச் சென்றது. ஆனால் அவற்றை வெற்றிகரமான வகையில் கோலாக மாற்ற முடியவில்லை. 90 நிமிடம் முடிந்து காயம் மற்றும் ஆட்டம் தடையை கணக்கிட்டு கூடுதலா 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. என்றாலும் உருகுவே அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRAURU #URUFRA #Varane #GRIEZMANN
    பிரான்ஸ் அணியின் கேப்டனும், கோல் கீப்பரும் ஆன லோரிஸ், உருகுவே அணிக்கு எளிதான வாய்ப்புகளை கொடுத்து விடக்கூடாது என்கிறார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதல் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணிகள் என்பதால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. பிரான்ஸ் அணியை விட உருகுவே அணியின் டிபென்ஸ் சற்று கூடுதல் பலத்தோடு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால், நாங்களும் சிறந்த வகையில் டிபென்ஸ் செய்வோம் என்று பிரான்ஸ் அணியின் கேப்டனும், கோல்கீப்பரும் ஆன ஹூகோ லோரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரான்ஸ் வீரர்களுக்கு எச்சரிகையும் விடுத்துள்ளார்.



    உருகுவே போட்டி குறித்து லோரிஸ் கூறுகையில் ‘‘உருகுவே அணிக்கு நாங்கள் மலிவான கார்னர் அல்லது ப்ரீ ஹிக் வாய்ப்பை ஏற்படுத்துக் கொடுத்து விடக்கூடாது. முக்கியமாக பெனால்டி பாக்ஸிற்குள் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால், உருகுவே அணி வீரர்கள் அபாயகரமானவர்கள்.

    நாங்கள் டிபென்ஸில் சிறப்பாக செயல்பட வேண்டும். இரு அணிகளுக்கு இடையில் சிறிய இடைவெளி மட்டுமே இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அர்ஜென்டினாவிற்கு எதிராக நாங்கள் விளையாடியது போன்று கடினமான போட்டியாக இது இருக்கும்’’ என்றார்.
    ×