என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "freedom"
- சசிகுமார் `ஃப்ரீடம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சசிகுமார் நடிப்பில் அண்மையில் நந்தன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திரைப்படம் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ஆகாயம் அம்புட்டயும் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை சினேகன் வரிகளில் பிரதீப் குமார் பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார்.
சசிகுமார் நடிப்பில் அண்மையில் நந்தன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
- படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சசிகுமார் நடிப்பில் அண்மையில் நந்தன் திரைப்படம் வெளியானதி. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சசிகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெலியிட்டுள்ளது. இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Team #Freedom Wishing happy birthday to our Hero @SasikumarDir Sir Directed by @Sathyasivadir Produced by @vijayganapathys @PandiyanParasu @jose_lijomol #CUdhayakumar @DirectorBose @nsuthay @MalavikaBJP @Arunbharathi_A #NBSrikanth @KavingarSnekan @trendmusicsouth @teamaimpr… pic.twitter.com/5qRCrFRKO8
— Ghibran Vaibodha (@GhibranVaibodha) September 28, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டடிருந்தார்.
- தன்னை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவமதித்ததாக மெலோனி தொடர்ந்த வழக்கில் ராபர்ட்டோ சேவியானோ என்ற மற்றொரு பத்திரிகையாளருக்கு 1000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இத்தாலியில் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் கோர்டீஸே[Cortese] கடந்த 2021 இல் தனது எக்ஸ் [ட்விட்டர்] பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டடிருந்தார்.
'நீ என்னை பயமுறுத்த முடியாது,மெலோனி.. நீ வெறும் 1.2 மீட்டர் [4 அடி] உயரம்தான். என்னால் உன்னை பார்க்க கூட முடியவில்லை' என்றும் கோர்ட்டிஸே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். எக்ஸ் தளத்தில் மட்டுமின்றி பல்வேறு சமூக ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்து தொடர்பாக இருவருக்குமிடையில் சமூக வலைதளத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மெலோனி கோர்டீஸே மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த மிலான் நீதிமன்றம் தற்போது கோர்டீஸே -கு 5000யூரோக்கள் [ ரூ.4.5 லட்சம்] அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2021 இல் மெலோனியின் தீவிர இடதுசாரி சகோதரர்கள் கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதன்பின்னர் 2022 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அக்கட்சி சார்பில் மெலோனி இத்தாலி பிரதமர் ஆனார். தற்போது இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள கோர்டீஸே,'கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு எதிராக தீவிர பிரச்னையை இத்தாலி அரசு கொண்டுள்ளது. இது சுயாதீன பத்திரிகையாளர்களுக்கு கடுமையான காலம். வரும் காலத்தில் சிறந்த நாட்களுக்காக நாம் காத்திருப்போம். நாங்கள் மனம் தளரப் போவதில்லை' என்று தெரிவித்துள்ளார்.
Italy's government has a serious problem with freedom of expression and journalistic dissent. This country seems to get closer to Orbán's Hungary: these are bad times for independent Journalists and opinion leaders. Let's hope for better days ahead. We won't give up!@Reuters https://t.co/sWojOlMJz1
— Giulia Cortese (@GiuliaCortese1) July 18, 2024
முன்னதாக ராபர்ட்டோ சேவியானோ என்ற பத்திரிகையாளர் தன்னை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவமதித்ததாக மெலோனி தொடர்ந்த வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரோம் நீதிமன்றம் ராபர்ட்டோவுக்கு 1000 யூரோக்கள் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
- BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- நாடு பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 இல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பல்கலைக்கழகம் மட்டுமின்றி தலைநகர் டாக்காவிலும் மற்றைய பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று நேற்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்ட்டத்தில் மேலும் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை நடந்த போராட்டங்களில் ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர்.
தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டவர எல்லை பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் வசிக்கும் இந்தியர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்துக்களும் செய்திகளும் வேகமாக உடனுக்குடன் அனைவருக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.
- இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரம், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் இணையதள முடக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் உள்ள பகுதிகளில் திடீர் கிளர்ச்சிகள், கலவரங்கள்,வன்முறைகள் ஏற்பட்டால் அது மேலும் வலுவடையாமல் இருக்கவும், மக்களுக்கு மத்தியில் அதைப் பற்றிய செய்திகள் பரவாமல் இருக்கவும் அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்துக்களும் செய்திகளும் வேகமாக உடனுக்குடன் அனைவருக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.
அவசர நிலை ஏற்படும் சமயங்களில் இணையதளம் முடக்கப்படுவதே அரசுகளின் முதல் நடவைடிக்கையாக இருக்கும். இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரம், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் இணையதள முடக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் சர்வதேச அளவில் நடந்த ஆய்வின் படி தொடர்ந்து 6 வது வருடமாக 2023 ஆம் ஆண்டு இணையதள முடக்கம் அதிகம் ஏற்பட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அறிக்கையின்படி, இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 116 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
சுமார் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற மணிப்பூர் இனக் கலவரத்தின் போது அதிகப்படியாக 47 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து ஜம்மு காஸ்மிரில் 17 முறையும், பிகாரில் 12 முறையும், ஹரியானாவில் 11 முறையும், மேற்கு வங்கத்தில் 6 முறையும், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் 5 முறையும் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
உலகளவில் இந்த பட்டியலில் ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் 37 முறை இணைய முடக்கத்துடன் 2 ஆவது இடத்தில உள்ளது. அதைத்தொடர்ந்து, ஈரானில் 34 முறையும் , பாலஸ்தீனத்தில் 16 முறையும், உக்ரைனில் 8 முறையும், பாகிஸ்தானில் 7 முறையும் இணையத்தளம் முடக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
.
- தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
- சிறு சிறு தவறுகளை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை.
குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயலாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களை குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்ற குழந்தைகளும் வளர வேண்டும் என்று அவசியமில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.
பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களது குழந்தைகளின் மீது அதிகமாகவே உள்ளது.
தான் நினைக்கும் படி தான் தன் குழந்தை நடக்க வேண்டும். தான் சொல்வதை தான் குழந்தை கேட்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் குழந்தைகள் மீது திணிக்க கூடாது. பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உறவு மிகவும் தனித்துவமானது என்றாலும்கூட அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்கள் வளரும் சூழல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது தவறு அல்ல. குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை அவர்களிடம் எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பல நேரங்களில் குழந்தைகள் செய்யும் தவறுக்காக பெற்றோர்கள் அவர்களை கண்டிப்பார்கள்.
கண்டிப்பு தவறல்ல கண்டிக்கும் முறை தான் முக்கியம். உங்களின் கண்டிப்பு வரும் காலங்களில் உங்கள் குழந்தைக்கு மோசமான சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிமுறைகளை பார்க்கலாம் மிகவும் கண்டிப்பான பெற்றோர்கள் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள். பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையில் இருந்து தப்பிக்க பொய் சொல்பவர்களாக மாற வாய்ப்புள்ளது சில குழந்தைகள் ஆக்ரோஷமாக கூட மாறுவதுண்டு.
இந்த பழக்கவழக்கங்களால் நாளடைவில் குழந்தைகள் பெரியவர்களை மதிக்காமல் நடப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பல நேரங்களில் உங்கள் குழந்தை பெற்றோரை போலவே தன்னுடன் பயிலும் சக மாணவர்களிடமும் அதிகார தனத்துடன் நடந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு.
தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும். நீ இதை செய்தால் உனக்கு இது கிடைக்கும், நீ அதை செய்தால் உனக்கு அது கிடைக்கும் என்று குழந்தைகளுக்கான கோல்களை ஏற்பாடு செய்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். சில நேரம் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட டாஸ்க்குகளை அவர்கள் முடிக்கவில்லை என்றால் அவர்களை குறைசொல்லாமல், அடிக்காமல் அதற்கான மாற்று வழியை சிந்திக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளின் மீது மதிப்பும், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இதனால் பெற்றோர்கள்-குழந்தைகள் உறவில் நல்ல உறவு ஏற்படும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் கல்வி மற்றும் இதர விஷயங்களிலும் குழந்தைகளுக்கு சப்போர்ட்டாக, துணையாக இருக்க வேண்டும்.
ஒரு நண்பனை போல் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் முன் கடுமையான வார்த்தைகளையோ அல்லது தகாத வார்த்தைகளையோ பேசுதல், நடந்து கொள்வது கூடாது. குழந்தைகளுக்கு தேவையான அளவு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு குழந்தைகளுக்கு சில வேலைகளை கொடுத்து அவர்கள் அதை செய்வதற்கும், செய்யும் வேலைகளில் அவர்களை துணைக்கு அழைத்து கற்றுக் கொடுப்பதற்கும் பயன்படுத்தலாம்.
அவர்களே அவர்களுயைய வேலைகள செய்வதற்கு கற்றுக் கொடுப்பதற்கும், அதனை குறையேதும் சொல்லாமலும், நன்றாக செய்தால் பாராட்டுவதற்கும் தயங்க கூடாது. ஒவ்வொரு செயலின்போதும் பாராட்டுவதும், பரிசு பொருட்கள் அளிப்பதும் அவர்களை இன்னும் ஊக்குவிப்பதற்கு உதவும்.
சில பெற்றோர்கள் குழந்தைக்கு அதிகமான சுதந்திரத்தை அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது அவர்களை கண்டு கொள்வதும் இல்லை. இதுபோன்ற நிலையில் குழந்தைகள் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பன போன்ற அடிப்படை விஷயங்களையும் கண்டுகொள்வதில்லை.
இதனால் குழந்தைகள் வளர்ந்து போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை சின்னாபின்னமாக மாற்றிக் கொள்வதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக அமைகின்றனர். (உதாரணத்திற்கு அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் அல்லது சொந்த தொழில் செய்பவர்கள், வெளியூரில் இருப்பவர்கள், தாத்தா, பாட்டி வீட்டில் வளரும் குழந்தைகள்) குழந்தைகளின் செயல்பாட்டில் இன்னும் முயற்சி எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருப்பது, அறிவுரை கூறிக்கொண்டிருப்பது, குழந்தைகளை தண்டிப்பது, குழந்தைகளிடம் அன்பான முகத்தை காட்டாமல் எப்பொழுதும் கோபத்துடனும் எரிச்சலுடன் நடந்துகொள்வது, குழந்தை கேட்கும் கேள்விகளை மதிக்காமல் இருப்பது, தன் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவது போன்ற செயல்களை குழந்தைகளிடம் வெளிப்படுத்தக்கூடாது.
இதனால் குழந்தைகள் வருங்காலத்தில் ஆளுமை இல்லாத நபர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்ற பாடல் வரிகளை நாம் கேட்டிருப்போம் அதற்கேற்ப குழந்தைகளை நாம் நல்லமுறையில் வளர்க்க வேண்டும். முடிந்த அளவு உங்கள் குழந்தையை சரியான வழியில் வருங்காலத்தில் ஆளுமை மிக்க நபர்களாக மாற்ற இப்போதே முயற்சி செய்யுங்கள்.
அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தைகளை கூட்டி சென்று ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம்.
சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான விதத்தில் இருக்கும், அதேசமயம் வேறு சில செயல்களில் சிறந்த குழந்தையாகவும், நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். அந்த மாதிரி குழந்தைகளை அவர்களது விருப்பத்தை பொறுத்து அதில் சிறந்த பயிற்சி கொடுக்க வேண்டும்.
- பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி கிண்டல்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதிலிருந்து ராகிங் என்பது உருவாகிறது.
திருப்பூர் :
திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு "பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு" என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர். ரேச்சல் நான்சி பிலிப் வரவேற்புரை வழங்கினார்.
இதில் சட்ட உதவி மைய வக்கீல் தி பிரகாஷ் பேசியதாவது:, சிறு விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி கிண்டல்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதிலிருந்து ராகிங் என்பது உருவாகிறது. அதன் உச்ச கட்டம் தான் நாவரசு கொலை வழக்கு .எனவே எந்த ஒரு செயலும் அடுத்தவர் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அந்தோணி ஷர்லின், பெண்களுக்கு அவசியமான மற்றும் பாதுகாப்பான சட்டங்கள் பற்றி விளக்கினார். ராஜசேகரன், சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வுடன் இருந்து தற்காத்து கொள்வது பற்றியும் விளக்கினார். தலைமையுரை ஏற்று பேசிய திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மேகலா மைதிலி , எந்த ஒரு செயலையும் செய்யும் முன்பு அது நம்மையும், நம்மை சார்ந்துள்ள குடும்பத்தாரையும் எண்ணி பார்த்து செயலாற்றிட வேண்டும். நம்மை மீறி எந்த ஒரு கெடுதலான விஷயமும் நடக்காதவாறு விழிப்புணர்வுடனும் கவனமுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் மாணவி ஷிபானா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பேராசிரியர் ராதாமணி ஆகியோர் செய்திருந்தனர். இதில் 70க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகர், 6-வது தெருவில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அருகே மழைநீர் செல்ல சிறிய அளவிலான கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
நேற்று காலை அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு வழக்கமாக பசும்பால் கொடுக்க வரும் பால்காரர் சுப்பையா என்பவர் வந்தார். அப்போது அந்த மழைநீர் கால்வாயை சுற்றி ஏராளமான பூனைகள் நின்று கொண்டிருப்பதை கண்டார்.
மேலும் பச்சிளம் குழந்தையின் அழுகுரலும் கேட்டதால் சந்தேகம் அடைந்த அவர், பூனைகளை விரட்டி விட்டு பார்த்தபோது, மழைநீர் கால்வாயின் உள்ளே பச்சிளம் குழந்தை தனது இரண்டு கால்களை உதைத்தபடி உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே சுப்பையா, கூச்சலிட்டார். அவரது சத்தம்கேட்டு அந்த குடியிருப்பில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் கீதா என்ற பெண், தரையில் படுத்துக்கொண்டு மழைநீர் கால்வாய்க்குள் கையைவிட்டு இரண்டு கால்களையும் பிடித்து நைசாக குழந்தையை உயிருடன் வெளியே மீட்டெடுத்தார்.
அதில், பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை என்பதும், அதன் தொப்புள் கொடிகூட அறுக்கப்படாமல் குழந்தையின் கழுத்தை சுற்றியபடி இருந்தது. கழுத்தில் சுற்றி இருந்த தொப்புள் கொடியை அகற்றி, ஒரு கிளிப் போட்டனர்.
மழைநீர் கால்வாய்க்குள் கிடந்ததால் சேறும், சகதியுமாக இருந்த குழந்தையை அந்த பகுதி பெண்கள் சுடுநீரில் குளிப்பாட்டி சுத்தப்படுத்தி, புதிய துணி அணிவித்தனர். பசியால் குழந்தை தொடர்ந்து கதறி அழுதபடியே இருந்தது.
அந்த பகுதியில் இருந்த குழந்தை பெற்ற பெண்கள், கருணை உள்ளத்தோடு அந்த குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கினார். அந்த தாய்ப்பால் முழுவதையும் சேகரித்து அந்த குழந்தைக்கு வழங்கி அதன் பசியை போக்கினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வளசரவாக்கம் போலீசார், அந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு போரூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் குழந்தையின் உடல் நலன் கருதி சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், குழந்தை நலமாக உள்ளதாக தெரிவித்தனர். அந்த செய்தியை கேட்டு அந்த குழந்தையை கால்வாயில் இருந்து மீட்டெடுத்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டு உள்ளதால் அந்த குழந்தைக்கு ‘சுதந்திரம்’ என பெயர் சூட்டினார்கள். அந்த குழந்தை வீசப்பட்ட பகுதியில் ஒரு கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால் அங்கு வேன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால், பச்சிளம் குழந்தையை மழைநீர் கால்வாயில் வீசி சென்ற நபரின் உருவம் அதில் பதிவாகவில்லை.
நேற்று காலைதான் அந்த குழந்தையை அந்த மழைநீர் கால்வாயில் வீசி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்ததால், மழைநீருடன் குழந்தை அடித்துச்செல்லப்பட்டு விடும் என்று வீசி உள்ளனர். மேலும் குழந்தையின் கழுத்தை தொப்புள் கொடியால் நெரித்ததற்கான தடயமும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மழைநீர் கால்வாயில் அந்த குழந்தையை வீசியது யார்?, அந்த குழந்தையின் பெற்றோர் யார்?, தவறான உறவால் பிறந்த குழந்தை என்பதால் இவ்வாறு மழைநீர் கால்வாயில் வீசினார்களா? என்பது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த கால்வாயில் வலைகள் வைத்து அடைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்