search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "French Open 2022"

    36 வயதான நடால் ஒட்டுமொத்தமாக 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று (ஆஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 13, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்தில் இருக்கிறார்.
    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறை வென்றவரும், 5-வது வரிசையில் உள்ளவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) - மூன்றாம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினார்கள்.

    முதல் செட்டை நடால் 7-6 (10-8) என்ற கணக்கில் போராடி வென்றார். 2-வது செட் 6-6 என்ற சமநிலை இருந்த போது ஸ்வரேவ் காயத்தால் விலகினார். இதனால் நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    அவர் 30-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

    2-வது அரை இறுதியில் 8-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே)-2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான சிலிச் (குரோஷியா) மோதினார்கள்.

    இதில் கேஸ்பர்ரூட் 3-6, 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 20-வது வரிசையில் உள்ள சிலிச்சை தோற்கடித்து முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    23 வயதான கேஸ்பர் ரூட் இதற்கு முன்பு கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் 4-வது சுற்று வரை நுழைந்ததே சிறந்ததாக இருந்தது.

    நார்வேயை சேர்ந்த ஒருவர் கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். அந்த பெருமையை கேஸ்பர் ரூட் பெற்றார்.

    இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ரபெல் நடால்-கேஸ்பர் ரூட் மோதுகிறார்கள்.

    களிமண் தரையான பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாடுவதில் நடால் வல்லவர். அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தார். அவர் பிரெஞ்சு ஓபன் போட்டியில் 2009-ல் 4-வது சுற்றிலும், 2015-ல் கால் இறுதியிலும், 2016-ல் 3-வது ரவுண்டிலும், 2021-ல் அரை இறுதியிலும் தோற்று இருந்தார்.

    36 வயதான நடால் ஒட்டுமொத்தமாக 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று (ஆஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 13, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்தில் இருக்கிறார்.

    அவருக்கு அடுத்தபடியாக பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச் (செர்பியா) தலா 20 கிராண்ட்சிலாம் பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர். நடால் ஒட்டுமொத்தமாக 22-வது பட்டத்தையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 14-வது முறையாகவும் நாளை வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

    இந்திய நேரப்படி இன்று 6.30 மணிக்கு நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து)-பதினெட்டாம் வரிசையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    நடப்பு சாம்பியன் ஸ்வியா டெக் 2-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். 18 வயதான கோகோ முதல் கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக காத்திருக்கிறார். 
    • ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
    • 14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் நடால்

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    இதன்மூலம் 14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன், இது அவருக்கு 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

    பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் மிகச்சிறந்த வீரர் கேஸ்பருடன் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாகவும், அவரது சாதனைகளுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் நடால் குறிப்பிட்டார்.

    ×