என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » frogs
நீங்கள் தேடியது "frogs"
மத்திய பிரதேச மாநிலத்தில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காக 2 தவளைகளுக்கு மந்திரி ஒருவர் திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
போபால்:
மழை பெய்ய வேண்டும் என்று கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. தவளைகளுக்கு திருமணம் என்ற வினோத செய்திகளும் அவ்வப்போது வெளியாகும். மழையின் கடவுளாக வணங்கப்படும் வருண பகவானின் மனதை குளிர்விப்பதற்காக இதுபோன்ற சடங்குகள் செய்யப்படுகிறது.
இதுகுறித்து பா.ஜ.க மந்திரி லலிதா யாதவ் பேசுகையில், “பண்டல்காண்ட் பிராந்தியம் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளது, விவசாயிகளின் வளர்ச்சிக்காக மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம்,” என கூறியுள்ளார்.
திருமண சடங்கு முடிவடைந்தவுடன் தவளைகள் வனப்பகுதியில் விடப்பட்டன. மேலும் 2 தவளைகளுக்கு நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் உள்ளூர் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலத்தில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காக 2 தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்க பா.ஜ.க மந்திரி லலிதா யாதவ் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை சாத்பூர் கோவிலில் செய்துள்ளார். திட்டமிட்டபடி, 2 தவளைகளுக்கு மந்திரி தலைமையில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து பா.ஜ.க மந்திரி லலிதா யாதவ் பேசுகையில், “பண்டல்காண்ட் பிராந்தியம் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளது, விவசாயிகளின் வளர்ச்சிக்காக மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம்,” என கூறியுள்ளார்.
திருமண சடங்கு முடிவடைந்தவுடன் தவளைகள் வனப்பகுதியில் விடப்பட்டன. மேலும் 2 தவளைகளுக்கு நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் உள்ளூர் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
×

X