search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Full Moon"

    • அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • மவுன சித்தர் பீடத்தில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    வேதாரண்யம்:

    வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    வனதுர்க்கை அம்மன் கோவில்

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்க ளால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    மாணிக்கவாசகர் மடம்

    இதேபோல், வேதாரண்யம் நகரின் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகருக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்கள் பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர்.

    முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகர்த்தா, யாழ்ப்பாணம் வரணி ஆதீனம், செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மவுன சித்தர் பீடம் இதேபோல், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள மவுன சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் நடைபெறும். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் மகானுக்கு பிடித்த பலகாரங்கள், பொங்கல் ஆகியவை படையல் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து, பக்தர்கள் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினார்கள். மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    • அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார்.
    • இரவு மகா மண்டபத்தில் அபிராமி பட்டர் சிலை வைக்கப்பட்டு அபிராமி அம்மன் வெள்ளி விமானத்தில் எழுந்தருளினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு தை அமாவாசை தினத்தன்று ஸ்ரீஅமிராமி அம்மனின் பக்தரான அபிராமிபட்டர் வழிபட அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்த சரபோஜி மன்னர் இன்று என்ன திதி என்று கேட்டார்.

    அபிராமி பட்டர் அபிராமி அம்மனை நினைத்து தியானத்தில் இருந்த நிலையில், பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறினார். இன்று பௌர்ணமி வரவில்லை என்றால் மரணதண்டனை விதிக்கப்படும் என்று மன்னர் கூறினார்.

    இதனையடுத்து அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார்.

    100 கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது 79வது பாடலான "விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு, எமக்கு அவ்வழி கிடக்க, பழிக்கே சுழன்று, வெம் பாவங்களேசெய்து, பாழ் நரகக் குழிக்கே, அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே? " என்ற பாடலை பாடினார்.

    அப்பொது அம்மன் நேரில் தோன்றி தனது தோட்டை வீசி எறிந்து முழுநிலவை தோன்றச்செய்து அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக ஆலய வரலாறு கூறுகின்றது.

    அதன்படி தை அமாவாசையான நேற்று அபிராமி பட்டரின் உயிரை காப்பாற்றுவதற்காக அபிராமி அம்மன் நேரில் தோன்றி தை அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய நிகழ்வு நடத்தப்பட்டது. இரவு மகா மண்டபத்தில் அபிராமி பட்டர் சிலை வைக்கப்பட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் வெள்ளி விமானத்தில் எழுந்தருளினார்.

    தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஓதுவார்கள் அபிராமி அந்தாதியின் பாடல்களை பாடினர்.

    ஓவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று கயிறு அறுக்கப்பட்டது. 79 பாடலின் முடிவில் நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு 100 பாடல்கள் பாடி நிறைவு செய்யப்பட்டது.

    • எல். கே. சி. நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு பெளர்ணமி முன்னிட்டு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிரம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்டஅனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை எல்.கே.சி., நகர் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு அம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பா ளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா தனை காட்டப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு மகாமாரியம்மன், காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள பொன்னாச்சி அம்மன், பரமத்தி வேலூர் பகவதி அம்மன், செல்லாண்டி அம்மன் ,பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், கு.அய்யம்பாளையம் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன், வட கரையாத்தூர் மாரியம்மன், பரமத்தி அங்காள பர மேஸ்வரி அம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்க ளில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • இந்த கிரிவலத்தில் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
    • சிவத்திரு, இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டு குழு டிரஸ்ட் சார்பில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று மாலை வல்லப கணபதி சன்னதியில் இருந்து தொடங்கியது.

    இந்த கிரிவலத்தில் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசி வழங்கினார். சிவத்திரு, இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், டிரஸ்டிஸ்கள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன், கமிட்டி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்கோவி.கல்யாணகுமார், ஜெமினி, வரதராஜன், ஆசிரியர்கள் ஜெயராமன், கணேசன், சிவக்குமார், சுவாமிநாதன், ராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சென்னை ஆஸ்கார் மீடியாஸ் மேனேஜிங் டைரக்டர் சாய்மோகன் பாலாஜி, மீனாட்சி பாலாஜி மற்றும் குடும்பத்தினர் உணவு வழங்கினர்.

    ×