search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "G Square Company"

    • கடந்த 6 நாட்களாக தொடர்ச்சியாக வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
    • சென்னையில் 22 இடங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வந்தது.

    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமானவரி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரி துறை அதிகாரிகள் கடந்த 24 -ந்தேதி முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்திவந்தனர்.

    சென்னையில் 22 இடங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வந்தது. இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 6 நாட்களாக தொடர்ச்சியாக வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை இந்த சோதனை அனைத்தும் நிறைவு பெற்றது. நீலாங்கரை பகுதியில் இன்று காலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 6 நாட்களாக நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றிய விரிவான அறிக்கையை விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    • சோதனையில் சுமார் 300 அதிகாரிகள் ஈடுபட்டனர்.
    • ஆடிட்டர் ஒரு சில நாட்களில் சென்னை வந்து வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராவார் என்று தெரிகிறது.

    சென்னை:

    சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் 70 இடங்களில் வருமான வரித்துறை நேற்று சோதனை நடத்தியது.

    இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ளது. இங்கும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் சுமார் 300 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் வரி தொடர்பான விவரங்களையும், வரவு-செலவு கணக்கு தகவல்களை பெறுவதற்கும் அந்நிறுவனத்தின் ஆடிட்டரை அழைக்க முடிவு செய்தனர். பெங்களூருவில் வசிக்கும் அவரை விசாரணைக்கு வருமாறு வருமான வரித்துறையினர் அழைத்துள்ளனர். விசாரணைக்காக ஆடிட்டர் ஒரு சில நாட்களில் சென்னை வந்து வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராவார் என்று தெரிகிறது.

    இன்று 2-வது நாளாக ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சுமார் 70-க் கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

    ×