என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » galaxy a2 core
நீங்கள் தேடியது "Galaxy A2 Core"
சாம்சங் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Samsung
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் qHD ஸ்கிரீன், எக்சைனோஸ் 7870 சிப்செட், 1 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை கோ எடிஷன் இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
- மாலி T830 GPU
- 1 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்)
- டூயல் சிம் ஸ்லாட்
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மாப்ட்போன் விலை ரூ.5,290 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Samsung
சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு கோ தளத்தில் உருவாகி இருப்பதும், இதில் 5.0 இன்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 சிப்செட் வழங்கப்படுவதும் தெரியவந்தது.
தற்தமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் என்ட்ரி-லெவல் கேல்கஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A260F என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ20 என்ற பெயரில் அழைக்கப்படலாம் என கூறப்பட்டது. ஏற்கனவே இதே ஸ்மார்ட்போன் SM-A205F என்ற மாடல் நம்பர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் qHD 540x960 பிக்சல் டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 சிப்செட், 1 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9 வழங்கப்படுகிறது. முன்புற கேமரா பற்றி எவ்வித தகவலும் இல்லை. இவற்றுடன் 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், எஃப்.எம். ரேடியோ, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
கேலக்ஸி ஏ2 கோர் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் என்பதால் இதில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் வழங்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: Samsung
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X