search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy M40"

    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.



    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டீசரை சாம்சங் தனது அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசானில் வெளியிட்டுள்ளது.

    இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா உள்ளிட்டவை புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. 



    சாம்சங் எம் சீரிசில் நான்காவது மாடலாக கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

    இத்துடன் புதிய கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் சாம்சங் தனது வலைதளம் மற்றும் அமேசானில் வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.



    ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த ஒன் யு.ஐ. வழங்கப்படலாம்.

    இதுவரை சாம்சங் வெளியிட்ட எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் வழங்கப்பட்ட நிலையில், இவற்றுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கும் பணிகளை சாம்சங் துவங்கி இருக்கிறது. 



    முதற்கட்டமாக கேலக்ஸி எம்30 மாடலுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற இரு ஸ்மார்ட்போன்களுக்கு விரைவில் இந்த அப்டேட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்தயை கேலக்ஸி எம் மாடல்களில் எக்சைனோஸ் பிராசஸர்கள் வழங்கப்பட்ட நிலையில், ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் வெளியாக இருக்கும் முதல் கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எம்40 இருக்கும். இத்துடன் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED ஸ்கிரீன், 128 ஜி.பி. மெமரி மற்றும் வைபை 802.11ac. கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 போன்ற ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இவற்றை தொடர்ந்து சாம்சங் மற்றொரு புதிய கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கேலக்ஸி எம்40 என்ற பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வழக்கமாக சாம்சங் ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் பிராசஸர் வழங்கப்படும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் அறிமுகமாகும் என தெரிகிறது.



    இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா, 128 ஜி.பி. மெமரி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் இல் சாம்சங் அறிமுகம் செய்த ஃபிளாக்‌ஷிப் அம்சங்கள் புதிய கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    அந்த வகையில் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் ஹோல்-இன்-டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ.25,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×